சர்வாதிகாரி வீழ்கிறார்அவரைத் தூக்கியெறிவோம்!

நடைபெற்றுக் கொண்டிருக்கிற மக்களவைத் தேர்தல்களின் முதல்கட்டத்தில் மேலெழுந்து வந்த போக்குகளை அடுத்தடுத்த கட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன. இது,பாஜக வாக்காளர்களிடையே அயர்ச்சியையும் மனச்சோர்வையும், சங்கி-பாஜக தலைவர்களிடையே பதற்றத்தையும் விரக்தியையும் உருவாக்கியுள்ளது. தென் மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணியை மொத்தமாக துடைத்தெறிவது; வட மாநிலங்களில் அதனைப் பாதியாகக் குறைப்பது என்ற சூத்திரத்திற்கு ஏற்றத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படும் 2024 முடிவுகள் குறித்த உரத்த அறிகுறிகளை தமிழ்நாடுகேரளாராஜஸ்தான், உத்தரகண்ட் போன்ற மாநிலங்கள் வழங்கியுள்ளனவாக்களித்தவர்களின் எண்ணிக்கைதேர்தல் கணிப்புகள் ஆகியவற்றைத் தாண்டி, கவனத்தைக் கோருகிற விசயம் என்னவென்றால் இந்த நீண்ட தேர்தல் போராட்டத்தில் எழுகிற விவாதங்களேயாகும்.

400 க்கும் அதிகமான தொகுதிகளில் வெல்வது என்ற நம்பிக்கையுடன் தனது தேர்தல் பரப்புரையை பாஜக தொடங்கியது. குடும்ப அரசியல்ஊழல் என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் மீது கடுமையான தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டதுஆனால் தேர்தல்கள் தொடங்கி ஒரு வாரத்திலேயே இந்த கூச்சல்களை கேட்க முடியவில்லைஇவை மக்களிடம் எவ்வித அதிர்வுகளையும் ஏற்படுத்தவில்லை என்பதை சங்கிப் படையின் திட்ட வகுப்பாளர்கள் உணர்ந்து கொண்டனர். பாஜகவினுடைய எதிர்பார்க்கப்படும் சரிவின் அளவு பற்றியும், பாஜக குடையின் கீழ் பல்வேறு இடங்களிலும்ஊழலில் திளைக்கும் வாரிசு அரசியல்வாதிகள் அதிகரித்த அளவில் இணைவது குறித்த விவாதமாக பொதுவெளி உரையாடல் நகர்ந்து விட்டதுஎனவே விரக்தியின் எல்லைக்கே சென்றுவிட்ட மோடி அவரது நம்பிக்கைக்குரியநன்கு சோதிக்கப்பட்டமுஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களை அணிதிரட்டுவது என்னும் கருவான செயல்திட்டத்தை நோக்கித் திரும்பி விட்டார்.

திருமணமான பெண்களின் தாலிவீடுகள், எருமை மாடுகள் போன்ற சாதாரண மக்களின் சொத்துகளை பறித்து காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிக்கும் என்ற எதிர்க்கட்சிகளுக்கு எதிரான அபத்தமான குற்றச்சாட்டுடன் இது தொடங்கியது. அதனைத் தொடர்ந்து எஸ்சி/எஸ்டி/ஓபிசி இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு திருப்பி விடப்படும் என்ற விஷமத்தனமான பொய் வந்தது. ஒட்டுமொத்த நாடும் ஷரியத் அல்லது முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும், நாடு முழுவதும் கண்மூடித்தனமான பசுவதைக்கு ஊக்கம் அளிக்கப்படும் என மேலும் இரண்டு புதிய அபத்தமான குற்றச்சாட்டுகள் யோகியிடமிருந்து வந்தனஇந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் திரும்ப அதிகாரத்திற்கு வந்துவிட்டால் பாகிஸ்தான் வெகுவாக மகிழும் என்றும் தற்போது சொல்லப்படுகிறதுஉழைக்கும் இந்தியர்களின் வாழ்வாதாரத்தை பேரழிவுக்குள்ளாக்கிய ஒரு கட்சிலட்சக்கணக்கான நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம்சேமிப்புகள்சமூக பாதுகாப்பு ஆகியவை அரித்துப்போவதற்கு காரணமான ஒரு கட்சி ஏழைகளின் பெயரில் முதலைக் கண்ணீர் வடிக்கிறது.

