இகக(மாலெஆவணங்கள்: 

சுற்றுச்சூழல்காலநிலை நெருக்கடிபகுதி 5 )

(2023 பிப்ரவரி 16-20 வரை பாட்னாவில்நடைபெற்ற 11வது கட்சிக்காங்கிரசில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் )

20. பருவமழையின் சுழற்சிக்கும் பல்லுயிர் சூழலுக்கும் மிகக் கடுமையான பாதக விளைவுகளை ஏற்படுத்தி, மோசமான சமூகப் பொருளாதார சவால்களையும் பேரழிவு மிக்க சூழலியல் சேதத்தையும் ஏற்படுத்தக்கூடிய, தேசிய ஆறுகள் இணைப்புத் திட்டம் வடிவம் பெறத் தொடங்கிவிட்டது. யமுனை ஆற்றின் துணை ஆறுகளான கென்பெட்வா இரண்டையும் இணைப்பதை அமல்படுத்துவதற்கும்அதற்கான நிதிக்கும் ஒன்றிய அரசாங்கம்  அனுமதி வழங்கிவிட்டதுமுன் வைக்கப்பட்டுள்ள கென்-பெட்வா ஆறுகள் இணைப்புத்திட்டத்தால், மத்தியப் பிரதேசத்திலுள்ள பன்னா புலிகள் சரணாலயத்தின் கருப்பகுதியான இடத்திலுள்ள பெரும்பகுதிகள் மூழ்கும் என ஆய்வுகளின்படி தெரிய வந்துள்ளதுஅதன்மூலம், புலிகளும் அதன் முக்கிய உணவினங்களான புள்ளிமான்கள்கடமான்கள் ஆகியன பெரும் அழிவினைச் சந்திப்பதற்கு வழி வகுக்கும்இந்தத் திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டுள்ள 30 ஆறுகள் இணைப்புகளில் (தீபகற்ப பகுதியின் கீழ் 16 ம்இமயமலை பகுதியின் கீழ் 14 ம்இதுதான் அமல்படுத்தப்படும் முதல் இணைப்பு ஆகும்இது ஒட்டுமொத்தமாக நம்முடைய ஆறு அமைப்புகளை மாற்றியமைக்கும்பெருமளவு இடம்பெயர்தல்வாழ்வாதார இழப்புகளின் வழியாகவும்காட்டு வெளிகள்பல்லுயிர் சூழல் இழப்புகளின் வழியாகவும் நாடு முழுவதும் பேரழிவுகளை ஏற்படுத்தும். அணைகளின் எண்ணிக்கைதிசை திருப்பும் தடுப்பணைகள்கால்வாய்கள் ஆகியன ஆற்றின் இயற்கையான ஓட்டத்தை பாதித்து கழிமுகங்களின் இயற்கையான உயிர்த்துடிப்பை ஆபத்துக்குள்ளாக்கும்பெருஞ்செலவு பிடிக்கிற இத்திட்டம் காலநிலை நெருக்கடியை இன்னும் அதிகரிக்கும்காடுகளின் அழிவு என்பது அடிப்படையில் மிகவும் அரிதான கரிம புதைகுழிகளின் அழிவாகும்கூடுதலாகவெப்பமண்டல பகுதிகளின்  நீர்த்தேக்கங்கள் மீத்தேன்கரியமில வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றும் என்பது  நிறுவப்பட்ட அறிவியல் உண்மையாகும். ஆற்றுநீரின் மீது மக்களுக்கு உள்ள உரிமையை கைப்பற்றிகார்ப்பரேட் நலன்களுக்காக கடத்தும் முயற்சியாகும்.

 

தற்போது குஜராத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பார் டாப்பி நர்மதை ஆறு இணைப்புத் திட்டம் வால்சாட்டாண்ட்டாப்பி மாவட்டங்களில் வாழும் பழங்குடி மக்களுக்குப் பெரும் அபாயத்தை ஏற்படுத்தப்போகிறதுஇந்த இணைப்புத் திட்டமும்இத்திட்டத்தின்படி அமைக்கப்படவிருக்கும் பெரிய அணையும் செயல்பாட்டுக்கு வரும்போதுபழங்குடி மக்களின் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலமும்கிராமங்களும் நீரில் மூழ்கிவிடும்இப்பகுதியின் பழங்குடி மக்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் திரண்டுஇந்த இணைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்த போதும்பேரழிவு ஏற்படுத்தும் இந்த இணைப்புத் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தியே தீருவதென்று பிடிவாதமாக இருக்கிறது.

