விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் 10.7.2022 புரட்சிகர இளைஞர் கழகத்தின் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பாளராக தோழர் கிருஷ்ண கோபால பாண்டியனும் தோழர்கள் ஜெயகிருஷ்ணன், சிவகுமார், லாரன்ஸ்கிருபாகரன், அஸ்வின், சுரேஷ்குமார், ராஜபாண்டி ஆகிய 7 பேர் கொண்ட புதிய அமைப்புக்குழுவும் உருவாக்கப்பட்டது. மேலும் 1000 உறுப்பினர்களை சேர்ப்பது, மாவட்டப் பொதுப்பேரவை நடத்துவது, பகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் மீது இயக்கம் நடத்துவது, தஞ்சாவூரில் நடைபெறும் காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் 10பேர் கலந்துகொள்வது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் மாநிலத்தலைவர் தோழர் மா.சுந்தர்ராஜ் கலந்துகொண்டு உரையாற்றினார்.