அறிவியல் அறிஞர் ஆர்.எஸ்லால் மோகன் அவர்களுக்கு

இகக(மாலெஇரங்கல்

அறிவியல் அறிஞர் ஆர்.எஸ்.லால் மோகன் அவர்கள்  கடந்த மே 13ம் தேதி கோயமுத்தூரில் காலமானார்அவருக்கு வயது 87. லால் மோகன் அவர்கள் நாகர்கோவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர்அவர் ஒரு ஜனநாயகமுற்போக்குச்  சிந்தனையாளர்செயற்பாட்டாளர்சூழலியல் சார்ந்த இயக்கங்களில்போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்சுற்றுச் சூழல் பாதுகாவலராகதொல்லியல் பாதுகாவலராகஇயற்கைப் பாதுகாவலராக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர்.

இகக(மாலெநடத்திய கருத்தரங்கங்களில் அறிஞர் லால் மோகன் அவர்கள் கலந்து கொண்டு தன்னுடைய கருத்துகளை முன்வைத்துள்ளார்திருநெல்வேலியில் நடைபெற்ற அகில இந்திய மக்கள் மேடையின் முதல் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்.

அவர் டெல்லியில் உள்ள இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தின் முதல்வராகவும் ஐ.நாவின் சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் உறுப்பினராகவும்  செயலாற்றினார்லால்மோகன்  அவர்கள் 150க்கும் மேற்பட்ட புத்தகங்களையும் இந்திய மற்றும் சர்வதேச பத்திரிகைகளில் பல கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.

அறிவியல் அறிஞர் லால் மோகன் அவர்களுக்கு செவ்வஞ்சலியையும் அவரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தாருக்கும் நண்பர்கள் மற்றும் தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் இகக(மாலெதெரிவித்துக் கொள்கிறது.

இகக(மாலெ)

தமிழ்நாடு மாநிலக்குழு