தோழர் மாணிக்கம் மறைந்தார்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜனநாயக விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் தலைவர். CPIML கட்சியின் நாமக்கல் மாவட்ட கமிட்டி உறுப்பினர். 1987ல் இருந்து சங்கத்தின் முன்னணி ஊழியராக செயல்பட்டு வந்தவர். 31.7.22 புற்று நோயால் சேலம் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இல்லாமல் மரணமடைந்துவிட்டார். அவரது இழப்பு பேரிழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், இயக்க தோழர்களுக்கும் விசைத்தறித் தொழிலாளர்களுக்கும் ஆழ்ந்த ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

தோழருக்கு செவ்வணக்கம்.

மறைந்த தோழர். மாணிக்கத்திற்கு செங்கொடி வைத்து, மலரஞ்சலி செய்து, CPIML மாநில குழு சார்பில் தோழர். சந்திரமோகன் மற்றும் நாமக்கல் மாவட்ட கட்சியமைப்பு சார்பில், மாவட்ட செயலாளர் பொன்.கதிரவன், மாவட்ட தலைமை குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், வெங்கடேசன், பேபி, M.முருகன் மற்றும் தோழர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.