புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை!

புதுச்சேரியில் L & T நிர்வாகத்தின் கீழ் உள்ள தொழிற்சாலையில் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யக் கோரியும், அவர்களுக்கான சட்ட உரிமைகள் கோரியும் , AICCTU தொழிற்சங்த்தின் தலைமையில் 111 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். தற்போது சுமார் 300 தொழிலாளர்கள் வேலை மறுக்கப்பட்டு வெளியில் நிற்கிறார்கள்.

புதுச்சேரியில் ஆளும் பாஜக கூட்டணி அரசாங்கம் கார்ப்பரேட் L & T நிர்வாகத்திற்கு ஆதரவாகவும், தொழிலாளர்களுக்கு விரோதமாகவும் செயல்படுவதை கண்டித்து இன்று புதுச்சேரி ஆளுநர் மாளிகை நோக்கி AICCTU தேசிய தலைவர் மற்றும் நிர்வாகிகளும் பங்கெடுத்துக் கொண்ட. பேரணி நடைபெற்றது; இறுதியில் காவல்துறை வைத்திருந்த தடுப்புகள் உடைக்கப்பட்டு ஆளுநர் மாளிகை முற்றுகை இடப்பட்டது.

புதுச்சேரி L & T தொழிலாளர்களின் போராட்டம் - கோரிக்கைகள் வெற்றி பெறட்டும்!