பாகிஸ்தானை எதிரியாக சித்தரிப்பது பாஜகவின் வழக்கமான உத்தியாகும். 2002இல் இருந்து குஜராத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தேர்தல்களிலும் பாகிஸ்தான் குறித்த பீதியை தனக்கு சாதகமாக்குவதை மோடி வழக்கமாகக் கொண்டிருந்தார். 2015 இல் பீகாரில் நிதிஷ்குமாரின் ஜேடியூ உதவியின்றி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டியிருந்தபோது, பாகிஸ்தான் பூச்சாண்டியைக் காட்டி பீகார் மக்களிடம் பீதியை கிளப்புவதற்கு அமித்ஷா முயற்சித்தார்அந்த தேர்தல்களில் 243 இடங்கள் கொண்ட அவையில் அதன் எண்ணிக்கை வெறும் 53 ஆக குறைந்து விட்டதுஆனால் முஸ்லிம்களிடம் சொத்துக்களையும் இட ஒதுக்கீட்டையும் இழந்து விடுவீர்கள் என சாதாரண இந்துக்களை பயமுறுத்துவதில் மோடியும் பாஜகவும் முன்னெப்போதும் இந்தளவு வெளிப்படையாக பேசியதில்லைஊடுருவி வந்து மக்கள்தொகையை பெருமளவிற்கு அதிகமாக்கி இந்தியாவைக் கைப்பற்ற முனையும் சமூகத்தினராகதீயவர்களாக முஸ்லிம்களை சித்தரித்துஅவர்களைத் தாக்குதலுக்கு இலக்காக்கும் அவரின் அடுத்தடுத்த மேடைப் பேச்சுகள் பிரதம மந்திரியிடமிருந்து நேரடியாக வருவது முற்றிலும் அதிர்ச்சிதரத்தக்கதாகவும் அருவருக்கத்தக்கதாகவும் உள்ளது.

பாஜகவின் இந்த முரட்டுத் துணிச்சல் மக்களை சீற்றம் கொள்ளச் செய்ய வேண்டும்.

ஓபிசி இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்காக ஒதுக்கப்பட்டுவிடும் என்பதை விட மிக அதிக பொய் வேறெதுவும் இருக்கவே முடியாதுபெரும்பாலான மாநிலங்களில் முஸ்லிம் ஓபிசி/ஈபிசி யினருக்கு இடமளிக்க ஒட்டுமொத்த இட ஒதுக்கீடும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுஇந்தியாவில் குஜராத் உள்ளிட்ட பத்துக்கும் அதிகமான மாநிலங்களின் ஓபிசி பட்டியலில் பல்வேறு முஸ்லிம் சாதிகள் நீண்ட காலத்திற்கு முன்பே இணைக்கப்பட்டுள்ளனர்அவர்கள் முஸ்லிம்கள் என்பதால் இட ஒதுக்கீட்டைப் பெறவில்லை. மாறாக அவர்களது தொழில்சாதிசமூகத்தில், கல்வியில் பின்தங்கிய நிலை ஆகியவற்றின் காரணமாகவே அவர்கள் ஓபிசி-யினராக அங்கீகரிக்கப்படுகின்றனர்அனேகமாக அத்தகைய சாதிகளின் மிக நீண்ட பட்டியலை குஜராத் கொண்டுள்ளதுமேலும் 2022 இல் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு மோடி அளித்த நேர்காணலில் குஜராத்தில் 70 முஸ்லிம் குழுவினருக்கு ஓபிசி-யின் பலன்கள் அளித்ததற்காக அவர் மார்தட்டி கொண்டதைக் காண முடியும்பீகாரில் கற்பூரி தாக்கூரின் காலத்திலேயே முஸ்லிம் சாதியினர் ஓபிசி பட்டியலில் இணைக்கப்பட்டு விட்டனர்இது ஓபிசி இட ஒதுக்கீடு குறித்த மண்டல் கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கு 1990 இல் விபி சிங் அரசாங்கம் செய்த அறிவிப்பிற்கும் முன்பாகும். ஓபிசி பட்டியலில் பல்வேறு முஸ்லிம் சாதியினரை விபி சிங் அரசாங்கமும் கூட இணைத்தது. 1992 இன் முக்கியமான தீர்ப்பில் உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது உறுப்பினர்கள் கொண்ட அரசமைப்புச் சட்ட அமர்வு ஓபிசி இட ஒதுக்கீட்டின் செல்லுபடியை உறுதி செய்தது.

