நீதிபதி சந்துரு ஆணைய பரிந்துரைகள் சட்டப்பேரவையில் வைக்கப்படவேண்டும்

    திருநெல்வேலி மாவட்டம்  நான்குனேரியில் 2023 ஆகஸ்ட்அன்றுபட்டியல் சமூக மாணவர்சின்னதுரையும் அவரின் சகோதரியும் இடைநிலைச் சாதியைச் சேர்ந்த, சக மாணவர்களால் வெட்டப்பட்டார்கள்சின்னதுரை தன்னோடு பள்ளியில் படிக்கும் இடைநிலைச் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் விடுத்த ஏவல் பணிகளைச் செய்ய மறுத்தும் அது பற்றி பள்ளியில் புகார் அளிக்கப்பட்டதுதான் தாக்குதலுக்கான காரணம். 'ஏவல் பணிகளைச் செய்வது அடிமைகளின் அடையாளம், ஏவுவது எஜமானர்களின் சுபாவம்என்பது சமூகத்தில் ஊறியிருக்கும்  மூடத்தனம்.

இத்தாக்குதலைக் கண்டித்து தமிழ்நாட்டில் வலுவான குரல்கள் எழுந்தனஅதைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிகளில் நிலவும்  சாதிய வேறுபாடுகள் குறித்து ஆய்வு செய்துஅதற்கு தீர்வு காண்பதற்காக  நீதிபதி சந்துரு தலைமையிலான ஒரு நபர் ஆணையம் ஒன்றை ஆகஸ்ட் 2023ல் தமிழ்நாடு அரசு அமைத்ததுபல மாவட்டங்களுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்த நீதிபதி சந்துருபாதிக்கப்பட்டவர்களையும் பிறரையும் சந்தித்தார்தனது அறிக்கையை 2024 ஜூன் 18 அன்று தமிழ்நாடு முதலமைச்சரிடம் அளித்தார்உடனே, "அறிக்கை இந்துக்களுக்கு எதிரானதுஅதனை முழுமையாக புறக்கணிக்கப்பட வேண்டும்", 'நெற்றியில் பொட்டு வைப்பதை யார் எதிர்க்க முடியும்?' என்று பாஜகவின் எச்.ராஜா பொங்கியெழுந்தார்இந்துக்களுக்கு எதிரான இந்தப் பரிந்துரைகளை தமிழக அரசு ஏற்கக் கூடாது என்றார் அண்ணாமலைபள்ளிகளில் சாதி ஆதிக்க வெறி பரவுவதைத் தடுப்பதற்கான பரிந்துரைகளை பாஜக எதிர்ப்பது அவர்களின் இந்துத்துவ அரசியலுக்கு ஆபத்து வந்து விடுமே என்றுதான்கல்வி நிலையங்களில் சாதி ரீதியிலான பாகுபாடுகளையும் வன்முறைகளையும் தடுப்பதற்கான வழிமுறைகள் என அறிக்கை முன்வைக்கும் பரிந்துரைகளில் சில.

  •  சாதி அடையாளம்  காட்டும்  வண்ணக்  கயிறுகளைக் கையில் கட்டுவதுநெற்றியில் பொட்டு வைப்பதுவளையங்களை அணிவது போன்றவற்றை பள்ளிகளில்   அணியக் கூடாது.
  • சாதி அடையாளம் காட்டுகின்றஅல்லது சாதி உணர்வுகளை வெளிப்படுத்துகின்ற சைக்கிள்களைப் பயன்படுத்தக் கூடாது.
  • இதுபோன்றவை குறித்துப் பெற்றோர்களை அழைத்துப் பேச வேண்டும். பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  •  பெயர்களின் அகர வரிசைப்படி மாணவர்கள் வகுப்பில் அமர வேண்டும். அதுபோலவேவருகைப் பதிவேட்டில் சாதி தொடர்பான எந்தக் குறிப்பும் இருக்கக் கூடாதுமாணவர்களின் சாதி இரகசியமாக வைக்கப்பட வேண்டும்.
  • மாணவரின் சாதிப் பெயரை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆசிரியர் குறிப்பிடக் கூடாதுதிட்டுவதற்கு சாதியைப் பயன்படுத்தக் கூடாது.
  •  பள்ளிகளின் பெயரில் சாதி இருக்கக் கூடாதுதற்போதுள்ள தனியார் பள்ளிகளின் பெயரில் சாதி அடையாளம் இருக்கும் என்றால்அதனை நீக்கும்படி பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தைக் கேட்டுக்கொள்ள வேண்டும்.
  • மத மற்றும் சாதிய நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் கல்வியை காவிமயப்படுத்துவது மற்றும் கல்வி நிறுவனங்களில்  காவி கருத்தியலைப் பரப்பும் நடவடிக்கைகள், ஊடுருவல் தொடர்பான குற்றச்சாட்டுகள் பற்றி விசாரிக்க நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
  •  உயர் நிலை மற்றும் மேநிலை பள்ளி ஆசிரியர்கள் உரிய காலத்தில் இட மாற்றம் செய்யப்பட வேண்டும்ஒரு பகுதியில் ஆதிக்க சாதியாக இருக்கும் ஒரு சாதியைச் சேர்ந்தவர் அப்பகுதியின் தலைமை கல்விமாவட்ட கல்விவட்டாரக் கல்வி அதிகாரியாக பொறுப்பில் அமர்த்தக் கூடாது என்று கமிட்டி சொல்கிறது.
  • பள்ளிகளில் அற நெறி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.சமூக நீதிசமத்துவம்பாரபட்சம் காட்டாதிருப்பது குறித்த அறநெறி  வகுப்புக்கான உள்ளடக்கம் உருவாக்கப்பட்டு பொருத்தமான நபர்களைக்கொண்டுஅனைத்து வகைப் பள்ளிகளிலும், 6 முதல் 12 வரையிலான வகுப்புகளில் பாடம் எடுக்கப்பட வேண்டும்.
  •  மாணவர்களுக்கான உணவைப் பள்ளிகளில் சமைப்பதைத் தவிர்த்து ஒன்றிய அளவில் பொதுச் சமையல் கூடம் ஏற்படுத்தப்பட வேண்டும்.   
  •  பள்ளிகளில் அனைத்து சமூக  மாணவர்களையும் உள்ளடக்கியசமூக நீதி அரசியலைப் பரப்பும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும்சமூக நீதி மாணவர் படை (Social Justice Students Force -SJSF) அமைக்கப்பட வேண்டும்.
  •  பள்ளிகளில் மாணவர் சங்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்.

