கட்சி ஆவணங்கள்

சுற்றுச்சூழல்காலநிலை நெருக்கடி ( 1 )

(2023 பிப்ரவரி 16-20ல் பாட்னாவில் நடைபெற்ற 11வது கட்சிக் காங்கிரசில்நிறைவேற்றப்பட்டதீர்மானம்)

1. புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் அதிகரித்த அளவில் பசுமை இல்லவாயு உமிழ்வுகள்புவி வெப்பமயமாதல், இதுபோன்ற இன்னும் பல விளைவுகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறஉலகளாவிய சுற்றுச்சூழல், காலநிலை நெருக்கடிக்கு மத்தியில் தற்போது வாழ்ந்து வருகிறோம்தீவிரமான காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட பேரழிவுகளான இயற்கை வளங்களையும்பல்லுயிர்ச்சூழலையும் நாசமாக்குவது, அதீத மாசுபாடுகழிவுகளை கட்டற்று கொட்டிக் குவிப்பது, காலநிலை இடர்கள் உள்ளிட்டவற்றை நேரில் கண்டு வருகிறோம்அடிப்படை வளங்கள் மீதான மக்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றனஆனால் அவற்றிலிருந்து பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெருத்த இலாபம் சம்பாதிக்கின்றனஇந்த உலகம், 19ஆம் நூற்றாண்டை விட கிட்டத்தட்ட 1.1°செ அதிக வெப்பமாகியுள்ளது. மேலும், வளிமண்டலத்தில் உள்ள கரியமலவாயுவின் அளவு 50% வரை அதிகரித்துள்ளது. தொழிற்துறைக்கு முந்தைய (1850-1900) காலத்தைவிட புவி மேற்பரப்பு வெப்பநிலை 1.04°செ அதிகமாகி, 2021ம் ஆண்டு ஆறாவது அதீத வெப்ப ஆண்டாக பதிவாகியுள்ளதுதற்போது புவி வெப்பநிலை ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 0.2°செ (±0.1°செஅதிகரிக்கிறது என்பதை கவனத்தில் கொண்டால்மானுடத்தால் தூண்டப்பட்ட இந்த வெப்பமயமாதல்தொழிற்துறை காலத்திற்கு முந்தைய அளவை விட, 2017ம் ஆண்டில் செ அதிகரிப்பை எட்டிவிட்டது; வெப்பமயமாதலின் இந்த வேகம் தொடர்ந்தால் 2040 இல் 1.5°செ அளவை அடைந்துவிடும்.

2. காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை, வெறுமனே புவி வெப்பநிலை அதிகரிப்பு என்பதாக மட்டுமே சுருக்கி விடக்கூடாதுநமது விவசாயம்மீன் வளம்இயற்கை வளங்கள்உணவுப் பாதுகாப்பு, ஆறுகள், உயிர்கள், வாழ்வாதாரம்ஆகியவற்றை தீவிரமாக இடையூறு செய்வதன் மூலம்மனித வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் அது பாதிக்கத் தொடங்கிவிட்டது.  விட்டு விட்டு ஓயாமல் பெய்கின்ற பருவமழைகள், மழையின்மை, கடும் பனிப்பொழிவுகள் அல்லது அடிக்கடி நிகழும் இயற்கைப் பேரிடர்கள் ஆகியவை தற்போது பொதுவான நிகழ்வுகளாகிவிட்டனசமீபத்தில் சீனாபாகிஸ்தானிலும்வேறு பல இடங்களிலும் கண்டது போல, சில பகுதிகளில்நீர்ச்சுழற்சி இடையூறுகடும் மழைப்பொழிவு, வரலாறு காணாத வெள்ளத்திற்கு காரணமாகிறதுபேரழிவை உண்டுபண்ணும் வெப்பமாதல், பாழ்படுத்தும் வெப்ப அலைகள்மோசமான வறட்சிவன அழிப்புகடல் மட்டம் உயருதல், கடற்கரைகள் அரிக்கப்படுதல்உயிரினங்களின் ஒட்டுமொத்த அழிவுஆகியவை இதன் மற்ற சில வெளிப்பாடுகளாகும்கடந்த கோடையின் போது அய்ரோப்பாவில் கண்டது போலஅதீத வெப்பநிலை காட்டுத்தீயின் அபாயத்தை மேலும் அதிகரிக்கிறதுவெப்பமயமாதல் அதிகரிப்பதால், வேளாண் நிலங்கள் பாலைவனங்களாக மாறிவிடுவதால்சில பிராந்தியங்கள் வாழத் தகுதியற்றவையாக மாறிவிடும்.   காலநிலை மாற்றம் குறித்த அரசாங்கங்களுக்கிடையேயான குழுவின் அறிக்கைபடிபுவி வெப்பநிலை அதிகரிப்பு 1.5°செஅளவுக்கு கட்டுக்குள் வைக்கப்படவில்லை என்றால் அய்க்கிய முடியரசும் அய்ரோப்பாவும் அதீத மழைப்பொழிவினால் உண்டாகும் வெள்ளத்தால் பாதிக்கப்படும்மத்திய கிழக்கில் உள்ள நாடுகள் அதீத வெப்ப அலைகளையும்பரவலான வறட்சியையும் எதிர்கொள்ளும்; பசிபிக் பகுதியிலுள்ள தீவு நாடுகள்கடல் மட்ட உயர்வால் மூழ்கிவிடும்; பல ஆப்பிரிக்க நாடுகள் வறட்சிஉணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளதுமேலும்ஆஸ்திரேலியாஅதிதீவிர வெப்பத்தாலும், காட்டுத்தீயினால் உண்டாகும் இறப்புகளாலும் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளதுதெற்கு ஆசிய நாடுகளில் அடிக்கடி நிகழும் வெள்ளத்தால் உள்கட்டமைப்புகளும் குடியிருப்புகளும் பாதிக்கப்படும்வெப்பத்தால் ஏற்படும் சாவுகளையும் உணவுதண்ணீர் பற்றாக்குறையையும் இந்நாடுகள் சந்திக்க நேரிடும்.

3.’வளரும்’ நாடுகளில் வாழும் மக்கள் (ஏகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கு ஆளாகுபவர்கள்), குறிப்பாக ஏழை எளிய மக்கள்பூர்வகுடியினர்இந்த நெருக்கடியால்நாம் எதிர்கொள்ளும் தீவிர சவால்களான கணிக்கவியலாத மழைக்காலம்தண்ணீர் பற்றாக்குறைமோசமடையும் காற்றின் தரம்கோவிட் 19 போன்ற பெருந்தொற்று நிலைமைகள் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர்உயரும் கடல் மட்டமும் பேரலைகள்புயல்வெள்ளம் ஆகியனவும் சேர்ந்து கடற்கரை மற்றும் தீவுப் பிராந்தியங்களை அதிக ஆபத்தானவையாக ஆக்கியுள்ளனபசிபிக் பெருங்கடலின் தீவு தேசங்கள் ஏற்கனவே மூழ்கத் தொடங்கிவிட்டனஉலகின் ஏறத்தாழ 23 கோடி மக்கள் உயர் அலை மட்டத்தை விட, 1 மீட்டர் கீழே வசிக்கிறார்கள்மிக மோசமான நிலைமைகள் ஏற்படுமானால்அவற்றால் மிகவும் வஞ்சிக்கப்பட்டோரும் ஏழைகளுமே மிக அதிக பாதிப்புக்குள்ளாவார்கள். (கடல்மட்டம் உயருவது குறித்த அறிவியல் சான்று: 1901–1990 காலகட்டத்தின் போது உலக சராசரி கடல் மட்டம் ஒரு வருடத்திற்கு 1.5 மிமீ அதிகரித்தது. 2005–2015 காலகட்டத்தின் போது ஒரு வருடத்திற்கு 3.6 மிமீ கூடுதல் வேகம் பெற்றதுஉலக பசுமை இல்ல வாயுவின் வெளியேற்றம் மட்டுப்படுத்தப்படவில்லை என்றால் 2100 ஆம் ஆண்டில் இது 0.61–1.10 மீட்டர் என அதிகரிக்க வாய்ப்புள்ளது.) 21 ஆம் நூற்றாண்டு முழுவதும் கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து கடல் மட்டம் உயர்ந்துதாழ்வான கடற்கரைப் பகுதிகளில் அடிக்கடி நிகழ்கிற பெருவெள்ளம்பெரும் புயல்கடற்கரை நிலஅரிப்பு ஏற்படுத்துவதைக் காண நேரிடும்உதாரணமாகசுந்தர்பான்ஸ் (மேற்கு வங்கம்தீவிர அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளதுஇதனால் உள்ளூர் மீனவர்களும் தீவில் வசிக்கும் அனைவரும் அதிதீவிர பாதிப்புக்குஆளாகும் நிலை உருவாகும்வங்கக் கடலின் மட்டம் ஒவ்வொரு ஆண்டும் 3-8 மிமீ உயர்ந்துதீவுகளில் நில அரிப்புக்கும்வெள்ளப்பெருக்கிற்கும் காரணமாகிறதுஅடிக்கடி தாக்கும் புயல்களும்விவசாய நிலங்கள்மேல்மடை ஆறுகளில் உப்புநீர் ஊடுருவலும் மிகவும் அதிகரித்துள்ளனபல்வேறு அறிக்கைகளின்படிகொல்கத்தாசென்னைமும்பைபுவனேஷ்வர் உள்ளிட்ட உலக கடற்கரை நகரங்கள் பெருவெள்ளத்தால் மூழ்கும் ஆபத்து உள்ளதுஇந்தியாவின் 17 கோடி மக்கள்கடற்கரை கிராமங்களில் அல்லது (கடற்கரை ஒட்டியசிறு நகரங்களில் வசித்து வருகின்றனர்.

