சைகோன் புதுச்சேரிநூல் அறிமுகம்

புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வருபவர் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாஅவர் நீலக்கடல் (2005), மாத்தா ஹரி (2008),  காஃப் காவின்நாய்க்குட்டி" ( 2015 ),  ரணகளம் 2018,  கிருஷ்ணப்ப நாயக்கர் கெளமுதி (2012 ), இறந்த காலம் (2019)  ஆகிய புதினங்களை புதுச்சேரியை மையமாகக் கொண்டும்  இதர பிரெஞ்சு காலனிய நாடுகளின் சமூகத்துடன்  தொடர்புபடுத்தியும்  கதைகளைநாவல்களைப் படைத்துள்ளார்அவர் தற்போது எழுதியுள்ள நாவல் 'சைகோன் புதுச்சேரி'. பிரெஞ்சு காலனியாக இருந்த புதுச்சேரியுடன் இந்தோசீனா என்று பரவலாக அழைக்கப்பட்ட வியட்நாம் (சைகோன்உறவின் பின்புலத்தில் எழுதப்பட்ட வரலாற்று சமூக புதினம் ஆகும். 1930க்கும் 1960க்கும் இடையே புதுச்சேரியிலும் சைகோனிலும்  இக் கதை களம் கொண்டுள்ளது.

 பிரெஞ்சு காலனியாதிக்கத்தின் கீழ் புதுச்சேரி இருந்தபோது  சமூகத்தில் நிலவிய சாதிமதம்சாதிய ஒடுக்குமுறைதீண்டாமை மற்றும் சொத்துரிமைவாரிசுரிமை,  ஆணாதிக்கம் பற்றியும்  "ரெனோன்சான்என்ற தகுதியில் காலனிய பிரெஞ்சு  அரசாங்கத்திடம் பிரெஞ்சு குடியுரிமை பெற்று சைகோன் சென்றவர்களின் துரோகங்கள், அதிகார மமதைஅடிமைத்தனம்உழைக்கும் மக்கள் மீதான அவர்களின் கொடுமைகள் பற்றியெல்லாம் பேசுகிறது இந்த நாவல்அதேவேளைஇந்திய தேசிய ராணுவம் அமைத்த சுபாஷ் சந்திர போசுக்கு ஆதரவாக நின்ற‌ லயோன் புருஷாந்தி  என்கிற ரெனோன்சான் அவருக்கு துணையாக நின்ற பிரெஞ்சு இந்திய பெண்மணி வேதவல்லி  இருவரையும் மையமாகக் கொண்டுள்ளது கதைபுதுச்சேரியில்மணி நேர வேலைக்காகப் போராடியதால் 12 தொழிலாளர்கள் பிரஞ்சு அரசால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுகள், விடுதலை,  சமத்துவம்சகோதரத்துவம் பற்றி உலகுக்குச் சொன்ன பிரெஞ்சு தன் கீழான காலனி நாடுகளில்குறிப்பாக இந்தியாவிலும் வியட்நாமிலும் நடத்திய வன்முறைகளைவதைகளை இந்நாவல் காட்சிப்படுத்தியிருக்கிறது.