 

21. எளிதில் மாற்றமடையக்கூடிய இமயமலை நிலப்பரப்பில்குறிப்பாகஉத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசத்தில் பேரழிவு தரும் நிலச்சரிவுகள்பன்மடங்கு அதிகரித்துள்ளதாக சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றனஇமயமலை போன்ற நிலப்பரப்புகளில்மேக வெடிப்புகளின் காரணமாக நிலச்சரிவுகளும் திடீர் வெள்ளப் பெருக்குகளும் சாதாரணமானவைதான்என்றாலும், இத்தகைய பேரழிவுகளின் எண்ணிக்கையும் அளவும் அதிகரித்துக்கொண்டு செல்வதற்கு, ஆளும் வர்க்கத்தால் மேற்கொள்ளப்படுகின்ற சீர்குலைவு வளர்ச்சி நடவடிக்கைகளே காரணமாகும். சுற்றுலாவின் பெயரால் போடப்படும் சாலைகளின் அபரிமிதமான வளர்ச்சி, அணைகள் கட்டுதல்நீர் மின் திட்டங்கள்காலநிலை மாற்றத்தின் விளைவுகள் ஆகியவைதான் இத்தகைய பேரழிவுகளின் எண்ணிக்கையும் அளவும் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணமாகும்நகர்ப்புரங்களை மையமாகக்கொண்ட தொழில்களின் வளர்ச்சிக்காகவும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காகவுமே உள்ளூர் மக்களின் வாழ்வு, வாழ்வாதாரத்தை விலையாகக் கொடுத்து இந்த வளர்ச்சித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 

இமயமலை நகரமான ஜோசிமத் புதைந்து போனதன் சமீபத்திய நெருக்கடிகுடியிருப்புகளிலும் மற்ற கட்டிடங்களிலும்  கடுமையான விரிசல்கள் ஏற்பட்டதுஅரசாங்கத்தின் சரியான புனர்வாழ்வு நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் பல குடியிருப்புவாசிகள் காத்திரமான விதத்தில் நகரத்திலிருந்து  வெளியேற்றப்பட்டது ஆகியவை நொறுங்கிக் கொண்டிருக்கும் இமயமலை உடலியலின் மீது பொறுப்பற்ற மனிதத் தலையீடு நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கான பளிச்சென தெரியும் உதாரணங்களாகும்.அய்எஸ்ஆர்ஓ வெளியிட்ட செயற்கைகோள் படங்கள் வெறும் 12 நாட்களிலேயே நகரம் 5.4 சென்டிமீட்டர் அளவு புதைந்து விட்டதை வெளிக்காட்டின. (பின்னர் அவை மர்மமானமுறையில்இணையதளத்திலிருந்துநீக்கப்பட்டுவிட்டன).சுற்றுலா நோக்கங்களுக்காக கட்டுப்பாடற்ற விதத்தில் நகரத்தில் சாலைகளும் கட்டிடங்களும் கட்டப்பட்டதுவே இந்தப் பேரழிவுக்கான மிகப்பெரிய காரணமாகும்அருகிலேயே தபோவன் நீர்மின் திட்டத்துக்கான அகழாய்வு மேற்கொண்டு நிலத்தடி நீர் வெளியேற்றப்பட்டதாலும் நிலச்சரிவு ஏற்பட்டதாலும் இவ்வளவு வேகத்தில் ஜோசிமத் புதைய காரணமாய் அமைந்துவிட்டதென்று பலவிஞ்ஞானிகளும் சுற்றுச்சூழல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விடுதலை பெற்ற தொடக்க நாட்களிலிருந்து மேற்கொள்ளப்படும் பெரிய அணைத் திட்டங்களால் ஏற்பட்ட பேரிடர்களில் இருந்து இந்திய ஆளும் வர்க்கம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.   பெரிய அணைகள்ஏற்கனவே இந்த அணைகளுக்கு அருகிலுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை இடம்பெயரச் செய்துஉள்ளூர் வனங்களையும் உயிர்ச்சூழலையும் நாசமாக்கிப் பேரழிவை ஏற்படுத்தியுள்ளனநர்மதை நதி திட்டத்திற்கு எதிராக பழங்குடியினர்விவசாயிகள்சூழலியலாளர்களின் பல பத்தாண்டு கால போராட்டத்தைப் புறக்கணித்து அந்த ஆற்றின் மீது கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணையை பிரதமர் நரேந்திர மோடி 2017ஆம் ஆண்டு பெருமையுடன் திறந்து வைத்தார்விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியும், குஜராத்மத்திய பிரதேசம்மஹாராஷ்டிரா மக்களுக்கு மின்சார வசதியும் வழங்கவே நர்மதை ஆற்றில் அணைகள் அமைக்கப்படுகின்றன என்று சொல்லப்பட்டதுஉண்மையில் சர்தார் சரோவர் அணையிலிருந்து தண்ணீர் தொழிற்சாலைகளுக்குதான் அனுப்பப்படுகிறதுஆனால்குஜராத்தின் வறட்சி பாதிக்கும் பகுதிகளின் விவசாயிகளோ நீருக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என செய்திகள் சொல்கின்றன.

