பெண்களுக்கு எதிரான அனைத்து மகளிர் காவல்நிலையங்கள்

1992ஆம் ஆண்டு சென்னை ஆயிரம் விளக்கில் முதல் அனைத்து மகளிர் காவல்நிலையம் துவங்கப் பட்டது. அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, வரலாற்றில் இல்லாத முன்மாதிரி என்று வர்ணித்தார். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை ஆண் காவலர் களிடம் வெளிப்படுத்துவதில், காவல்நிலையத்தை அணுகுவதில் உள்ள பிரச்சனைகளைக் களைவதற் காகத்தான் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படுவதாக அவர் அறிவித்தார். பெண் களுக்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காகவும் திருமண உறவுப் பிரச்சனைகளை விசாரிப்பதற் காகவும் அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் அமைக்கப்பட்டதென்று 2013-2014 சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

2023இன் இறுதிச்சுற்றுத் தேர்தல்களில் இருந்து கிடைக்கும் பாடங்கள்

நவம்பரில் நடைபெற்ற அய்ந்து சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள் கிட்டத்தட்ட அனைத்து கருத்து கணிப்புகளும் கள அறிக்கைகளும் தவறென நிரூபித்துள்ளன. மத்திய பிரதேசத்தில் பாஜகவிற்கு மாபெரும் வெற்றி கிடைக்கும் என்று கணித்த வாக்குப்பதிவிற்குப் பிந்தைய சில கணிப்புகளும் கூட, அருகிலுள்ள சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு எளிதான பெரும்பான்மை கிடைக்கும் என்றன.

தோழர் வினோத் மிஸ்ரா, சற்றும் சளைக்காத மக்கள் ஜனநாயகப் போராளி!

இவ்வாண்டு தோழர் வினோத் மிஸ்ரா மறைந்த 25வது ஆண்டு நினைவுநாளை அனுசரிக்கிறோம். நக்சல்பாரிக்குப் பிந்தைய கட்டத் தில், சிபிஐஎம்எல் கட்சியை மறுசீரமைத்திட, விரிவாக்கிட, பலப் படுத்திட அவர் ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை நாம் நினைவுகூருகிறபோது, என்றென்றும் உத்வேகமூட்டும் அவரது புரட்சிகர மரபுக்கு நாம் அஞ்சலி செலுத்துகிறபோது, இந்திய அரசமைப்புச் சட்ட ஜனநாயகத்தின் மீதான பாசிசத் தாக்குதலை முறியடிக்க வேண்டிய மைய சவாலின் பின்னணியில், அவரது உள்ளார்ந்த, மையமான கருத்துக்களையும் பங்களிப்புகளையும் குறித்த ஒரு மறுபார்வை என்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

2023ல் மோகன் பகவத்தின் விஜயதசமி உரை -

ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆண்டுக்கான சங்கிப் பெருந்தலைவரின் உரையுடன், ஆர்எஸ்எஸ் அந்த அமைப்பு தொடங்கப்பட்ட நாளாக விஜயதசமியை அனுசரிக்கிறது. மோடி அரசாங்கம் அமைந்த 2014-லிருந்து இந்தியாவில் ஆர்எஸ்எஸ் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவத்தையும் அதிகாரத் தையும் நிச்சயமாகவே பெற்றுள்ளது. மேலும் மோகன் பகவத்தின் விஜயதசமி உரையானது படிப்படியாக வெளிப்படுகிற சங்- பாஜக திட்டங்களின் மீது வெளிச்சத்தை பாய்ச்சுகிற முக்கிய உரைப் பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

தன் பாலின இணையர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பால் புதுமையர் என்றழைக்கப்படும் எல்ஜிபிடிக்யூஐயினரின் உரிமைக்கு எதிராக ஒரு தீர்ப்பை வழங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன் பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காக பால் புதுமையர் சமூகத்தைச் சேர்ந்த 15 இணையர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார்கள். அந்த வழக்கில் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் அவர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

செப்டம்பர் அழைப்பு:

