கொரோனா பெருந்தொற்று தாக்கியபோது அனைத்து உற்பத்திகளும் நின்று போய்விட்டன. மூடப்படாமல் தொடர்ந்து இயங்கியது விவசாயம்தான். இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்கு அது பெரும் பங்காற்றியது. ஆனால், இதனை நினைத்துப் பெருமைப்பட்டுக்கொள்ள ஏதும் இல்லை. 2021ஆம் ஆண்டின் நிலவரப்படி ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் குறைந்தது ஒரு விவசாயத் தொழிலாளர் தற்கொலை செய்துகொள்கிறார்.

2021ல் 5563 விவசாயத் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்று தேசிய குற்ற ஆவண நிறுவனத்தின் அறிக்கை சொல்கிறது.

விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலை 2020யைக் காட்டிலும் 9 சதம் 2021ல் அதிகரித்தது. 2019உடன் ஒப்பிடும்போது, 2020ல் விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலைகள் 29 சதம் அதிகரித்தன.

2021ல் தற்கொலை செய்துகொண்ட 5563 விவசாயத் தொழிலாளர்களில் 5121 பேர் ஆண்கள், 442 பேர் பெண்கள்.

 தற்கொலைகளில் மிக அதிகமான எண்ணிக்கை (1424) மகாராஷ்டிராவில் நிகழ்ந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 999 பேர் தற்கொலை செய்துகொண்ட கர்நாடகா வருகிறது. அதனை அடுத்து 584 தற்கொலை செய்துகொண்ட ஆந்திரப்பிரதேசம் இருக்கிறது.

அதிக எண்ணிக்கையிலான விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகிவிட்டார்கள் என்ற பின்னணியில் தற்கொலைகளின் அதிகரிப்பு நடந்துள்ளது. சராசரியான விவசாயக் குடும்பம் ஒன்று விவசாய வருமானத்தைக் குறைவாகவும் கூலி வேலையால் கிடைக்கும் வருமானத்தை அதிக அளவிலும் பெறுகிறது.

77வது தேசிய மாதிரி கணக்கெடுப்பில் இது தெளிவாகப் புலப்படுகிறது. இந்த கணக்கெடுப்பின்படி விவசாய குடும்பம் ஒன்றுக்கான அதிகபட்ச வருமானமாக இருக்கும் 4063 ரூபாய் என்பது விவசாயக் கூலி வேலை செய்ததால் கிடைப்பதாக இருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிக எண்ணிக்கையிலான விவசாயத் தொழிலாளர்கள் இறந்துபோயுள்ளனர். ஆனால், விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை குறைவான விகிதத்தில் இருக்கிறது. விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 2020ல் 5579 ஆக இருந்தது 2021ல் 5318ஆகக் குறைந்துள்ளது. 2019ல் விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை 5957ஆக இருந்ததுதான் 2020ல் 5579 ஆகக் குறைந்தது.

மகாராஷ்டிரா, கர்நாடகா ஆந்திரப் பிரதேசத்திலும் இதே நிலைமைதான். இங்கெல்லாம் கூட விவசாயிகளின் தற்கொலையோடு ஒப்பிடும்போது விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.

நமது நாட்டில் தற்கொலை செய்துகொள்பவர்களில் 25 சதவிகிதத்தினர் (42,004) தினக்கூலி தொழிலாளர்களாகத்தான் உள்ளனர். இதன் காரணமாக தற்கொலை செய்துகொள்பவர்களில் தினக்கூலி தொழிலாளர்களின் விகிதம்தான் மிக அதிகமான ஒன்றாக இருக்கிறது. 2020ல் தற்கொலை செய்துகொண்ட தினக்கூலி தொழிலாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டில் 33,164 இருந்து 2021ல் 42,004 ஆக மிக உச்சத்திற்கு சட்டென்று உயர்ந்தது.


-