கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், 1) கோவை மாவட்ட ஆட்சியர் 22.07.2024 தேதி அறிவித்த தூய்மைப் பணியாளர்களுக்கான குறைந்த பட்ச கூலி ரூ770ம், ஓட்டுனர்களுக்கு ரூ.803ம் உடனே வழங்கப்படவேண்டும், 2) 2023-2024 க்கான போனஸ் குறைந்தபட்சமாக 8.33%ம், 11.67 விழுக்காடு கருனைத்தொகையும் சேர்த்து 20 % வழங்கவேண்டும், 3)தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியைச் செலுத்தி முறையாக ரசீது வழங்கப்பட வேண்டும்.

மின்துறையை தனியார்மயமாக்கும் ஒன்றிய பாஜக அரசின் முயற்சியை முறியடிப்போம்.

பிரெஞ்சு காலனிய   காலத்தில் துவக்கப்பட்ட மூன்று தனியார் பஞ்சாலைகளான சுதேசி காட்டன் மில்ஸ்(சவானா ஆலை 1828) ஸ்ரீ பாரதி மில்ஸ்(கேப்ளே ஆலை 1892) ஆங்கிலோ பிரெஞ்ச் டெக்ஸ்டைல்ஸ்(ரோடியர் ஆலை 1898) காலப்போக்கில் தனியார்  முதலாளிகளின் சுயநலத்தால் நட்டமாக்கப்பட்டு, நலிவடைந்து ஒன்றன்பின் ஒன்றாகக் கைவிடப்பட்டு மூடப்பட்டன. சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்த இந்த ஆலைகள் மாநிலப்  பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருந்தன.

சாம்சங்:- மூலதனத் தாக்குதல் இருக்கும் வரை தொழிலாளர் போராட்டங்களும் இருக்கும்

  சென்னையை அடுத்துள்ள சுங்குவார் சத்திரத்தி லுள்ள ்கொரிய சாம்சங் நிறுவனத்தில் 16 ஆண்டுகள் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் சாம்சங் இந்தியா ஒர்க்கர்ஸ் யூனியன் (SIWU) என்ற சங்கத்தைத் துவக்கினார்கள். அது சிஐடியு மையத்துடன் இணைக்கப்பட்டது. 1700 நிரந்தரத் தொழிலாளர்களில்  1350 பேர் இந்தச் சங்கத்தில் உறுப்பினர்களானார்கள். சாம்சங் நிர்வாகமோ சங்கத்தை ஏற்க, அங்கீகரிக்க மறுத்தது மட்டுமின்றி, சங்கத்தின் பெயரில் சாம்சங் என்ற கம்பெனியின் பெயர் இடம் பெறக் கூடாது என்றது. சாம்சங் இந்தியா ஒர்க்கர்ஸ் யூனியன் என்ற பெயரில் சங்கத்தைப் பதிவு செய்யக்கூடாது என்றது.