புரட்சிகர இளைஞர் கழகத்தின் சேலம் மாவட்ட பேரவை 10.7.2022 கெஜ்ஜல்நாய்க்கன்பட்டி, வீராசாமிபுதூரில் நடைபெற்றது. ஜி.ஜெயராமன், ஆர்.மணீஸ்வரன், ஏ.பிரித்விராஜ் ஆகியோர் தலைமையேற்று பேரவையை நடத்தினர். ஜி.சுந்தர்ராஜன் வேலை அறிக்கை முன்வைத்தார். ஆர்ஒய்ஏ மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஜி.தனவேல், இகக(மாலெ) சேலம் மாவட்டச் செயலாளர் தோழர் கோ. மோகனசுந்தரம், ஏஐசிசிடியூ மாவட்டத் தலைவர் நடராஜன், மாவட்ட துணைத் தலைவர் வேல்முருகன், அய்சா மாவட்ட அமைப்பாளர் ராகுல், இக்க(மாலெ) பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளர் பொ.அன்பு ஆகியோர் உரையாற்றினார்கள்.இப்பேரவையில் ஆர்ஒய்ஏ புதிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டத் தலைவராக ஜி. சுந்தர்ராஜன், துணைத் தலைவராக மணீஸ்வரன், மாவட்டச் செயலாளராக காளிதாஸ், துணைச் செயலாளராக கார்த்திக், பொருளாளராக ராஜா, மாவட்ட கமிட்டி உறுப்பினர்களாக கர்ணன், ஸ்ரீதர், சேட்டு, அசோக்குமார், கோபால், குபேந்திரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.