மார்க்ஸிய கலைச்சொற்கள் , தோழர் எஸ்.வி.ஆருடன் ஓர் நேர்காணல்

[தோழர் எஸ்.வி.ஆருடன் நடந்த மிகநீண்ட உரையாடலின் ஒரு பகுதி மட்டும்]

மார்க்சியம் கற்பது எவ்வளவு அவசியமோ அதேபோல் மார்க்சியத்தை விமர்சிப்பவர்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களை நாம் வெல்ல முடியும். அவர்களின் கேள்விகள் மூலமாக நமது மார்க்சியக் கண்ணோட்டத்தை செழுமைப்படுத்த முடியும். 

பாட்டாளி வர்க்கம் எனும் சொல்லாடல்

சிபிஐ (எம்எல்) (விடுதலை) தேர்தல் பரப்புரை இயக்கம்

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிபிஐஎம்எல் கட்சி, இந்தியா கூட்டணியின் அங்கமாக பீகாரில் 3 தொகுதிகளும் ஜார்க்கண்டில் ஒரு தொகுதியும் மட்டுமே போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணி வடிவம் பெறாத மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் ஒவ்வொரு தொகுதியில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அதற்காக சோம்பி இருக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து செயலூக்கமிக்க பரப்புரை இயக்கத்தை சுதந்திரமாக மேற்கொண்டது.

மக்களவைக்கு ‘இந்தியா’ கூட்டணி சார்பாகப் போட்டியிடும் சிபிஐஎம்எல் வேட்பாளர்கள்

இந்தியா கூட்டணியில், பீகார் மாநிலத்தில் அர்ரா, காராக்கட், நலந்தா; ஜார்கண்ட் மாநிலத்தில் கோடர்மா மக்களவைத் தொகுதிகளிலும் பீகார் மாநிலம்

அகியோன் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் சிபிஐஎம்எல் கட்சி

வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 

1) காராக்கட் : 

தோழர் ராஜாராம் சிங்

சிபிஐஎம்எல் தேர்தல் நிதிக்கு நன்கொடை அளிக்க வேண்டுகிறோம்!

பல ஆண்டுகளாக இந்தியாவின் அரசமைப்புச் சட்டமும், அந்த அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள பல கட்சி ஜனநாயகமும் கூட்டாட்சி கட்டமைப்பும் என்றென்றைக்குமானது என நம்பிக் கொண்டிருந்தோம். நாம் இனியும் அவ்வாறு நம்பிக் கொண்டிருக்க முடியாது என்பதை 2024 தேர்தல்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. இந்தியாவை ஒரு கட்சி மட்டுமே ஆளுகின்ற ஆட்சி முறைக்கு மாற்றிட மோடி அரசாங்கம் துடிதுடித்துக் கொண்டிருக்கிறது. பதவியில் இருக்கும் டெல்லி முதலமைச்சர் உட்பட, இரண்டு முதலமைச்சர்கள் தேர்தல் காலத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

பூலேவையும் அம்பேத்கரையும் நினைவு கூர்வோம்!

சமூக சமத்துவத்திற்காக நடைபெற்ற போராட்டத்தில் பங்கு பெற்ற இந்தியாவின் மிகச்சிறந்த இருவரின் பிறந்த நாட்கள் ஏப்ரல் 11 ம் 14 ம் ஆகும். ஒருவர் ஜோதிராவ் பூலே, மற்றொருவர் பாபாசாகேப் அம்பேத்கர். பூலேவின் 197 வது (11 ஏப்ரல் 1827 - 28 நவம்பர் 1890) பிறந்தநாளையும், டாக்டர் அம்பேத்கரின் 133 வது (14 ஏப்ரல் 1891 - 6 டிசம்பர் 1956) பிறந்த நாளையும் இந்த ஆண்டில் நாம் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். நவீன இந்தியாவில் இந்தியக் குடியரசின் அரசமைப்புச் சட்ட அடிப்படைகள் மிகக்கொடும் தாக்குதலை எதிர்கொண்டு வருவதைக் காண்கிறோம். நிலப்பரப்புத்துவ விழுமியங்கள், ஆணாதிக்கத் தளைகள் மீண்டும் தலைதூக்கி வருவதைக் காண்கிறோம்.

சந்தர்ப்பவாத அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!

கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அதிமுக இந்தத் தேர்தலில் தனி அணியாக போட்டியிடுகிறது. பாஜகவின் தேசிய ஜனநாயக  கூட்டணியிலிருந்து விலகியதற்கு அதிமுக சொல்லும் காரணம் எம்ஜிஆர், ஜெயலலிதாவை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இழிவுபடுத்தி பேசிவிட்டார் என்பதுதான். இது உண்மை என்றால், பல்லடம் பொதுக்கூட்டத்தில் மோடி, எம்ஜிஆர், ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியதைக் கேட்டு தனது முடிவை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். அப்போ, உண்மைக் காரணம் வேறுதானே.

2024 தேர்தல்கள்: மோடியின் திட்டமும் மக்களின் திட்டங்களும்

மோடி 2.0வின் இறுதி நாடாளுமன்றக் கூட்டத் தொடர் பிப்ரவரி 10 அன்று முடிவுக்கு வந்தது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதற்கு தன்னைத் தானே பாராட்டிக் கொண்ட தீர்மானத்தை இந்த அரசாட்சி நிறைவேற்றியது. உத்தரபிரதேசம் யோகி ஆதித்யநாத் அரசாங்கமும் கோவிலை கட்டியதற்கு மோடி, யோகி இருவரையும் பாராட்டி இதே போன்றதொரு தீர்மானத்தை பிப்ரவரி 5 அன்று உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் ஏற்கனவே நிறைவேற்றி உள்ளது. யோகி ஆதித்யநாத் அயோத்திக்கான பெருமைக்கு உரிமை கொண்டாடு வதோடு நிச்சயமாக நின்றுவிடப் போவதில்லை.

அனைவருக்கும் வாக்குரிமை சட்டகத்தைப் பாதுகாப்போம்

இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட 74வது ஆண்டு விழா 25 ஜனவரி 2024 அன்று அனுசரிக்கப்பட்டது. இந்திய தேர்தல் ஆணையம் நிறுவப்பட்ட நாள் தேசிய வாக்காளர் நாளாக தற்போது கொண்டாடப்படுகிறது. இந்தியா போன்ற ஒரு பரந்த, பன்முகம் கொண்ட ஒரு நாட்டில், தேர்தல் நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்ட ஒரு அரசிய லமைப்புச் சட்ட நிறுவனம் என்ற முறையில், அதன் முக்கியத்துவத்தை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. தேர்தல் முறையின் மீதான மதிப்பு என்பது தேர்தல் ஆணையத்தின் மீதான மதிப்பைச் சார்ந்தது. ஆனால், இந்த விசயத்தில் தேர்தல் ஆணையம் மிகப்பெரும் நெருக்கடியைச் சந்திக்கின்றது.