தோழர் சிங்காரவேலரால் 1923 மே 1 அன்று சென்னை மெரினா கடற்கரையில் இந்தியாவின் முதல் மே நாள் கொடி ஏற்றப்பட்டது. 2023 மே 1 இந்தியாவின் 100ஆவது மே நாள். இந்த மே நாளில் கார்ப்பரேட் ஆதரவு காவிப் பாசிசத்தை இந்தியாவை விட்டே வெளியேற்றும் இலட்சியத் தோடு இகக(மாலெ), ஏஐசிசிடியு சார்பாகமே 1 அன்று நாடெங்கும் பேரணிகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கொடியேற்றுதல், உறுதியேற்புக் கூட்டங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தமிழ்நாட்டில் செங்கற்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் மே 1 அன்று மாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கு ஏஐசிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் சொ.இரணியப்பன் தலைமை தாங்கினார். ஏஐசிசிடியு அகில இந்தியத் தலைவரும் இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் வீ.சங்கர் சிறப்புரையாற்றினார். இகக(மாலெ) மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் பாலசுந்தரம், கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் தோழர் கிருஷ்ணவேணி, அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்க தேசியக்குழு உறுப்பினர் தோழர் அதியமான் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

தென்காசியில் மே1 அன்று நடைபெற்ற பேரணியில் இகக(மாலெ) தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் ஐயப்பன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் வேல்முருகன், அயூப்கான், சேக் மைதீன் உள்ளிட்ட உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலியில் மே 1 அன்று மாலை நடைபெற்ற பேரணியை இகக(மாலெ) நெல்லை மாவட்டச் செயலாளர் துவக்கி வைத்து உரையாற்றினார். ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் தோழர் த.சங்கரபாண்டியன், மாநிலத் துணைத் தலைவர் தோழர் ஜி.ரமேஷ் சிறப்புரையாற்றினர். பேரணிக்கு ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் க.கணேசன் தலைமை தாங்கினார்.

திண்டுக்கல்லில் மே 1 காலையில் நடைபெற்ற பேரணிக்கு இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் சுப்புராமன் தலைமை தாங்கினார். ஏஐசிசிடியு மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் க.ஞானதேசின் சிறப்புரையாற்றினார். இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் பொன்னுதுரை உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

கரூரில் மே 1 அன்று மாலை நடைபெற்ற பேரணிக்கு ஏஐசிசிடியு மின்வாரிய ஜனநாயக பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் பால்ராஜ் தலைமை தாங்கினார். இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் இராமச்சந்திரன் துவக்கி வைத்தார். ஏஐசிசிடியு மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஞானதேசிகன் சிறப்புரையாற்றினார்.அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தேசியக்குழு உறுப்பினர் பிலோமினா உள்ளிட்ட பல தோழர்கள் கலந்து கொண்டனர். 

சேலத்தில் நடைபெற்ற பேரணிக்கு தோழர் ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் வேல்முருகன் தலைமை தாங்கினார். பேரணியின் முடிவில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இகக(மாலெ) மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் அ.சந்திரமோகன் சிறப்புரையாற்றினார். தோழர் மோகன சுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோயிலில் நடைபெற்ற கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு இகக(மாலெ) மாநகரச் செயலாளர் தோழர் ஐயப்பன் தலைமை தாங்கினார். ஏஐசிசிடியு மாநிலத் துணைத் தலைவர் தோழர் எஸ்.எம். அந்தோணிமுத்து சிறப்புரையாற்றினார். ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் சுசீலா இகக(மாலெ) மாநிலக்குழு உறுப்பினர் கார்மல் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறையில் பேரணி நடைபெற்றது. பேரணியில் இகக(மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் குணசேகரன் சிறப்புரையாற்றினார். தஞ்சாவூரில் நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சிக்கு ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் ராஜன் தலைமை தாங்கினார். திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மணப்பாறை, கோவை, நாமக்கல், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்து மாவட்டங் களிலும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கொடியும் அலுவலகங்களில் கட்சிக் கொடியும் ஏற்றப்பட்டன.