இகக(மாலெ) 11வது அகில இந்திய மாநாட்டின 3ம் நாளான 18.2.2023 அன்று அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம்; ஜனநாயகம் காப்போம்; இந்தியாவைக் காப்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ஐக்கிய ஜனதா தளம் தலைவர் லாலன் குமார், இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். கருத்தரங்கின் நோக்கம் குறித்து முதலில் உரை நிகழ்த்திய இகக(மாலெ) பொதுச் செயலாளர் திபங்கர், கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் அனைவரையும் வரவேற்றார். அவர் தனது உரையில், இந்த கருத்தரங்கத்தின் நோக்கம் மிகத் தெளிவானது "அரசமைப்புச் சட்டமும் ஜனநாயகமும் ஆபத்தில் இருக்கிறது என்றால், அவற்றை பாசிச சக்திகளிடமிருந்து பாதுகாக்க உறுதியான போராட்டமும் பரந்த ஒற்றுமையும் தேவை". மேலும் அவர், தெருக்களிலும் தேர்தல் களத்திலும் எதிர்ப்பானது எவ்வாறு கட்டமைக் கப்படுகிறது என்பதை மீண்டும் மீண்டும் பீகார் காட்டுகிறது. பொதுச் செயலாளர் தொடர்ந்து, 11வது அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியான இந்தக் கருத்தரங்கம், நாட்டில் நெருக்கடி நிலையைப் போன்ற ஒரு சூழலுக்கு எதிரான எதிர்ப்பை கட்டமைப்பதற்கான ஒரு தெளிவான அழைப்பு ஆகும். என்றார்.

கருத்தரங்கத்தில் திரளராகக் கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தற்போதுள்ள ஆட்சியான தன்னுடைய சொந்த நலனுக்காகவே வேலை செய்கிறது. அதற்கெதிராகப் போராட, நாட்டின் நலனுக்காக, பாஜக கூட்டணியிலிருந்து வெளியே வந்து, ஏழு கட்சிகள் ஒன்றிணைத்திருக் கிறோம். மேலும் "மகா கூட்டணி நோக்கிய நம்முடைய முடிவானது மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆகையால், நாம் இதுபோல் தொடர்ந்து ஒன்று சேர்ந்து செயலாற்றுவோம். ஆனால், பீகார் தாண்டியும் பொறுப்புகள் இருக்கின்றன. 2024ல் தேர்தல் வரவிருக்கிற இத்தருணத்தில், நாம் ஒன்று சேர்ந்து போராடி, இப்போது இருக்கும் (ஒன்றிய) ஆட்சியை வெளியேற்றுவோம்" என்று கூறினார். நாங்கள் போராட்டங்களிலும் இகக(மாலெ) மக்களுடனும் ஒன்றுசேர்ந்து செயல்பட்டு வருகிறோம். வரும் காலத்திலும்கூட நாங்கள் அவ்வாறு இருப்போம் என்று உறுதியளிக்கிறோம். நாம் தொடர்ந்து இணைந்து வேலை செய்வோம் என்று கூறினார். 

பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ்,பல கருத்துக்களும் இங்கே ஏற்கனவே பகிரப்பட்டு விட்டன. இருந்தாலும் இந்த மேடையில் ஜனநாயகத்தைக் காப்போம் என்ற முக்கியமான முழக்கம் வைக்கப்பட்டிருக்கிறது அதன் மீது சில கருத்துக்களை சொல்கிறேன்.

நாம் பணவீக்கம், வேலை வாய்ப்பு, உணவுபாதுகாப்பு பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, மோடியின் ஊடகம் பசுமாடு, இஸ்லாமியர், கோவில் பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. 

அன்பு, அமைதி பற்றி எந்த பேச்சும் இல்லை. பதிலாக வெறுப்பும் வன்முறையும் அவர்களுடைய மொழியாக இருக்கிறது. ஏற்கனவே சிந்தனை கொத்து என்ற நூலில் இந்தியாவை ஒரு இந்து நாடு என்று கோல்வால்கர் எழுதியிருக்கிறார்.

இந்தியாவின் ஜனநாயக சக்திகள் மீது அனைத்து ஒடுக்கு முறையும் ஏவப்படும் போதும் நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிதீஷ் குமார் முக்கிய முடிவை எடுத்து நம்மோடு இணைந்து இருக்கிறார். அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்க்கட்சி ஒற்றுமை வரும்போது காங்கிரஸ் தேசிய கட்சியாக இருக்கிறது.நாங்கள் பிராந்திய கட்சிகள். பாஜகவை அகற்றுவதற்கு ஒரு திட்ட வரைபடத்தை நாம் உருவாக்க வேண்டும். காங்கிரஸ் இவ்விசயத்தில் முடிவு எடுக்க வேண்டும். இந்தியா முழுக்க ஆட்சியைப் பிடிக்க எந்த மருந்தைக் கொடுப்பார்களோ அதே மருந்தை பீகாரில் நாங்கள் கொடுத்தோம். எங்கு பிராந்திய கட்சிகள் வலுவாக உள்ளதோ அங்கு ஓட்டுனர் இருக்கை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். காங்கிரசுக்கும் பாஜகவுகுக்கும் நேரடி போட்டி இருக்கும் போது காங்கிரஸ் இருக்கட்டும். எமக்கு செலவழிக்க அம்பானி அதானி கிடையாது. எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்திட நாம் அரசு நிறுவனங்களைத் தவறாகப் பயன்படுத்துவது மில்லை. இருப்பினும் நம் மீது தாக்குதல் தொடுக்கப்படுகிறது. பாஜகவுக்கு ஒரு பாடம் கற்றுக் கொடுப்பதற்காக நாமெல்லாம் ஒன்று சேர்ந்தோம். நாட்டின் நலனை முன்னிட்டு ஒரு ஒற்றுமையை நிறுவியுள்ளோம். லல்லு பிரசாத் சார்பாக எனது வாழ்த்துக்கள். இஸ்லாமியர் களுக்கு எதிரான அவர்களது அரசியல் எடுபடாது. ஏனென்றால் இந்த நாடு ஒரு சிலருக்கானதல்ல. இந்த மாநாட்டுக்கு என்னை அழைத்தமைக்கு நன்றி என்று கூறியதோடு, உரையைத் துவங்கும் போது லால் சலாம் என்று கூறியதுபோலவே லால் சலாம் என்று கூறி தனது உரையை முடித்தார்.

இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவரும் ஒன்றிய முன்னாள் அமைச்சருமான சல்மான் குர்ஷித் தனது உரையில், தேஜஸ்வி சிவப்பு என்று சொன்னார். அது எனக்கு ஒரு கவிதையை நினைவுபடுத்துகிறது. அது உணர்வு களில் எதிரொலிக்கிறது. அனைத்து சிவப்புக ளையும் கண்டுபிடிக்கிறது. அந்த சிவப்பில் நானும் என்னை சிவப்பாகக் கண்டேன்.

சிவப்பு.. சிவப்பு.. சிவப்பு என்பது புரட்சியின் நிறம். நாட்டில் சிலர் குஜராத் மாடல் பற்றி பேசுகிகிறார்கள். முதலமைச்சர் நிதீஷ் இப்போதுதான் பீகார் மாடல் குறித்து பேசினார். அது ஒற்றுமைக்கான மாடல். அது அனைவ ரையும் அரவணைத்துச் செல்கிறது. நாம் இந்த மாடலைப் பற்றிதான் இனி பேசியாக வேண்டும். நிதீஷ் குமார் என்ன பேசுகிறார், என்ன விவாதிக்கிறார் என்பதை கேட்டோம். எங்களின் கட்சியும் இதையேதான் நாம் பேசிக் கொண்டிருக்கிறது. நாம் ஒன்றுபோல் உணர்கிறோம். சில சமயம் யார் முதலில் 'ஐ லவ் யூ' . சொல்வது என்று பிரச்சனைகூட வரும்.

உங்கள் அனைவரின் ஆதரவையும் பெற்ற, நீங்கள் அவ்வப்போது கலந்துகொண்ட பாரத் ஒற்றுமைப் பயணம் உங்களுக்கு ஒரு செய்தியை அளித்தது. 'இதயங்களை இணைக்க வேண்டும். அன்பைப் பரப்ப வேண்டும்' என்பதுதான் அந்த செய்தி. நாம் இன்று எதிர்கொள்வது பாசிச சக்திகளை. ஆனால், அவர்கள் தைரிய மிக்கவர்கள் அல்லர். அவர்கள் கோழைகள். நமது ஐக்கியம் அவர்களைக் கலவரப்படுத்தி விடும், பின்வாங்க வைத்துவிடும்.

என்னை இங்கே அழைத்ததால் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாட்டின் ஜனநாயகத் துக்காகப் பேராடிய தலைவர்கள் மத்தியில் இருப்பதற்கு நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர்களின் உணர்வுகளை நானும் பிரதிபலிக் கிறேன். நம்பிக்கை ஒளியை ஏற்றுங்கள். ஒன்றுபடுங்கள். நாம் ஒன்றுபடுவோம். கொண்டாடுவோம்.

மதவெறியோடு எந்த சமரசமும் செய்யாமல் அதனை எதிர்த்து நிற்க வேண்டும். ஒரு சுனாமி போல இந்திய ஜனநாயகத்தை பாசிசம் தாக்கியுள்ளது. என்று நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாட்டின் விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவருமான தொல் திருமாவளவன் கூறினார். பீகாரில் கட்டப்பட்டுள்ள பாசிச எதிர்ப்பு சக்திகளின் பரந்துபட்ட ஒற்றுமையைத் தொடர் வது என்ற நோக்கத்தில் கருத்தரங்கு நடை பெற்றது. இதுபோன்ற போராட்டங்களின் வழிகாட்டியாக வரலாற்று ரீதியாகத் திகழ்ந்துள்ள பீகார், மிகப் பரந்துபட்ட பாசிச எதிர்ப்பு இயக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் கட்டமைக்க வழிகாட்டும்.

இகக(மாலெ) பீகார் சட்டமன்றக் குழுவின் தலைவரான மகபூப் ஆலம், இகக(மாலெ) கட்சியின் பீகார் சட்டமன்ற உறுப்பினர்கள் சத்தியதியோ ராம், கோபால் ரவிதாஸ், இகக(மாலெ) கட்சியின் பீகார் மாநில செயலாளர் குணால், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தேசியத் தலைவர் ரதிராவ், மற்ற பிறரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.