 

22. உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள்எளிதில்பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள்குடிமைச் சமூக ஆர்வலர்கள்மாணவர்கள், இளைஞர்கள் தலைமையில் போராட்டக் குரல்களும் அமைப்பாக்கப்பட்ட போராட்டங்களும் இந்த சுரண்டல் மாதிரிக்கு சவால் விடுகின்றனஅவை, அரசாங்கங்களிடமிருந்தும் பெருநிறுவனங்களிடமிருந்தும் நடவடிக்கைகளைக் கோருகின்றனசுரங்க நிறுவனங்கள்ஆலைகளின் லாபவெறியினால்  ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை எதிர்த்து இந்திய மக்களும் போராடிக்கொண்டிருக்கின்றனர்ஒடிசாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ள  வேதாந்தா ஆலையின் காரணமாக ஏற்பட வாய்ப்புள்ள ஆதிவாசிகளின் இடப்பெயர்ச்சியையும்சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் எதிர்த்து நடந்தநியாமகிரி மலை பழங்குடிகளின் உத்வேகமளிக்கும்  போராட்டம்சுற்றுச்சூழல் ரீதியில் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய ஒடிசாவின் கடற்கரை பகுதியில் பரிந்துரைக்கப்பட்டுள்ள போஸ்கோவின் பெருந்தொழிற்சாலைக்கு  எதிராக நடந்த ஜகத்சிங்பூர் மக்களின் வெற்றிகரமான இயக்கம்வேதாந்தாவின் மாசுபடுத்தும் தாமிர ஆலைக்கு எதிராக தமிழ்நாட்டின் தூத்துக்குடி மக்கள் நடத்திய துணிச்சல்மிகுந்த போராட்டம்இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடிகள்அழிவு ஏற்படுத்தும் அதானியின் நிலக்கரி சுரங்கங்களுக்கு எதிராக நடத்திக்கொண்டிருக்கும்  போராட்டங்களும் அவர்களின் மற்ற பிற  போராட்டங்களும் இந்தியாவில் தொழில்நிறுவன சூறையாடலுக்கு எதிரான இந்தியாவின் புகழ்வாய்ந்த மரபை முன்னெடுத்துச் செல்கின்றனதியோச்சாபாச்சமிஆரவல்லி மலைகள்அயோத்தி மலைகள்பக்ஸ்வாஹா, திலாபனி மலைஆரேதெகிங்பட்கைவிழிஞ்சம், கர்பியாங்லாங்-திமா ஹசாவோவேறுபல இடங்களிலும்இக்காலத்திய அரச பயங்கரவாதத்தையும்அனைத்து வகையான அட்டூழியங்களையும்எதிர்கொண்டு,தொழில்நிறுவனக்கொள்ளையையும்இடப்பெயர்ச்சியையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் எதிர்த்துப் போராடுவதில் முன்னணியில் உள்ள மக்களுக்கு நாம் வணக்கம் செலுத்திட வேண்டும்.

 

23. நாட்டில் விவசாயிகளின் பெருந்திரள் போராட்டங்களுக்கு எப்படி ஆதரவளிப்பது என்பதை கோடிட்டுக் காட்டும் இணையவழி "போராட்டக் கருவித்தொகுப்பை" "உருவாக்கிபகிர்ந்து கொள்ள உதவியதற்காக, 21 வயதே ஆன காலநிலை ஆர்வலர் திஷா ரவியைமோடி அரசாங்கம் வெட்கங்கெட்டமுறையில் பலிகடா ஆக்கியதுதேசத்துரோகம், குற்றச்சதியில் ஈடுபடல்இந்திய அரசுக்கு எதிராக அதிருப்தியை பரப்புதல், பகைமையை ஊக்குவித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளும் இதில் அடங்கும். சர்வதேச அளவில்காலநிலை மாற்ற பிரச்சனையில் உறுதியான நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கங்களை வலியுறுத்தும் வகையில் வெகுமக்கள் போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்ததன் மூலம்காலநிலை ஆர்வலர்களான கிரேட்டா துன்பெர்க், லிசிப்ரியா கங்குஜம் போன்றோர் உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளனர். காலநிலை மாற்ற நிகழ்ச்சி நிரலை நமது அன்றாட செயல்பாட்டில் இணைத்துக்கொண்டு குறிப்பிட்ட கோரிக்கைகளுக்கும் போராட்டங்களுக்கும் நாம் ஆயத்தமாகிக் கொள்ள வேண்டும். காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை வளர்த்தெடுப்பதற்கான நிகழ்ச்சி நிரலை உள்ளடக்கியதாகவும் மாணவர்இளைஞர் இயக்கத்தின் பங்கு இருக்கவேண்டும். பழங்குடியினர்விவசாயிகள்விவசாயத் தொழிலாளர் அமைப்புகள்தொழிற்சங்கங்கள்மலைப்பகுதிகள், கடலோரப்பகுதிகள்எளிதில் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புள்ள பகுதிகளில் பணிபுரியும் பிற வெகுமக்கள் அமைப்புகள் அரசாங்கத்தின் வனம் சார்ந்த கொள்கைகளையும் நடவடிக்கைகளையும்  கண்காணிக்க வேண்டும்.

 

 -தொடரும்