ஆகஸ்ட் 01, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இடதுசாரி விவசாய தொழிலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 01, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இடதுசாரி விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

CPIML கட்சி மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி கண்டன உரை ஆற்றினார். அ.வி.கி.தொ.ச மற்றும் அ.வி.ம.ச சார்பில் தோழர்கள் கலந்து கொண்டனர்.

மத்திய மாநில அரசுகளே!

தேசிய ஊரக வேலை திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை, நாள் கூலி ரூ.600 உயர்த்திட வேண்டும்.

வீடு, நிலம், வழங்கிட நில சீர்திருத்த சட்டத்தை செயல்படுத்திடு!

55 வயது கடந்த அனைவருக்கும் ஒரு ரூபாய் 5000 ஓய்வூதியம் வழங்கிடு!

ஒன்றிய அரசுக்கு எதிராக - பெட்ரோல், டீசல், எரிவாயு மீதான வரிகளை ரத்து செய்யக் கோரிநாடு தழுவிய பிரச்சாரம்

ஒன்றிய அரசுக்கு எதிராக - பெட்ரோல், டீசல், எரிவாயு மீதான வரிகளை ரத்து செய்யக் கோரியும் உணவுப் பொருள்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும் இடதுசாரிக் கட்சிகள், விசிக நாடு தழுவிய பிரச்சாரம் - ஆர்ப்பாட்டம்

மோடி அரசே தேசவிரோத அக்னிபாத்தை திரும்பப்பெறு! சேலத்தில் SKM ஆர்ப்பாட்டம்!

மோடி அரசே தேசவிரோத அக்னிபாத்தை திரும்பப்பெறு!
சேலத்தில் SKM ஆர்ப்பாட்டம்!

சேலம் கலெக்டர் அலுவலகம் முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) இன்று 24.6.2022 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் ஏ.ராமமூர்த்தி (SKM., மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் ஏஐகேஎம் நிர்வாகி அய்யந்துரை, AIKKMS நடராஜன், AIKS உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். 

AIKM- சிபிஐஎம்எல், AIKS-  சிபிஎம், சிபிஐ,  எஸ்யூசிஐ அமைப்பு விவசாயிகளும், முன்னணி ஊழியர்களும் பங்கேற்றனர்.

மார்ச் 28,29 பொதுவேலைநிறுத்தம் வாழ்த்தும் ஒருமைப்பாடும்

வெற்றிகரமான பொது வேலைநிறுத்தத்திற்காக தொழிலாளர் வர்க்கத்தை இகக(மாலெ) வாழ்த்துகிறது... ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொள்கிறது...

விவசாயிகள் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

  • ✓ லக்கிம்பூர் கேரி விவசாயிகள் படுகொலை விசயத்தில் நீதியை நிலைநாட்டத் தவறிய ஒன்றிய அரசைக் கண்டித்தும்…
  • ✓ டில்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதையும்,
  • ✓ போராட்ட வழக்குகளை திரும்ப பெறாமல் துரோகம் இழைப்பதைக் கண்டித்தும்…

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின்

மார்ச் 21 : நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்