முப்பதாண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி கிடைத்தது. வரலாற்று சிறப்பு வாய்ந்த பாபர் மசூதி சங்கிப் படையினரால் பட்டப்பகலில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால் வன்முறை மிக்க இந்தச் செயலும் அதன் விளைவாக நூற்றுக் கணக்கான உயிர்கள் பலியான பின்பும் பல இந்தியர் களும் இதனை மசூதிக்கு எதிராக கோயில் பிரச்சினை என்ற கோணத்திலேயே தொடர்ந்து காண்கின்றனர். அண்மைக்காலம் வரை மசூதி இடிப்பை ஒரு குற்ற நடவடிக்கையாகவே உச்ச நீதிமன்றம் கூறியது. சட்டத்தின் ஆட்சியை அருவருக்கத்தக்க வகையில் மீறிய செயலாகும் எனவும் கூறியது. ஆனால், விந்தையான வகையில் அந்நிலத்தின் உரிமையை குற்றம் புரிந்தவர்களுக்கே வழங்கியது. அதே வேளையில் மசூதியை வேறு இடத்திற்கு மாற்றிய மைக்க அந்நகரத்தின் வேறொரு பகுதியில் நிலம் ஒதுக்கப் பட்டது. இருப்பினும் அயோத்தியில் இனிமேல்தான் கட்டி முடிக்கப்பட போகிற கோயிலைச் சுற்றி கட்டவிழ்த்து விடப்படும் கண்கவர் காட்சிகள் மூலம், இத்தனை காலமும் இந்தப் போராட்டம் உண்மை யிலேயே எதற்காக மேற்கொள்ளப்பட்டது என அனை வருக்கும் தெளிவாக்கப்பட்டது. ஒரு மசூதிக்குப் பதிலாக கோயிலை அமைப்பது என்பதாக மட்டுமே அது ஒரு போதும் இருந்ததில்லை. மாறாக ஆர்எஸ்எஸ்ஸின் பார்வையான இந்துராஷ்டிராவுக்கு தக்கபடி இந்தியாவை மறுவடிவமைப்பு செய்வதற்கானதாகும். 

கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் எழுந்து வரும் ஒழுங்கமைவின் குறியீடுகள் தெள்ளத் தெளிவாக மாறிக் கொண்டிருக்கின்றன. கோயிலின் தொடக்கவிழா அல்லது குடமுழுக்கு மாபெரும் அரசு விழாவாக மாறியது. மதம் மற்றும் ஆட்சி நிர்வாகத்தின் ஒருங் கிணைப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் திறப்புவிழாவானது தமிழ்நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட முடியாட்சி யின் நினைவுச்சின்னமான செங்கோல், இந்து மத ஆதினங்களால் பிரதமருக்கு வழங்கப்பட்டதன் மூலம் ஒரு மத நிகழ்வாக ஆக்கப்பட்டது. அதே வேளையில் அயோத்தியில் ராமர் கோயிலின் திறப்பு விழா முழுக்க முழுக்க அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட அரசியல் நிகழ்வாக ஆக்கப்பட்டது. புதிய கோயிலின் சிலைக்கு 'குடமுழுக்கு விழா'விற்காக தன்னைத் 'தயார்படுத்திக்கொள்ள' பிரதமர் நாடு முழுவதற்குமான மாபெரும் கோயில் சுற்றுலாவை மேற்கொண்டார். அவரது பாதுகாப்பு ஊழியர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் மரபான மத உடைகளை அணிந்து கொண்டு அவருடன் சென்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து அரசாங்க அலுவலகங்கள், நிறுவனங்கள், பல மருத்துவமனைகளுக்கும் கூட இந்த திறப்பு விழாவிற் காக அரை நாள் விடுமுறை விடப்பட்டது!

