டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில், தமிழ்நாடு மாணவர்கள் பெரியார் படத்தை தாங்கள் தங்கியிருக்கும் இடத்தில் வைத்திருந்தார்கள் என்பதற்காக சங்கிகள் மாணவர் அமைப்பான ஏபிவிபியின் குண்டர்கள் தமிழ்நாட்டு மாணவர்களைத் தாக்கினார்கள். பல்கலைக் கழகத்தின் அலுவலகத்தை அடித்து நொறுக்கினார்கள். பெரியார், அம்பேக்கர், மார்க்ஸ் படங்களை இழிவுப்படுத்தியதனைக் கண்டித்து பிப்ரவரி 25ம் தேதி அகில இந்திய மாணவர் கழகம் (அய்சா) சார்பாக மாணவர்கள் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ், அசபுல்லாகான், பகத் சிங், பூலே, சாவித்திரிபாய், அயோத்திதாசர், தோழர் சந்திரசேகர் போன்றோரின் படங்களுடன் பேரணி நடத்தினார்கள்.
முன்னதாக, இகக(மாலெ)யின் அகில இந்திய மாநாடு பாட்னாவில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மும்பை ஐஐடியில் தலித் பெண் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் இறந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாநாட்டு வளாகத்தில் அகில இந்திய மாணவர் கழகம் சார்பாக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.