பின்தங்கியவறிய, 'பசமந்தாமுஸ்லிம்களுக்கான இயக்கத்தையும், 'சூஃபி சம்வத்' (சூஃபி உரையாடல்என்ற முஸ்லிம் சமூகத்தினரிடம் சென்றடைவதற்கான செயல்திட்டத்தையும் கூட பாஜக நடத்தியுள்ளது. அதன்மூலம் தானும் அனைவருக்குமான கட்சி தான் என்பதை காட்டிக் கொள்ள கடுமையாக முயற்சித்ததுஊழல்தேசப்பாதுகாப்பு ஆகிய பிரச்சினைகள் ஆதிக்கம் செலுத்திய 2014, 2019 களில் அது பெற்ற வாக்குகள் பெருமளவுக்கு அதனுடைய கருவான அடித்தளத்தையும் தாண்டியவை என்பதையும் அக் கட்சி உணர்ந்துள்ளதுஇப்போது அதனுடைய மையக்கருவான அடித்தளத்தை தூண்டிவிட பாஜக தீவிரமாக செயல்படுகிறதுஎனவே அது வெட்கமேயின்றி முஸ்லிம் எதிர்ப்பு வெறுப்பினை சார்ந்திருப்பதற்காகஅனைவரையும் உள்ளடக்குதல்வளர்ச்சி, நல்லாட்சி ஆகிய அதன் அனைத்து முகமூடிகளையும் கழற்றிவிட்டது. குஜராத்தில் நன்கு பயன்பட்டவெறுப்பையும் பிளவையும் உருவாக்கும் இந்த சூத்திரத்தை இந்தியா நிராகரித்துஅரசமைப்புச்  சட்ட அடிப்படையையும் கலாச்சார பன்மைத்துவ உணர்வு, சம குடியுரிமையையும் நோக்கி திரும்புவதற்கான அறிகுறியை 2024 தேர்தல்கள் நமக்கு வழங்குகின்றன.

மோடியின் காலத்தில் இட ஒதுக்கீட்டை பலவீனப்படுத்துகிற செயல்பாடுகளேஇன்றைக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக உண்மையிலேயே கவலைப்பட வேண்டிய விசயமாகும்பொருளாதார நிறுவனங்களும் சமூகத்துறைகளும் கண்மூடித்தனமாக தனியார்மயமாக்கப்படுவதுவேலைகளை ஒப்பந்தமயமாக்குவது ஆகியவை இட ஒதுக்கீட்டின் வாய்ப்புகளை பெருமளவிற்கு சுருக்கியுள்ளனஅதனை கிட்டத்தட்ட தேவையற்றதாகவும் ஆக்கியுள்ளனமேலும் இட ஒதுக்கீட்டைத் தவிர்க்கவும், ஒழித்துக் கட்டவும் நிர்வாகத்துறையின் உயர்பதவிகளில் குறுக்குவழி நுழைவுமுறை விரிவுபடுத்தபட்டுள்ளதுபீகாரில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்பும், விரிவுபடுத்தப்பட்ட இட ஒதுக்கீடுமே சமூகநீதியின் கோணத்திலிருந்து இன்றைக்கு எழுந்து வருகிற உண்மையான தேவையாகும்பீகாரின் இட ஒதுக்கீட்டினை 65% ஆக (10% ஈடபிள்யுஎஸ் இட ஒதுக்கீட்டைத் தாண்டிவிரிவுபடுத்தியது இந்தியாவிற்கான முன்மாதிரியை வழங்குகிறதுபீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்க்க இயலாத பாஜக அகில இந்திய மட்டத்தில் அதனை எதிர்க்கிறது. எனவே அது முஸ்லிம்களுக்கு எதிராக எஸ்சி/எஸ்டி/ஓபிசியினரை நிறுத்துவதன் மூலம் இட ஒதுக்கீட்டு விவாதத்தை மதவெறிமயமாக்க தீவிரமாக முயற்சிக்கிறது. அடிப்படையில் இட ஒதுக்கீட்டிற்கு எதிரான தனது சொந்த பார்ப்பனிய அணுகுமுறை பற்றிய (நமதுகவனத்தை திசை திருப்பவும் முயற்சிக்கிறது.