தற்போது அயோத்தி என்பது ராமர் பெயரிலான மற்றுமொரு கோயிலைக் கொண்டிருக்கும் இடம் மட்டுமல்ல; அரசு அதிகாரம், இந்துத்துவம், கார்ப்பரேட் நலன்கள் ஆகியவற்றின் வளர்ந்து வரும் ஒருங் கிணைப்பின் அடிப்படையில் இந்தியாவை மறு - வடிவமைப்பு செய்கிற நிகழ்வுப்போக்கின் வகை மாதிரியாக அது விளங்குகிறது. ஒட்டுமொத்த பாஜக- ஆர்எஸ்எஸ் தலைமை, அரசியல் சாசன சட்ட - நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் உள்ள தனிநபர்கள் ஆகியோருடன் இந்தியாவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கார்ப்பரேட் முகங்களையும் •அங்கே காண முடிந்தது. இதற்கு முன்னதாக - மக்களுக்கான 'பிரதம சேவகர்' என தன்னைத் தானே - அழைத்துக் கொண்ட பிரதம மந்திரி தற்போது தன்னை கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என - அழைத்துக் கொள்வதை வழக்கமாகக் கொண் டுள்ளார். அவருடைய பக்தர்களோ அவரை கடவுளின் அவதாரமாக முன்னிறுத்துகின்றனர். மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு என்ற நவீன இந்தியாவின் கருத்தாக்கம் அடையாளம் தெரியாமல் வேகமாக அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கார்ப்பரேட் ஆதரவுடனும் முடியாட்சியின் அம்சங்களுடனும் இறையருளால் நியமிக்கப்பட்ட ஒழுங்கமைவாக இந்த குடியரசு உண்மையிலேயே உருமாற்றப்பட்டுள்ளது.

கோயில் இன்னும் முழுமை அடையவில்லை (இதன் காரணமாகவே இந்த குடமுழுக்கு வேத ஆகமங்களின் அடிப்படையில் குறைபாடுடையது என சங்கராச்சாரியார்கள் கூறுகின்றனர்). ஆனால் இந்த ஒட்டுமொத்த நகரமும் பெரும் எண்ணிக்கையிலான கட்டிட வேலைகள், அழகுபடுத்தும் நடவடிக்கைகள் ஆகியவற்றோடு பெருமளவிற்கு மக்கள் வெளியேற்றப்படுதல், வீடுகள், கடைகள், வழிபாட்டு இடங்களும் கூட இடிக்கப்படுதலின் மையமாக மாறிப்போனது.மூன்று முக்கிய பாதைகள் ராமர் பாதை, பக்தி பாதை, ராமஜென்ம பூமி பாதை என பெயர் மாற்றப்பட்டிருக் கின்றன. மேலும் திகைப்பூட்டுகிற அளவுக்கு முப்பதாயிரம் கோடி ரூபாய் செலவில் அவை அகலப் படுத்தப்பட்டு, அழகு படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமர் பாதை கட்டப் படுவதற்காக அதீத எண்ணிக்கையில் 2200 கடைகள், 800 வீடுகள், 30 கோயில்கள், 9 மசூதிகள், 6 கல்லறைகள் இடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக் கின்றன. உலகத் தரத்திலான சுற்றுலா இடமாக அயோத்தியை வளர்த்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் என்பது அதானி குழுமத்தின் வருகையையும் அர்த்தப்படுத்துகிறது. உள்ளூர் விவசாயிகளையும் வேளாண் மையையும் விலையாக கொடுத்து இலாபகரமான நிலச் சந்தைகள் உருவாக்கப்படு கின்றன. சரயு நதிக்கரையின் சூழல் பாதுகாப்பு மண்டலத்தில் சுற்றுப்புறச் சூழலுக்கு குந்தகம் விளைவிக்கிற கட்டிட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன.

மதம், அரசு அதிகாரம், பெருந்தொழில் ஆகியவற்றின் ஒருங்கிணைவு என்பது மதம் தனி நபர்களின் அந்தரங்க களத்தில் இருந்து வெளியே எடுத்துக் கொள்ளப்பட்டு, பெருந் தொழில், பெருங்கண்காட்சி யின் சுழற்சி விசையாக மாற்றப்பட்டுவிட்டது. வாரணாசி, மதுரா, தற்போது அயோத்தியில் கட்டப் பட்டு கொண்டி ருக்கும் நீள்நடை பாதைகள், அதிகரித்த அளவிலான பழைய கட்டிடங்கள், கடைகள், கோவில் களையும் கூட இடிப்பதற்கு வழிவகுத்துள்ளது. சிறு வேளாண்மையையும் சிறு தொழில்களையும் கார்ப்ப ரேட்டுகள் கைப்பற்றிக் கொண்டது போல, மத அரங்கத்திலும் கூட, மையப்படுத்தப்படுதல், ஒருமுகப் படுதல் என்ற அதேபோன்ற நிகழ்வு போக்குக்கு நாம் சாட்சியாக இருந்து கொண்டிருக்கிறோம். மேலும் மிகவும் குறிப்பாக வரவிருக்கும் மக்களவை தேர்தல் களின் பின்னணியில் ராமரை அரசியல்மயமாக்குவதன் மூலம், ராமர் கோவிலுக்கும் மோடியின் நினைவுச் சின்னத்திற்கும் இடையிலான வேறுபாடும் கூட மங்கலாகியுள்ளது. அயோத்தியில் மோடியின் மாபெரும் உருவப்படங்கள் ராமரையும் கூட மறையச் செய்து விட்டன. ஆளுமை வழிபாட்டு முறையில் மாபெரும் தலைவரை வழிபடுவது ஊக்குவிக்கப் படுவதன் மூலமாக பொதுமக்களில் பெரும்பான்மை யோர் ராமர் மீது கொண்டுள்ள பக்தியைச் சுரண்டுவதன் அளவு உச்சத்தை எட்டியுள்ளது.