நாட்டில், ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. மேலும் தீவிரப்படுத்த வேண்டியிருக்கிறது.அரசமைப்புச் சட்டமும் நாடாளுமன்ற ஆட்சிமுறையும் கடும் அச்சுறுத்தலுக்குள்ளாகிக் கொண்டிருக்கும் நிலையில் ஜனநாயகத்துக்கான போராட்டம் நாட்டின் முதல் முன்னுரிமையான போராட்ட மாகும். அடித்தள மக்கள் தொடங்கி அனைத்துப் பகுதி மக்களின் முதன்மைப் போராட்டமாகும். தமிழ்நாட்டிலும் இந்தப் போராட்டம் ஊக்கம் பெற்று வருகிறது. நாட்டு விடுதலைப் போராட்டத்துக்கு சற்றும் குறையாத இந்தப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் முன்களப் பணியாளர்களாக களமாடி வருகிறார்கள்.

இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் சதியை முறியடித்தேயாக வேண்டும்

இந்து மேலாதிக்கவாத முகாமின் நீண்டகாலத் திட்டமான இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஒழித்துக் கட்டுவதற்கான உரத்த கூச்சல் இப்போது வெளிப்படையாக கேட்கிறது. இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தையொட்டி, ஒரு புதிய அரசமைப்புச் சட்டத்திற்கான வாதம் மிகவும் துணிச்சலாக பொருளாதார நிபுணர் விவேக் தேப்ராய் ஒரு செய்தித்தாளில் எழுதிய கட்டுரையின் வடிவத்தில் வெளிவந்துள்ளது.

ஜனநாயக இந்தியா, சட்டப்பூர்வமாக்கப்பட்ட சர்வாதிகாரத்தை சகித்துக் கொண்டிருக்காது

 சுதந்திரத்தின் 76 வது ஆண்டு விழாவை இந்தியா கொண்டாடும் போது, பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையிலிருந்து ஆற்றிய தனது பத்தாவது சுதந்திர தின உரையை தேர்தலுக்கான மற்றுமொரு கடும் முயற்சிக்கான உரையாக மாற்றினார். ஊழலுக்கும், குடும்ப அரசியலுக்கும் எதிரான அவரது சோர்வுமிகுந்த வாய்ச்சவடால், அதிகரித்து வரும் மக்களின் கோபத்தையும், அவரது பாசிச ஆட்சிக்கு எதிராக எழுந்து வரும் அரசியல் ஒற்றுமையின் அறிகுறிகளையும் பற்றி அவருக்கு வளர்ந்து வரும் பயத்தையே வெளிப்படுத்தியது.

மகளிர் உரிமைத் தொகை: 1000 ரூபாய்; 1001 நிபந்தனைகள்!

ஜூலை 16 அன்று இந்து தமிழ் திசை நாளேட்டில், மகளிர் உரிமைத் தொகையா? உதவித் தொகையா? என்ற கேள்வியுடன் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. கட்டுரையாளர் பிருந்தா சீனிவாசன்  எழுதியிருந்த அந்த கட்டுரை, திமுக ஆட்சியை பலவாறும் குறை கூறியிருந்தது. திமுக அரசை குறை கூறுவதன் மூலம் திமுக எதிர்ப்பு வெளியை விரிவுபடுத்தி பாஜக- அதிமுகவுக்கு உதவும் வேலையை இந்து தமிழ் திசை செய்து வருவது அனைவரும் அறிந்ததே. அந்த வரிசையில் இந்த கட்டுரை, பெண்கள் மத்தியில் திமுக ஆதரவை சரிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இந்த கட்டுரையை முன்வைத்து 'மகளிர் உரிமைத் திட்டத்தை' ஆய்வு செய்வோம்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எனும் சவால்

இன்றைய இந்தியாவில் இடைவிடாத தாக்குதல் தன்மை மிக்க நிர்வாகத் துறையால் அரசாட்சி செயல்படுத்தப்படுகிறது. இது சட்டம் உருவாக்கும் நம்பிக்கைக்குறிய ஒரு கருவியாக மட்டுமே செயல்படுவதாக நாடாளுமன்றத்தை மாற்றியுள்ளது. நீதித்துறையில் இருந்து வரும் எந்த ஒரு சரிசெய்யும் நடவடிக்கையும் நிர்வாக ஆணைகள் மூலம் அலட்சியத்துடன் தூக்கி எறியப்படுகிறது.