ஜம்மு காஷ்மீர் மக்களையும் இந்திய அரசியல் சாசன சட்டத்தையும் உச்ச நீதிமன்றம் கைகழுவி விட்டது

370 வது அரசியல் சாசன சட்டப்பிரிவு நீக்கப் பட்டதை உறுதி செய்து, ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மறுத்ததன் மூலம் அரசியல் சாசன சட்டம் அருவருக்கத்தக்க விதத்தில் மீறப்பட்டதற்கு அரசு நிர்வாகத்தை பொறுப்பாளியாக்குவதில் இன்று உச்ச நீதிமன்றம் தவறிவிட்டது. அரசியல் சாசன சட்டத்தையும் அதன் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் உச்ச நீதிமன்றம் உண்மையில் கைகழுவிவிட்டது.

புதிய முப்பெரும் சட்ட மசோதாக்கள்: புதிய மொந்தையில் விஷம் கலந்த பழைய கள்

இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 1860, குற்றவியில் நடைமுறைச் சட்டம் (Cr.PC)1898, இந்திய சாட்சிய சட்டம் (IEA) 1872 ஆகிய முப்பெரும் சட்டங்களும் ஆங்கிலேயர்கள் காலத்தில் இயற்றப்பட்டவை, அதனால் அவைகள் மாற்றப்பட வேண்டும் என்று காரணம் சொல்லி புதிதாக மூன்று சட்ட மதோதாக்களை கடந்த 11.8.2023 அன்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். ஆங்கிலேயர் காலத்து பழைய சட்டங்களை புதிதாக காலத்திற்கு ஏற்ற சட்டமாக கொண்டு வரவே இந்த புதிய மசோதாக்கள் என்று அமித்ஷாவும் ஆர்எஸ்எஸ் சங்கிகளும் கூறுகிறார்கள்.

வழக்கறிஞர்களின் உரிமையை முடக்குவதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை வழக்கறிஞர்கள் முகம்மது யூசுப் மற்றும் முகம்மது அப்பாஸ் இருவரும் தேசிய புலனாய்வு முகமை(NIA)யால் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டவர்களுக்காக நீதிமன்றத் தில் ஆஜரானார்கள் என்பதற்காக அவர்களையும் குற்றவாளிகள் ஆக்கி கைது செய்துள்ளது தேசிய புலனாய்வு முகமை. இது வழக்கறிஞர்களின் உரிமையை மட்டுமின்றி வழக்கறிஞர்கள் தொழிலையே முடக்கும் செயல் ஆகும். யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்களுக்கு வாதாடும் வழக்கறிஞர்களும் அச்சட்டத்தின் படி குற்றவாளிகள் என்கிற சரத்து அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மிகவும் மோசமான சரத்தாகும்.

ராகுல் காந்தி பதவி பறிப்பு திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்

அரசியல் குற்றமயமாக்கல் என்பது இந்தியா வில் ஆழ்ந்த கவலை அளிக்கும் விசயமாக இருந்து வருகிறது. அது ஜனநாயகத்தில் நிறுவனங்களின் நம்பகத்தன்மைக்கு ஊறு விளைவிப்பதாகவுள்ளது. அப்படியிருக்கையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் சிலவகை குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற, தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவி பறிப்பை கட்டாயமாக்கியது. அவர்கள் அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிடுவதையும் அந்த சட்டம் தடுக்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையை இகக(மாலெ) வரவேற்கிறது; பரிந்துரைகளை திமுக அரசு தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்; இகக(மாலெ) முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையை இகக(மாலெ) வரவேற்கிறது; பரிந்துரைகளை திமுக அரசு தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்; இகக(மாலெ) முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்

போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள்

கிளாஸ்டன்

காளியப்பன்

* வினிதா

* ரஞ்சித்குமார் தமிழரசன்

செல்வசேகர்

அந்தோணி மணிராஜ்

ஸ்னோயின் கந்தையா ar கார்த்திக்

ஜெயராமன்

சண்முகம்

கள்ளக்குறிச்சியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம்

கள்ளக்குறிச்சியில் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போராட்டம்

நிலப்பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி இகை(மாலெ) சார்பாக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அறப்போர் நடத்தி மனு அளிக்கப்பட்டது.