பத்தாண்டுகளின் மத வெறுப்புணர்வு, வஞ்சகமாக மக்களை கவரும் நடவடிக்கைகளுக்குப் பிறகு,அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்ற விரக்தியில், அயோத்தியின் ராமர் கோவிலை தேர்தலுக்கான துருப்புச் சீட்டாக பயன்படுத்த மோடி அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்தியா குறித்த சங்கிப் படையணியின் இந்து மேலாதிக்க வாத பார்வையை வெளிஉலகிற்கு தெரியப்படுத்த இதுவொரு மிகவும் வெளிப்படையான அடையாளமுமாகும். சந்தேகத் திற்கிடமின்றி ராமாயணம் என்பது மிகவும் பரவலாக அறியப்பட்ட ஒரு காவியமாகும். ஆனால் இந்தியா வின் கலாச்சார பன்மைத்துவத்திற்கு ஏற்ப ராமாயணமும் பல்வேறு வகைகளிலும் பலதரப்பட்ட வர்ணிப்பு களிலும் உள்ளது. மத, மொழி, உணவு, வேறு எந்த கலாச்சார தளத்திலும் பெரும்பான்மைவாத ஒருமைத்து வத்தை திணிக்க வேண்டி, இந்தியாவின் பன்மைத்துவ அடையாளத்தை தகர்க்க நினைக்கிற எந்த ஒரு முயற்சி யும் ஒரு ஒன்றுபட்ட நாடாக இந்தியாவின் இருத்தலுக்கே பேரழிவாக முடியும். மதச்சார்பற்ற பன்மைத்துவ ஜனநாயகம் மட்டுமே உலகின் அதிக மக்கள் தொகையும் வேறுபாடான தன்மையும் கொண்ட நாட்டின் இருத்த லுக்கான துடிப்பான வழிமுறையாக இருக்க முடியும்.

தற்செயலாக 2024 ஜனவரி 22/23 இன் இடையே வருகிற இரவு, ஆஸ்திரேலிய மதபோதகர் கிரகாம் ஸ்டைன்ஸ்சையும் அவரது மகன்கள் பிலிப் (வயது 10) மற்றும் திமோத்தி (வயது 6) ஆகியோரை பஜ்ரங்தள் தலைவரான தாரா சிங்கால் தூண்டி விடப்பட்ட கும்பல் கோரமாக படுகொலை செய்ததன் 25வது ஆண்டு நினைவையும் குறிக்கிறது. ராமர் மீதான பற்றை வெளிப்படுத்த சங்கிப் படையணிகள் "ஜெய் ஸ்ரீராம்" என்ற பஜனை பயன்படுத்துகின்றன. மேலும் கொடூர மதவெறி வன்முறை செயல்களை அரங்கேற்ற வதற்கான, அவற்றைக் கொண்டாடுவதற்கான போர் முழக்கமாகவும் அதனை துணைக்கழைக்கின்றன. அத்தகைய பயங்கரவாத செயலை நிகழ்த்துபவர்களை அவர்கள் தண்டிக்கப்பட்ட பிறகும் கூட, அவர்களை பாதுகாப்பதையும் கொண்டாடுவதையும் சங்கிப் படையணிகள் செய்வதை பொதுவான நிகழ்வாக பார்க்கிறோம். டிசம்பர் 6 ஐ "வீரத்தின் நாளாக" கொண்டாடுகிற சங்கிப் படையணிகளுக்கு ஜனவரி 22 தான் அநேகமாக புதிய "குடியரசு நாளாக" இருக்கப்போகிறது. இந்தியாவை மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசாக பிரகடனப்படுத்தி, அரசியல் சாசன சட்டத்தை ஏற்றுக்கொண்ட முன்னோர்களைக் கொண்ட இந்திய மக்களாகிய நாம், பாசிஸ்டுகளின் கொடிய செயல்திட்டத்திற்கு எதிராக அரசியல் சாசன சட்டத்தையும் குடியரசையும் பாதுகாக்க முன்னெப்போதையும் விட கடினமாக போராடவேண்டும்.