இந்தியாவில் சமூகநீதி கருத்துக்கும் இட ஒதுக்கீட்டிற்கும் ஆர்எஸ்எஸ் இன் வரலாற்று ரீதியான எதிர்ப்பு ஒன்றும் ரகசியமானதல்ல. ஓபிசி இட ஒதுக்கீடு சம்பந்தமான மண்டல் கமிஷனின் பரிந்துரையை அமுல்படுத்தும் அறிவிப்பை எதிர்த்து, 1990 இல் விபி சிங் அரசாங்கத்திற்கான தனது ஆதரவை பாஜக விலக்கிக்கொண்டதுமோடியின் 2014 வெற்றியைத் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என முன்வைத்தார்இன்றைக்கு அவரே, 2000 ஆண்டுகள் சாதிய ஒடுக்குமுறை காரணமாக இன்னுமொரு 200 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீட்டை 'பொறுத்துக் கொள்ளத்தான்வேண்டும் என பேசத் தொடங்கி இருக்கிறார்!

இன்றைக்கு இந்தியாவில் உள்ள பொது மக்களுடைய கவலை இனிமேலும் இட ஒதுக்கீடு பிரச்சனையோடு மட்டும் குறுகியிருக்க முடியாதுஇந்திய அரசமைப்புச் சட்டத்தின் எதிர்காலம் குறித்து கவலை கொள்வதற்கான காரணங்கள் மக்களுக்கு உள்ளதுஅம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்துடன் கோல்வால்கரின் ஆர்எஸ்எஸ்-சுக்குள்ள வரலாற்று ரீதியான பகைமையுணர்வை புறக்கணித்தால் அது உண்மையில் நவீன இந்தியாவுக்கு பேரழிவாகவே அமையும்இந்திய அரசமைப்புச்  சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேரத்தில் ஆர்எஸ்எஸ் அதனை வெளிப்படையாகக் கண்டித்தது. மேலும் இந்தியாவிற்கான லட்சிய அரசமைப்புச் சட்டமாக மனுஸ்மிருதிக்கு வெளிப்படையான ஆதரவை தெரிவித்ததுபாஜகவிற்கு தனியாக பெரும்பான்மை இல்லாத போதும் கூட, வாஜ்பாயிஅத்வானியால் தலைமை தாங்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தின் செயல்பாடுகளை மறு பரிசீலனை செய்வதற்கு ஒரு ஆணையத்தை நியமிக்கத் தயங்கவில்லைகடந்த பத்தாண்டுகளில் இந்த மோடி அரசாங்கம் ஏற்கனவே அரசமைப்புச் சட்டத்தின் மீது ஆயிரம் வெட்டுக்களை ஏற்படுத்திவிட்டது. அதனுடைய ஆன்மாவையும் கோட்பாடுகளையும் பலவீனப்படுத்திஒவ்வொரு வாய்ப்பிலும் அதனுடைய அடிப்படைக் கட்டுமானத்தையே சேதப்படுத்துகிறது.

