இராணிப்பேட்டைசோளிங்கர்

டிவிஎஸ் குருப் பிரேக்ஸ் இந்தியா கம்பெனியில்

ஏஐசிசிடியு சங்கம்!

இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் டிவிஎஸ் குருப் பிரேக்ஸ் இந்தியா பவுன்டரி யூனிட்டில் சுமார் 2000 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்இதில் 1200 நிரந்தர தொழிலாளர்கள் 800 பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள்ஒப்பந்தத் தொழிலாளர்களாக வேலைக்கு எடுக்கப்பட்டு 10 ஆண்டுகள் கழித்து பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்நிரந்தரத் தொழிலாளர் செய்யும் அதே வேலையை ஒப்பந்தத் தொழிலாளர்கள் செய்கின்றனர். நிரந்தரத் தொழிலாளிக்கு மாதம் ரூ.35,000 சம்பளம், ஒப்பந்தத் தொழிலாளிக்கு  மாதச் சம்பளம் ரூ.15,000.

15 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்படவில்லை. நிரந்தரஒப்பந்தத் தொழிலாளர்களை உள்ளடக்கிய ஐஎன்டியுசி சங்கம் உள்ளதுசந்தாவை நிர்வாகமே பிடித்துக் கொடுக்கிறது. அது நிர்வாகத்தின் எடுபிடி சங்கமாக செயல்படுகிறதுபணி நிரந்தரம் கேட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் நோக்கோடு ஆந்திரா மாநிலம் நாயுடு பேட்டைக்கு கட்டாய பணியிடமாற்றம் செய்ததுஐஎன்டியுசி சங்கத்தை அணுகினர்அச்சங்கம் நிர்வாகம் சொல்லும்படி கேளுங்கள் என்று கூறிவிட்டது.

இது பழி வாங்கும் நடவடிக்கை, எனவே பணியிடமாற்றத்தை  ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று ஒப்பந்தத் தொழிலாளர்கள் சொன்னார்கள்இந்தச் சூழ்நிலையில் தொழிலாளர்கள் ஏஐசிசிடியுதமிழ்நாடு ஜனநாயக பொது தொழிலாளர் சங்கம்தொழிற்சங்கத்தை நாடினர். 03.06.2024 அன்று பணிக்கு வந்த சுமார் 55 தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க மறுத்து வெளியே நிறுத்தியது நிர்வாகம்தொழிலாளர்கள் தொழிற்சாலை வாயிலில் போராட்டத்தை தொடர்கின்றனர்ஏஐசிசிடியு மாநில சிறப்புத் தலைவர் சொ.இரணியப்பன்வேலூர் மாவட்டத் தலைவர் ஏ.ஏழுமலைமாவட்டப் பொதுச்செயலாளர் சீ.சிம்புதேவன்சிபிஐஎம்எல்  வேலூர் மாவட்டச் செயலாளர் எம்.சரோஜா ஆகியோர் வழி நடத்தி வருகிறார்கள்போராட்டம் தொடர்கின்றது.