குத்தகை விவசாயிகளுக்கு அடையாள அட்டை!

புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப் பெறு!

சிபிஐஎம்எல் மக்களவை உறுப்பினர் தோழர் சுதாமா பிரசாத் உரை

விவசாயம் வருமானம் ஈட்டக் கூடியதாக இல்லை. பணவீக்கம் மற்றும் இடுபொருள் விலை உயர்வால் விவசாயம் தொடர்ந்து நட்டம் அடைந்து வருகிறதுவருமானத்திற்கு மாற்று ஏற்பாடு உள்ள விவசாயிகள் விவசாயம் செய்ய முன் வருவதில்லைஅவர்கள் நிலத்தை ஒப்பந்த முறைக்கோ அல்லது குத்தகை முறைக்கோ கொடுத்து விடுகின்றனர்.  குத்தகை விவசாயிகளே நட்டத்தை சுமக்க வேண்டியவர்களாகிறார்கள்ஆனால்அவர்கள் விவசாயிகளாகவே அங்கீகரிக்கப்படுவதில்லைவிவசாய பட்ஜெட் 1000 கோடியால் அவர்களுக்கு பயன் ஏதுமில்லை. உண்மையில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகள் எந்த அடையாளமும் அற்றவர்களாகவே உள்ளனர்குத்தகை விவசாயிகளை விவசாயிகள் என அங்கீகரித்து அவர்களுக்கு அடையாள அட்டை வழங்குங்கள் என அரசைக் கேட்டுக் கொள்கிறேன்அப்போதுதான் அவர்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் நலத்திட்ட சலுகைகளை பெற முடியும்அதன் மூலம் விவசாயத்தை தொடர்வதற்கான ஆர்வமும் அவர்களுக்கு உண்டாகும்.

பண மதிப்பிழப்பு துவங்கி மூன்று முறை அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம்வளர்ந்து வரும் ஆன்லைன் வர்த்தகம் ஆகியவை காரணமாக சிறு வணிகர்களின் வியாபாரம் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. சிறு வணிகர்களின் நலனை பாதுகாக்கவும் அவர்கள் தங்கள் முதலீடுகளை நிர்வகிக்கவும் வசதி ஏற்படுத்த வர்த்தக ஆணையம் போன்ற ஒரு அமைப்பு தேவையாக உள்ளது.

குற்றச் செயல்களைத் தடுக்கும் நடவடிக்கை என்ற பெயரில் மூன்று குற்றவியல் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச்  சட்டங்கள் இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதும் அதை மீறுவதும் ஆகும்இது அரசமைப்புச் சட்ட மீறல் மாத்திரம் அல்லஇந்தக் குற்றவியல் சட்டங்கள் போலீஸ் ஆட்சியை கொண்டு வருவதற்கான சதியும் ஆகும்இது அவசர நிலை போன்றதொரு சூழலை நிறுவனப்படுத்தும் முயற்சியும் ஆகும்.

அரசாங்கத்துக்கு எதிராக ஒருவர் போராடகருத்து தெரிவிக்க, உண்ணாநிலை போன்ற போராட்டத்தில் ஈடுபட அரசியலமைப்புச் சட்டம் உரிமை வழங்கி இருக்கிறதுபுதிய சட்டப்படி அவை குற்றச் செயல்களாக கருதப்படும்அவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக கருதப்பட்டு புதிய குற்றவியல் சட்டப்படி தண்டிக்கப்படுவார்கள்அது போலமுதல் தகவல் அறிக்கை பதிவது என்பது காவல்துறையின் விருப்பு வெறுப்புக்கு விடப்பட்டுள்ளதுகுற்றம் சுமத்தப்பட்டவர்களை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கப்பட்டஅதிகபட்ச 15 நாட்கள் என்பதை 60 இலிருந்து 90 நாட்கள் என்பதாக புதிய சட்டத்தில் மாற்றி இருக்கிறார்கள்அவ்வளவு நீண்ட நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும் போது போலீஸ் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்அவர்கள் விருப்பம் போல் வாக்குமூலம் பெற முடியும்ஆகவேஇந்தச் சட்டம் மீண்டும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும்மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என இந்த அவையில் கேட்டுக்கொள்கிறேன்.    எனது தொகுதியில் பாசன வாய்க்கால் மூலம் நடைபெறும் விவசாயமே பிரதானமாக உள்ளதுபாசன வாய்க்கால்கள் 150 ஆண்டுகள் பழமையானவையாக உள்ளன. கால்வாய்களைப்  புனரமைப்பு செய்து இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பீகார்ஜார்க்கண்ட்உத்தரப்பிரதேச மாநிலங்கள் பயன்பெறும் வகையிலான கத்வான் நீர்த்தேக்க திட்டம் விரைந்து முடிக்கப்பட வேண்டும். கங்கை நதிக் கரையில் உள்ள எனது தொகுதி மண் அரிப்பினால் பாதிப்படைந்து வருகிறதுஉரிய பாதுகாப்பு நடவடிக்கையை எடுப்பதோடுசிறு அணைகள் கட்டுவதும் அவசியமானதாக உள்ளது.

அதுபோல் எங்கள் தொகுதியில் அடிக்கடி தீ விபத்துகள் நடந்து வருகின்றனஆகவே கிராம பஞ்சாயத்து மட்டத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசு ஆவன செய்ய கேட்டுக்கொள்கிறேன்.

சகாரா நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள் ஏராளமாக உள்ளனர்சகாரா ஊழலில் பணம் இழந்தவர்களின் பணம் திருப்பி கொடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் ஏற்கனவே உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்மக்களின் சேமிப்பு பணம் திரும்ப கிடைப்பதை உத்திரவாதம் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.