சாதியும் சமூகமும்

நமது சமூகத்தின் பிற்போக்குத் தன்மையின் அடையாளமாகவும் உந்து சக்தியாகவும் சாதி இருக்கிறதுஇந்து மதத்தின் உருவாக்கமான சாதி பிற மதங்களிலும் கூட தனது தடத்தைப் பதித்துள்ளது. ஒரு தனி நபரின் உடை அல்லது முகத்தில்  பூசும் பொருட்களைக் கொண்டே அவரின் சாதிஉள்சாதி என்ன என்று கண்டுபிடிக்க முடியும். அவரின் மதம் என்ன என்பதையும் கண்டறிய முடியும்மதங்களின் பெயரால் அரசியல் செய்து வெறுப்பை வளர்க்கும் பிஜேபி உள்ளிட்ட கட்சிகளுக்கு சாதி நிலைத்திருப்பது தேவையானதாக இருக்கிறதுஅதனால்தான்அவர்கள் சந்துரு அறிக்கையை எதிர்க்கிறார்கள். அறிக்கை குறிப்பிடுகின்ற அம்சங்கள் சமூகத்தின் பல அடுக்குகளில் சாதி இன்னமும் ஒரு சக்தியாகச் செயல்பட்டு சமூகத்தைப் பின்நோக்கி இழுப்பதைக் காட்டுகிறதுகுறிப்பாக  பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகளின் பணி இடம் பற்றி அறிக்கை பேசுவது சாதிகள் பள்ளி நிர்வாகத்தையும் கையில் எடுத்துக்கொண்டுள்ளன என்பதை  வெளிப்படுத்துகிறது.

பெரிய ஓட்டல்களில் சமைப்பவர் எந்த சாதியைச் சேர்ந்தவர் என்று தெரிந்து யாரும் சாப்பிடுவதில்லைஅதுபோல வட்டார அளவிலான பொதுச் சமையலறை என்பது தேவையான ஒன்றுதான்மேலும்பல பள்ளி மாணவர்களை பகுதி அளவில் இணைக்கும் சமூக நீதிக்கான மாணவர் இயக்கம்மாணவர் சங்கத்தின் தேவை என்ற முன்வைப்புகளும் கவனத்துக்குரியவை.

திராவிட முற்போக்கு இயக்கமும் சாதி ஒழிப்பும்

திராவிட முற்போக்கு அரசியலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்த சென்ற நூற்றாண்டு காலத்தில்சாதி ஒழிப்பு இயக்கங்களும்விழிப்புணர்வும் மிகவும் தூக்கலாக இருந்தனசாதிகளை பெயரின் பின்னால் வைத்துக்கொள்வது ஏறக்குறைய இல்லாத மாநிலமாக தமிழ்நாடு ஆகியிருக்கிறது.

