தமிழகத்தில்  தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டங்கள்

தமிழ்நாட்டில் சென்னை முதல் கோவைசேலம்தூத்துக்குடிநெல்லை ,தென்காசி வரை  தூய்மைப் பணியாளர் நாள்தோறும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்கூலி உயர்வுபணிநிரந்தரம் கேட்டு போராடிக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் தனியார் மயமாக்கத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்மாநகராட்சிநகராட்சிஊராட்சி நிர்வாகங்களின் கீழ் பணிபுரிந்து கொண்டிருக்கும் தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்ததாரர்களுக்கு கீழ் அல்லது தனியார்  நிறுவனங்களுக்குக் கீழ் பணி செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்சென்னை மாநகராட்சியின் கீழ் பணி செய்யும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைமையில் பணி நிரந்தரம் கோரியும்தனியார் மயமாக்கத்திற்கு எதிராகவும் போராடி வருகிறார்கள். 19.10.2021 தேதிய தமிழ்நாடு முதலமைச்சர்  மு..ஸ்டாலின் கடிதப்படிபல ஆண்டுகளாகப்  பணிபுரிந்து வரும் சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்குப் பதிலாகஅவர்களை தனியார் நிறுவனத்தின் கீழும் ஒப்பந்ததாரர் கீழும் பணி செய்ய நிர்பந்திப்பதற்கு எதிராக பல மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை எல்டியுசியின் தலைமையின்  கீழ் நடத்திவருகிறார்கள்தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி எல்டியுசி பொதுச் செயலாளர்  தோழர் கு.பாரதி காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை நடத்தினார்அப்போது இகக(மாலெதமிழ்நாடு மாநிலச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பிஏஐசிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் இரணியப்பன் மற்றும் ஏஐசிசிடியு தலைவர்கள் பட்டினி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்அப்பட்டினிப் போராட்டத்தின் வாயிலாக  கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவாதம் அளித்தார்ஆனால்மிக முக்கிய கோரிக்கையான  பணிநிரந்தரம் செய்யப்படுவதற்கு மாறாகதனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனஇதைக் கண்டித்து சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்திவருகிறார்கள்பெண்தொழிலாளர் பெரும்பான்மையாக போராட்டத்தில் கலந்து கொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளரை கைதுசெய்து மண்டபத்தில் அடைத்து வைத்தது மாநகராட்சி நிர்வாகம்அந்தத்  தொழிலாளரை சந்தித்து  ஏஐசிசிடியு மாநில சிறப்புத் தலைவர் தோழர் இரணியப்பன் ஆதரவினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துப் பேசினார்.

தூத்துக்குடி மாநகராட்சியில்அவர் லேண்ட்’ என்ற நிறுவனத்தின் கீழ் ஒப்பந்தத் தொழிலாளராக தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள்அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.725 வழங்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தபோதும் அந்த சம்பளம் வழங்கப்படவில்லைதொழிலாளர் ஏஐசிசிடியு சங்கத்தில் இணைந்தார்கள்ஜூன் 27 ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டதுமாநகராட்சி ஆணையர் அழைத்துப்  பேசி கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று சொன்னார்ஆனால்அதன்படி நடக்கவில்லைஅதனால் ஜூலைஉள்ளிருப்பு வேலை நிறுத்தம் என அறிவிக்கப்பட்டதுகாவல்துறை குவிக்கப்பட்டிருந்த நிலையிலும் 500 தொழிலாளர் மாநகராட்சியில் திரண்டனர்நிர்வாகம்  இறங்கி வந்து பேச்சுவார்த்தை நடத்திபெருவாரியான கோரிக்கைகளை நிறைவேற்ற ஆணையர் ஒப்புக்கொண்டார்.

கோவை மாநகராட்சியிலும் தனியார் மயமாக்கத்திற்கு எதிராகவும் பணி நிரந்தரத்திற்காகவும்  ஏஐசிசிடியு தலைமையின்கீழ் தூய்மைப் பணியாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்சேலம் அயோத்தியாபட்டினத்தில் தூய்மைப் பணியாளர்களின் 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 13.9.2024 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுதோழர் ராஜா தலைமை தாங்கினார்ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர்  வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்தென்காசியில் ஏஅய்சிசிடியு சங்கத்தில் இணைந்துள்ள தூய்மைப்பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்கடலூர் மாவட்டத்திலும் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

திமுக அரசு தன் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல் தொழிலாளரின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் இருப்பதுநம்பிக்கையோடு வாக்களித்த தொழிலாளர்களுக்குச் செய்யும் அநீதி ஆகும்தூய்மைப்பணியாளர் ஒன்று சேர்ந்து மாநிலம் தழுவிய போராட்டத்தில் இறங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.