தஞ்சை மண்ணில் நிலப்பிரபுத்துவ கொடுமைகளுக்கு எதிராக.. பாட்டாளி வர்க்க விடுதலைக்காக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மிகப்பெரிய விலை கொடுத்தது வரலாறு. '40 கள் தொடங்கி '60 கள் வரை செங்கொடி ஏந்திய பல தலைவர்கள், தொண்டர்கள் பலர் வீரமரணம் அடைந்துள்ளனர்.
தோழர்கள் வாட்டாக்குடி ரணியன் களப்பால் குப்பு, இன்னும் பலர் நிலவுடைமை ஆதிக்கத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் உச்சமாக, கீழ் வெண்மணியில் பெண் கள், குழந்தைகள், ஆண்கள் என 44 விவசாயக் கூலிகள் குடிசையில் வைத்து கொளுத்தப் பட்டார்கள்.
புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் புரட்சிகர கூலி, ஏழை விவசாயிகள் இயக்கத் தையும் முன்னெடுத்துச் செல்லும் முயற்சியாக, '70கள் தொடங்கி '90கள் வரை தோழர்கள் அப்பு முதல் சுப்பு வரை வீரமரணமடைந்தார்கள். மேலத் தஞ்சையில் திருப்பனந்தாள் ஒன்றியம், மணலூர் பகுதியில் உழைக்கும் மக்களின் விடுதலைக்காக பாடுபட்ட தோழர்கள் சந்திர குமார், தோழர் சந்திரசேகர் ஆகியோர் நிலவு டைமை ஆதிக்கத்தால் 1984, செப்டம்பர் 2 அன்று, அதிமுக ஆட்சி காலத்தில், மிகக் கொடூ ரமாக படுகொலை செய்யப்பட்டனர்.
கொடூரமான சாதி ஆதிக்கத்துக்கு எதிராக தலித் உழைக்கும் மக்களது சுயமரியாதை, சமத்துவத்துக்காகப் போராடி மக்கள் எதிரிகளால் 1994 செப்டம்பர் 13 அன்று படுகொலை செய்யப்பட்டார் மாடக் கோட்டை (சிவகங்கை) தோழர் சுப்பு. இந்தப் படுகொலை யும் அதிமுக ஆட்சி காலத்திலேயே நடை பெற்றது.
புரட்சிகர கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சிக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட தோழர்கள் சந்திரகுமார் சந்திரசேகர் நினைவு நாளான செப்டம்பர் 2 தொடங்கி தோழர் சுப்பு நினைவுநாளான செப்டம்பர் 13 வரை மணலூர் (தஞ்சாவூர் மாவட்டம்) தொடங்கி மாடக் கோட்டை (சிவகங்கை மாவட்டம்) வரை பரப்புரை பயணம் நடத்தப்பட உள்ளது.
தோழர் சந்திரசேகர் தோழர் சந்திரகுமார் நினைவு நாளான.. செப்டம்பர் 02 அன்று அவர்களது நினைவிடத்தில் (மணலூர்) அஞ்சலி செலுத்தப்படும். தோழர் சந்திரகுமார் பிறந்த ஊரான பெருந்தோட்டத்திலிருந்து (மயிலாடுதுறை மாவட்டம்) தோழர்கள் பரப்புரை நிகழ்வாக சீர்காழி, மயிலாடுதுறை, குத்தாலம் வழியாக மணலூர் வந்துசேர்கிறார்கள். அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு ஆடுதுறை, திருமங்கலக்குடி வழியாக திருப்பனந்தாள் வந்தடைகிறது. பிற்பகல் 4.00 மணிக்கு திருப்பனந்தாள் நகரில்,
நிலம், வேலை, கவுரவம்,ஜனநாயகம் பெறப் போராடுவோம்!
கார்ப்பரேட் காவிப் பாசிச மோடி ஆட்சியை வெளியேற்றுவோம்!