இருந்தபோதும்திராவிட கட்சிகள் ஆட்சி அமைத்த பின்னர்தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக அக்கட்சிகளுக்குள் சாதி ஆதிக்கமும்சாதியப் பாகுபாடும் தங்களைப் புதுப்பித்துக்கொண்டனஅதனையொட்டிகீழ் மட்டம் வரையிலும் சாதி ஆதிக்கப் படிகளில் திராவிட கட்சிகளின் நபர்கள் இருந்து வழி நடத்துவதை தமிழ்நாடு எங்கும் பார்க்க முடிகிறது. ஒரு பகுதியில் ஆதிக்கம் செய்யும் சாதி நபர்களின்பெரும்புள்ளிகளின் கீழ்தான் கட்சிகளும்அரசு நிர்வாகமும் இயங்குகின்றன.

இந்த சூழலில்பெரியாரும் கம்யூனிஸ்டுகளும் முன்னின்று எடுத்த சாதி ஒழிப்புப் போரை மறுபடியும் ஒரு சமூக இயக்கமாக மாற்ற வேண்டியிருக்கிறதுபள்ளி மாணவர்கள் மத்தியில் ஜனநாயக நிறுவனங்கள் குறித்த பயிற்சியை அளிக்க மாணவர் சங்க தேர்தல்சமூக நீதிக்கான மாணவர் படை உள்ளிட்ட அமைப்புகள் தேவையாக இருக்கின்றன.

ஒரு புதிய பண்பாட்டுப் போர் தேவை

சாதி ஒழிப்பு இன்று அமெரிக்கா வரை பரவியிருக்கிறதுஅங்கே சென்று குடியேறிய மேல்சாதியினர் சாதி பாரபட்ச நடைமுறைகளை அங்குள்ள கம்பெனிகள்நிறுவன செயல்பாடுகளில் கொண்டுவந்துவிட்டதால் அவற்றைத்   தடுப்பதற்கான சட்டங்கள் கோரி அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் போராடிக்கொண்டுள்ளனர்.இங்கே ஒன்றிய ஆட்சியில் இருப்பவர்கள் நாடாளுமன்றத்திலேயே சாதிப் பெருமையைப் பேசுவதைக் கேட்க முடிகிறது.

இந்தியாவில் காவிப் பாசிச அபாயம் நீடிக்கும் சூழலில்பகுத்தறிவுப் பாரம்பரியத்தை இன்றைய சூழலுக்கு ஏற்ப முன்னெடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறதுஅந்த பெரும் பணிக்கு நீதிபதி சந்துரு கமிட்டி அறிக்கை உதவியாக இருக்கும்.

தமிழ்நாட்டின் இன்றைய இளைஞர்களும் சாதி ஒழிப்புபகுத்தறிவுமது உள்ளிட்ட போதைகளுக்கு எதிரான இயக்கத்தை துடிப்புடன் முன்னெடுக்க வேண்டும்.

நீதிபதி சந்துரு முன்வைத்துள்ள சமூக நீதிக்கான மாணவர் படை அமைக்கப்படவும்மாணவர் சங்கத் தேர்தல்களை நடத்தக்  கோரியும் நமது மாணவர்இளைஞர் அமைப்புகள் களம் காண வேண்டும்.

நீதிபதி சந்துரு அறிக்கையை உடனடியாக அமுலாக்கம் செய்ய வேண்டும் என்று நாம் தமிழ்நாடு அரசைக் கோர வேண்டும்.

முற்போக்கான இளைஞர்கள், அமைப்புகள் சமூக நீதிக்கான மாணவர் படை அமைப்பதை உடனே துவங்க வேண்டும்அந்தப் படையானது மாணவர்கள் மத்தியில் அம்பேத்கர்பெரியார் கருத்துகளைக் கொண்டு செல்ல வேண்டும். இல்லம் தேடி கல்வியில் கூட இதைக் கொண்டு வரலாம்.

அறிக்கையில் உள்ள சில விசயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளவும் முடியாத நிலை உள்ளது.  உதாரணமாகசமூகத்தில் பெண்களின் நெற்றிப் பொட்டானது பொதுவாக மத அடையாளம் என்பதை விடவும்  மதச்சார்பற்ற கலாச்சாரக் குறியீடாக மாறியுள்ளதுகணவனை இழந்த பெண்கள் பொட்டு வைக்கக் கூடாது என்பதை எதிர்த்து தற்போது பொட்டு வைத்துக் கொள்கிறார்கள்பாஜகவினர் இதை இந்து மதத்திற்கு எதிரானது என்று காட்டி நீதிபதி சந்துரு அறிக்கையை எதிர்க்கிறார்கள்பரிந்துரைகளில் வரவேற்க பல அம்சங்கள் இருக்கின்றன. அதேவேளை பரிந்துரைகளைத் தாண்டியும் சொல்லப் பட வேண்டியவை பல உள்ளனபொது விவாதத்திற்கு விடும் நோக்கில் அறிக்கை சட்டப் பேரவையில் வைக்கப்பட வேண்டும்.

மதிவாணன்