பாட்னா மாவட்ட 12வது மாநாட்டை யொட்டி புல்வாரி சரிப் என்ற இடத்தில் 2022 செப்டம்பர் 8 அன்று நடைபெற்ற குடிமக்கள் கருத்தரங்கில் பேசிய இகக(மாலெ) பொதுச் செயலாளர் தோழர் திபங்கர், பாஜக போன்ற பாசிச சக்திகளை ஆட்சியிலிருந்து மட்டுமல்ல, சமூகத்திலிருந்தே அகற்றிட வேண்டும் என்றார். பீகார் காட்டிய பாதையின் வழிசென்று, 2024ல் பாஜக அபாயத்தில் இருந்து நாட்டை நாம் கண்டிப்பாக விடுவிக்க முடியும்.

மதவாதத்திற்கெதிரான கருத்தரங்கில் இகக(மாலெ) தலைவர்களுடன், மகாகூட்ட ணியின் பல்வேறு தலைவர்களும் கலந்து கொண்டு வரவிருக்கிற 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடிக்க உறுதி யேற்றுக் கொண்டனர். புல்வாரி சரிப் தொகுதி     சட்டமன்ற உறுப்பினர் கோபால் ரவிதாஸினால் நடத்தப்பட்ட இந்த கருத்தரங்கத்தில், துருவ் யாதவ், மனோஜ் ஜி, முகமது கௌசர், கே.டி.யாதவ், ராமேஸ்வர் பிரசாத், மீனா திவாரி, சந்தீப் சௌரவ், ரமாதார் சிங், சரோஜ் சௌபே ஆகியோர் உரையாற்றினர்.

தோழர் திபங்கர், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை பற்றிய ஒரு நேர்மறையான விவாதம் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருடன் பேசிக் கொண்டிருக்கும்போது இருந்தது என மேலும் கூறினார். ஒருபுறம் எதிர்க்கட்சிகள் மற்றொருபுறம் பல்வேறு பிரிவினர்களால் தெருக்களில் நடத்தப்படும் இயக்கங்களை உள்ளடக்கிய இரு முனை எதிர்ப்புகளால் கண்டிப்பாக 2024ல் பாஜகவைத் துடைத்தெறிந்து வெற்றி கொள்ள முடியும். எதிர்க்கட்சிகளின் பிரதமர் முகம் யார்? என்று பாஜக கேட்கிறது. அதற்கு நம்முடைய பதில், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்கள் வாக்களித்து அவர்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இருந்து பிரதமர் 'முகம்' வெளிப்படும். முக்கியமான விசயம் என்ன வென்றால், அதானிகளுக்கும் அம்பானி களுக்கும் நாட்டின் சொத்துக்களை விற்றுக் கொண்டி ருக்கிற பாஜக போன்ற பாசிச சக்திகளின் பிடிகளில் இருந்து ஜனநாயகத்தையும் அரசியல மைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதேயாகும். முந்தைய ஆட்சியில் இருந்த புல்டோசர் ஆட்சி, வேலைவாய்ப்பு, கல்வி, குறைந்தபட்ச ஆதாரவிலை, மகாத்மா காந்தி வேலை உறுதித் திட்டம் போன்ற எல்லாவிசயங்களிலும் இருந்து தற்போதைய பீகார் அரசாங்கத்தின் கொள்கைகளில் மிகத் தெளிவாக வித்தியாசம் காணப்பட வேண்டும். மத்திய புலனாய்வுத் துறையின் சோதனை கள் பற்றி மட்டுமின்றி தேசிய புலனாய்வு முகமையின் சோதனைகள் பற்றியும் அரசாங்கம் வெளிப் படையாகப் பேச வேண்டும் என தோழர் திபங்கர் கூறினார்.

தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான துன்புறுத்தல்களுக்கு எதிராகவும் புல்வாரி சரீப் ஒரு பயங்கரவாதத்தின் மையம் என அவதூறு பரப்புவதற்கு எதிராகவும் நடத்தப்பட வேண்டிய போராட்டத்தின் தேவையை வலியுறுத்தி மற்ற தலைவர்கள் பேசினார்கள்.