4. நகர்ப்புர ஏழைகள்குடிசைவாசிகள்மீனவர்கள்நிலமற்ற விவசாயக்கூலிகள், நிலத்தை சார்ந்திருக்கும் பழங்குடியினர்கிராமப்புர பெண்கள் ஆகியோர் அதீத வானிலைச் சூழல்வெள்ளம்நீர் தேங்குதல் ஆகியவற்றின் நேரடி பாதிப்புகளை அனுபவிக்கின்றனர்மேலும்சூழலியல் சமநிலை மாற்றங்களால் ஏற்படும் சுமைகளை தலைகீழ் விகிதத்தில் சுமக்கின்றனர்ஒருபுறம் வளங்களின் நியாயமற்ற விநியோகமும்அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதும் அவர்களை அதீத பாதுகாப்பின்மையில் தள்ளிவிடுகிறது என்றால் மறுபுறம்இந்த பாதுகாப்பற்ற சூழல் மற்றவர்களைவிட கூடுதல் பாதிப்புக்கு ஆளாகும் நிலையில் அவர்களை நிறுத்தி விடுகிறது. காலநிலை மாற்றத்திற்கு மிகக் குறைவான பொறுப்பானவர்கள் மிகஅதிக (தலைகீழ் விகிதத்தில்) பாதிப்புக்குள்ளாகிறார்கள்.

5. காலநிலை மாற்றம்இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு, உணவு பாதுகாப்பிலும் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவதாக இருக்கிறதுமாறும் வானிலையால் விவசாயிகளின் ஒட்டுமொத்த பயிர் சுழற்சியும் சீர்குலையும். அரசாங்கத்தால் அளிக்கப்படும் முறையான பாதுகாப்பு வளையம் இல்லாதபோதுநாட்டில் மோசமடைந்து வரும் விவசாய நெருக்கடி விவசாய சமூகத்தையும்அதே போல நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் பெருமளவிற்கு பாதிக்கப் போகிறது.

இந்திய அரசாங்கம்காலநிலை மாறுதல் காரணமாகவிவசாய உற்பத்திக்கு ஏற்படப்போகும் ஆபத்தை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளதுஆனால்இந்தச் சிக்கலுக்கு முதலாவது காரணமான வழிமுறைகளைகொள்கைகள்நடைமுறைகளை மாற்றுவதற்கு பதிலாக, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொள்ள எடுக்கப்படும் முயற்சிகள் என்று சொல்லிக்கொண்டே, விவசாய உற்பத்தியின் ஆதாரங்களை கார்ப்பரேட் பெரு நிறுவனங்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.

-தொடரும்