என்ற முழக்கத்துடன் "நினைவேந்தல் பொதுக்கூட்டம்"
நடக்கிறது. அந்தக் கூட்டத்தில் இகக(மா லெ), அவிகிதொச தலைவர்களுடன் இடதுசாரி கட்சிகள், விசிக உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு ஆளுமைகளும் பங்கு பெறுகிறார்கள்.
மக்களுக்காகவும், கட்சிக்காகவும் தனது குடும்பத்தில் ஒருவரை இழந்து அளப்பரிய தியாகம் செய்த தோழர் சந்திரசேகர், தோழர் சந்திரகுமார் ஆகியோரது குடும்ப உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கவுரவிக்கப்பட உள்ளனர்.
திருப்பனந்தாளில் தொடங்கும் பரப்புரை பயணம், கும்பகோணம் பாபநாசம் வழியாக தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங் களின் முக்கிய ஊர்கள் வழியாக செப்டம்பர் 13 அன்று மாடக்கோட்டை சென்றடையும். மாடக் கோட்டை தோழர் சுப்பு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் மாலை தோழர் சுப்பு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு தேவகோட்டையில் நடைபெற உள்ளது.
இந்த பரப்புரை பயண காலத்தில் மேற் கண்ட அய்ந்து மாவட்டங்களிலும் நூற்றுக் கணக்கான ஊராட்சிகளில் 'மக்கள் சந்திப்பு' நிகழ்ச்சிகள் பெரிய அளவில் நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. பரப்புரை பயணத்திற்கு வரவேற்பு நிகழ்ச்சிகள் நடத்துவதோடு, தீப்பொறி சந்தா சேர்ப்பு, பெண்கள் கழக மாவட்ட மாநாடுகள் நடத்துவது, சென்னை மாணவர்-இளைஞர் ஆர்ப்பாட்டத்துக்கு அணிதிரட்டுவது, நிதி திரட்டுவது உள்ளிட்ட பணிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.
இந்த பயணத்தின் போது ஆங்காங்கே "இன்டியா" கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள், ஜனநாயக ஆளுமைகளை அழைத்துப் பேச வைப்பதென்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த பரப்புரை பயணம் கிராமப்புற மக்கள் மத்தியில் மிகப்பெரிய விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக இருக்கவும் கிராமப்புற இயக்கத்தில் ஒரு புதிய முன்னேற்றத்துக்கான அடித்தளத்தை ஏற்படுத்துவதாகவும் அமைய திட்டமிட்டு செயல்பட வேண்டுமென்றும் உணரப்பட்டது. அன்றைய காலத்தில் கொடூர மான நிலப்பிரபுத்துவ சக்திகளை எதிர்த்து தீவிரமான போராட்டங்களை நடத்தினோம். இன்றைய மாறியுள்ள சூழலில், 'செங்கோல்' என்ற பெயரிலும் ராஜாக்கள் பெருமையிலும் இந்துத்துவ மதவெறி சக்திகள் உக்கிரம் பெற்று வருகின்றன. இதன் பின்னால், பிரபுத்துவ சாதி ஆதிக்க சக்திகள் அணிதிரண்டு வருகின்றன. இந்த மக்கள் விரோத சக்திகளை தோற்கடிப்பதே தோழர்கள் அப்பு, பாலன், மச்சக்காளை, சந்திரசேகர் சந்திரகுமார், சுப்பு இவர்களின் போராட்ட மரபாகும். இதுவே நமது தியாகி களுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகவும் இருக்கும்.
பரப்புரை பயணம் செல்லும் ஊராட்சிகள் தயாரிப்புக் கூட்டங்களை விரிவாக நடத்தி மேற்சொன்ன கடமைகளை வெற்றிகரமாக செய்து முடிக்க வேண்டும். பொது நிகழ்ச்சிகளில் தீப்பொறி சந்தா, நிதியளிப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.
தியாகிகள் சந்திரகுமார் - சந்திரசேகர், சுப்பு பெயரால் உறுதி ஏற்போம்!
பரப்புரை பயணத்தை வெற்றி பெறச்செய்வோம்!
கார்ப்பரேட் காவிப் பாசிச மோடி ஆட்சியை விரட்டியடிப்போம்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)