தலையங்கம்

தமிழ்நாட்டு மக்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீறு கொண்டு எழச்சி பெறச் செய்த வஉசி பிறந்தது செப்டம்பர் 5. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் செப்டம்பர் 17. அவர் வழியில் வந்த அண்ணாதுரை பிறந்தது செப்டம்பர் 15. திமுக உருவானது செப்டம்பர் 16. தமிழ்நாட்டின் சமூக, அரசியல் வரலாற்றைப் புரட்டிப் போட்ட, தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு தந்த, விடியல் தந்த மாதம் செப்டம்பர். அதே செப்டம்பர்தான் இப்போது இருட்டையும் இடியையும் மின்னலால் அல்ல, மின்சாரத்தால் தரப் போகிறது திமுக அரசு. விடியலுக்குப் பதிலாக இருட்டை தமிழக மக்களுக்கு முப்பெரு விழா பரிசாகத் தந்துள்ளது.

இலங்கையில் மாணவர்கள் மீது போலீஸ் தாக்குதல்

இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் ஜனநாயக சீரழிவுக்கு எதிராகப் போராடிய பல்கலைக் கழக மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவ செயற்பாட்டாளர்கள் மற்றும் பல அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மீதும் புதிதாகப் பதவி ஏற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கே அரசாங்கம் காவல்துறை மூலம் தாக் குத ல் தொடுத்துள்ளது. ஆகஸ்டு 25 அன்று ஆயிரக்கணக்கான மாணவர்களும் செயற்பாட்டாளர்களும் கொழும்பு தெருக்களில் திரண்டார்கள். அவர்கள் சமீபத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்த போராட்டக்காரர்களை கைது செய்ததைக் கண்டித்தும் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யக் கோரினார்கள்.

பொது விநியோகத்தை,நெல் கொள்முதல் பாதுகாக்க, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தைப் பாதுகாப்போம்!

கடந்த 74வது சுதந்திரநாள் உரையில் மோடி, நாட்டின் செல்வத்தை உருவாக்குபவர் முதலா ளிகள்: அவர்களை கவுரவப்படுத்துவதே அரசின் முதன்மையான கடமை என்றார். அதற்கேற்ப மூர்க்கத்தனமாக பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கி வருகிறார்.

கல்விக்கொள்கையில் காவிக்கு மறுப்பு, தனியார்மயத்துக்கு அழைப்பு! முற்போக்கு திராவிடத்தின் புதிய கல்விக்கொள்கை!!

தமிழ்நாட்டில் எல்கேஜி முதல் உயர்கல்வி வரை கல்வி இலவசம் என்று திராவிட முற்போக்கு ஆட்சி நடத்தும் திமுக அறிவித்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அரசு கல்லூரியிலும் கூட சில ஆயிரங்கள் கட்டணம் கட்ட வேண்டியிருக்கிறது. அரசின் நிதி உதவி பெறும் (தனியார்) கல்லூரிகளில் பல ஆயிரங்கள் கட்ட வேண்டியிருக்கிறது. சுயநிதி கல்லூரிகளின் கொள்ளையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

காவிரிப் படுகை விவசாயத்தைப் பாதுகாப்பதில், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிலைப்பாடு என்னவாகஇருக்க வேண்டும்?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஆகியவை, காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட புதிய திட்டங்களை தொடங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாக அறிவித்துள் ளன. ஆனாலும், அதேநேரத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் முற்றிலுமாக அகற்றப்பட்டால், அதில் நீண்டகாலமாக பணியாற்றும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அந்த பகுதியில் சிஐடியு, ஏஐடியுசி நிர்வாகிகள் இணைந்து போராட்டங்களையும் நடத்தியுள்ளனர்.

தலையங்கம்

எட்டு வழிச்சாலைக் கொண்டு வரவிடமாட்டோம் என்று சொல்லி வாக்கு கேட்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசின் அமைச்சர் எ.வ.வேலு, எல்லார் வீட்டிலும் கார் இருக்கிறது, குடும்பத்தில் ஒவ்வொருவரும் கார் வைத்துள்ளார்கள், வாகனத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது சாலைகள் விரிவுபடுத்தத்தான் வேண்டும், அதைச் செய்யும் போது நிலம் இல்லாதவர்கள் கூட பச்சைத் துண்டை தோளில் போட்டுக் கொண்டு வந்து விடுகிறார்கள் என்று கூறுகிறார். அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் வேண்டுமானால் ஒவ்வொருவரும் ஒரு கார் அல்ல மூன்று கார்கள் கூட வைத்திருக்கலாம்.

ஜனவரி 26, 2023 சேலத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

சேலத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி


டில்லியில் ஓராண்டுக்குமேல் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது
ஒன்றிய பாஜக மோடி அரசாங்கம் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி SKM சார்பில், இன்று  ஜனவரி 26.1.2023 வியாழன் மாலை  5 மணி அளவில் சேலம் அஸ்தம்பட்டி ரவுண்டானா அருகில் இருந்து டிராக்டர் பேரணி துவங்கியது.  டிராக்டர்கள், இரு சக்கர வாகனங்கள் என நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் அணிவகுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையை இகக(மாலெ) வரவேற்கிறது; பரிந்துரைகளை திமுக அரசு தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்; இகக(மாலெ) முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையை இகக(மாலெ) வரவேற்கிறது; பரிந்துரைகளை திமுக அரசு தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்; இகக(மாலெ) முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்

போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள்

கிளாஸ்டன்

காளியப்பன்

* வினிதா

* ரஞ்சித்குமார் தமிழரசன்

செல்வசேகர்

அந்தோணி மணிராஜ்

ஸ்னோயின் கந்தையா ar கார்த்திக்

ஜெயராமன்

சண்முகம்

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

புரட்சிகர இளைஞர் கழக கோரிக்கை, வெற்றி!

தேவகோட்டை தியாகிகள் பூங்காவில் புரட்சிகர இளைஞர் கழகத்தின் தலையீடு காரணமாக வைக்கப்பட்டிருந்த கல்வெட்டில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டது ஆகஸ்ட் 14 என்று தவறுதலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வரலாற்றுப் பிழையை தேவகோட்டை நகராட்சி நிர்வாகத்துக்கு புரட்சிகர இளைஞர் கழகம் சுட்டிக் காட்டி சரி செய்யுமாறு வலியுறுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து அந்தப்பெரும் பிழையை நகராட்சி நிர்வாகம் திருத்தி இருக்கிறது. புரட்சிகர இளைஞர் கழகத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.