சிபிஐ(எம்எல்) கட்சியின் 11ஆவது கட்சிக் காங்கிரசுக்கு எங்களுடைய ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறோம். எங்களை மாநாட் டிற்கு அழைத்தமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கொல்கத்தா தோழர்களின் உபசரிப்புக்கு எங்களுடைய சிறப்பு நன்றியை தெரிவிக்கிறோம்.

1990களின் ஆரம்ப காலத்திலிருந்து எங்க ளுக்கு உங்கள் கட்சியுடனான உறவு இருந்து வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு தோழர் திபங்கர், ஆஸ்திரேலியா வருகை புரிந்ததை நினைவு கூர்கிறேன்.

தோழர்களே! ஆஸ்திரேலியா செல்வ செழிப்பு மிக்க ஏகாதிபத்திய நாடுதான். அப்படி யெல்லாம் இருந்தும் அங்கே முதலாளித்துவம் மக்களுக்கு சொல்லொன்னா துயரத்தைக் கொண்டு வந்திருக்கிறது. அங்கே குடியிருப்பும் விலைவாசி உயர்வும் மிகப்பெரிய பிரச்சினைகளாகும். குடியிருக்க வீடு இல்லாமல் இருப்பது ஆஸ்திரேலியமக்களின் பெரும் கவலையாகும்.எங்கள் நாட்டின் மூல வளங்களை பெரும் முதலாளிகள் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சமீப காலத்தில் ஆஸ்திரேலியாவின் சுரங்க உரிமைக்கான போட்டியில் அதானியும் இணைந்து கொண்டிருக்கிறார்.

அடுத்து நான் சொல்ல விரும்பும் இரண் டாவது செய்தி, ஐக்கிய அமெரிக்கா சீனாவுக்கு எதிரான பரப்புரையையும் சீனா மீதான பொருளாதார, இராணுவ யுத்தத்தையும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பது. சீனா மீது ஐக்கிய அமெரிக்கா நடத்தி வரும் யுத்தத்துக்கு எதிராக அனைத்து முற்போக்கு சக்திகளும் ஒன்றி ணைந்து நிற்க வேண்டும்.

சர்வதேச கம்யூனிச இயக்கத்தில் நடந்து வரும் பல்வேறு விவாதங்களுக்கு சிபிஐ(எம்எல்) கட்சியால் நிறைய பங்களிப்பு செலுத்த முடியும் என நாங்கள் நம்புகிறோம். ஆஸ்திரேலிய- இந்திய மக்களுக்கிடையிலான ஒத்துழைப்பிற்கான களமாக ஆசியபசிபிக் பிராந்தியம் அமையும் என நாங்கள் நம்புகிறோம்.