மோடி ஆட்சிஅதன் கொள்கைகளை முழு ஆற்றலோடு செயல்படுத்துவதற்கு ஒரு புதிய அரசமைப்பு சட்டம் வேண்டும் என இந்திய விடுதலையின் 75 வது ஆண்டு விழாவின் போதுமோடியின் முதன்மை பொருளாதார ஆலோசகர் விவேக் தேப்ராய் எழுதினார்அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டம் ஒரு காலனிய ஆவணம் எனவும் 'காலனியமயமகற்றுதல்என்னும் பெயரில் ஒரு புதிய அரசமைப்புச்  சட்டத்திற்கு ஆதரவாகவும் பேசுகிற துணிச்சல் சில சங்கி கருத்தியலாளர்களுக்கு இருக்கிறது. எனவே அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொண்ட சமயத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் வெளியிட்ட எச்சரிக்கைகளை இந்தியா நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இதுவாகும். அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தினுடைய கருவான அம்சங்களான நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பு முறைதடுப்புகளும் சமநிலைகளும் கொண்ட அதனுடைய நிறுவனக் கட்டமைப்பு, அதிகாரப் பகிர்வுகூட்டமைப்புச் சட்டகம் ஆகியவை பெரும் ஆபத்துகளை எதிர்கொள்கின்றன. சண்டிகர்கஜுராஹோ முதல் சூரத்இந்தூர், அருணாசலப் பிரதேசம் வரையில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதிலிருந்து வாக்கு எண்ணிக்கை வரையிலும்தேர்தல்களின் பல்வேறு நிலைகளில் புதிய மாதிரிகள் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனஅதன்மூலம் தேர்தல் நடைமுறையின் நம்பகத்தன்மை  சவாலுக்கு உள்ளாக்கப்படுகிறது.

2024 இல் அதன் மிகப்பெரிய தேர்தல் 'துருப்புச் சீட்டாகராமர் கோவிலை பாஜக நம்பியிருந்தது. ஜனவரி 22 இல்அயோத்தியில் ஒரு முழுமை பெறாத கோவிலைத் திறந்துதேர்தல்களின் முக்கியத்துவத்தை குறைக்கிற, கண்ணைக் கவரும் காட்சியாக அதனை மாற்றியது. 'ராமரை கொண்டு வந்தவர்களை நாங்கள் கொண்டு வருவோம்என்ற பாடல் 2024 இன் தேர்தல் கீதமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டதுஆனால் கோவிலை அரசியலாக்கும் பாஜகவின் முயற்சியும்அதனை பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற எதிர்பார்ப்பும் இந்த தேர்தல்களில் வீணாய் போனது போலவே தெரிகிறதுமூன்றாம் கட்டத் தேர்தல்களையொட்டி மோடியின் அயோத்தி சுற்றுப்பயண நிகழ்ச்சிசமாஜ்வாடி கட்சியும் காங்கிரசும் ஆட்சிக்கு வந்து விட்டால் கோவிலை மருத்துவமனையாக மாற்றி விடுவார்கள் என்கிற மறைமுகமான குறிப்பு, அரசமைப்புச் சட்டம்இட ஒதுக்கீடு முறை ஆகியவற்றின் நிலைத்தன்மை குறித்து மோடிஷாபகவத் ஆகியோர் இந்தியாவிற்கு அளிக்கும் உத்தரவாதம் ஆகியனஇந்த ஆளுகை நிச்சயமாக நிகழப் போகிற தோல்வியிலிருந்து தப்பிக்க முயற்சிக்கிறது என்பதை புரிந்துகொள்வது கடினமானதல்ல. 543 தொகுதிகளில் பாதிக்கும் அதிகமானவற்றில் வாக்குப் பதிவுகள் முடிந்து விட்டன. ஆரம்பகட்ட வாக்குப்பதிவுகள் இந்தியா கூட்டணி தீர்மானகரமாக முன்னணியில் இருப்பதைக் காட்டுகின்றனஎதிர்வரும் அடுத்த கட்டத் தேர்தல்களில் இது அறுதிப் பெரும்பான்மையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்சர்வாதிகார மோடி ஆளுகையின் பேரழிவுமிக்க ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.