வேண்டாம் மோடி;

வேண்டும் ஜனநாயகஅரசியல் மாற்று!

  • பாலசுந்தரம்

சர்வாதிகார மோடி ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு மீண்டும் வாக்களித்துள்ளதுதென் மாநிலங்களிலேயே ஒரு தொகுதியைக் கூட பெற முடியாத மாநிலங்கள்  தமிழ்நாடுபுதுச்சேரிதான். இந்தியா கூட்டணி 40 தொகுதிகளையும் வென்று மீண்டும் சாதனை படைத்துள்ளது.

2014  முதலே பாஜகவுக்கும் மோடிக்கும்  வலுவான தடை அரணாக விளங்கிவரும் தமிழக மக்கள் 2024 தேர்தலிலும் மோடியையும் பாஜகவையும் வலுவாக நிராகரித்துள்ளனர். ராமரை முன்வைத்து ஆன்மீக பயணம்தேர்தல் பயணங்கள் என எட்டுமுறை தமிழ்நாட்டுக்கு வந்துபோன மோடிக்கும் அவரது பாஜகவுக்கும் எதிர்பார்த்தவாறு பலன் கிடைக்கவில்லைஅண்ணாமலையின் "என் மண் என் மக்கள்பயணம், 25 விழுக்காடு வாக்குகள்இரட்டை இலக்கங்களில் தொகுதிகள் என்ற அவரது பிரகடனத்தையெல்லாம் மக்கள் பொய்யாக்கி விட்டனர்வலுவான இந்துத்துவா கோட்டையாக இருந்த உத்திரபிரதேசம் பாஜக பெரிதும் எதிர்பார்த்த மகாராஷ்ட்ரம்மேற்குவங்கம் பாஜகவுக்கு பலத்த அடிகொடுத்த மக்கள் எழுச்சியுடன் தமிழகபுதுவை மக்களும் இணைந்து கொண்டனர்.

2014, 2019 ன் தொடர்ச்சியாக  கார்ப்பரேட்-இந்துத்வா பாஜகவும் அதன் கூட்டணியும் 2024 ல் தேர்தலில் ஒரு தொகுதியைக்கூட பெறமுடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளனர் தமிழ்நாடு-புதுச்சேரி வாக்காளர்கள்.இந்தியா கூட்டணி உருவாவதற்கு முன்பே மாநிலத்தில் வலுவான அணியாக இருந்தது திமுக தலைமையிலான அணி. இந்த தேர்தலில்இந்தியா கூட்டணியில் இடம் பெற்று துவக்கம் முதலே பாஜகவுக்கு எதிரான நன்கு கட்டமைக்கப்பட்டஉறுதியான கருத்தியல் அரசியல் எதிர்ப்பாக எழுந்து நின்ற இந்தியா கூட்டணியை வாக்காளர்கள் வெற்றிபெற வைத்துள்ளனர்மீண்டும் ஒருமுறை இந்துத்துவசர்வாதிகார பாஜகபாமகதமாகா கூட்டணிக்கு தமிழ்நாட்டு மக்கள் தங்கள் வலுவான மறுப்பைக் காட்டியுள்ளனர்.பாஜக கூட்டணியிலிருந்து விலகி, தனி அணி அமைத்து போட்டியிட்ட போதும் அதிமுக கடும் தோல்வியை சந்தித்துள்ளது. கோவை உள்ளிட்ட 10 தொகுதிகளில் அதிமுக, பாஜக வால் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 7 தொகுதிகளில் வைப்புத்தொகையையும் இழந்துள்ளதுஅதிமுகவின் வாக்குகள் மூன்று பக்கங்களில் திரும்பியிருந்தாலும் பாஜக பக்கம் பெருமளவில் பாய்ந்துள்ளதுஅண்ணாமலை போட்டியிட்ட கோவையில் இது பெருமளவில் நடந்துள்ளது தெரியவருகிறது. அதிமுக ஆட்சியின்போது பாஜகவின் பாசிச சர்வாதிகார கொள்கையை எடப்பாடி பழனிச்சாமி ஆதரித்ததை மக்கள் மன்னிக்கத் தயாராக இல்லை என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இடதுசாரிகள்விடுதலை சிறுத்தைகள்மதிமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளன. இது பாசிச பாஜக எதிர்ப்பில் ஊன்றி நின்ற பலவண்ண அரசியல் சக்திகளைக்கொண்ட அரசியல் பன்மை வாதத்தின் அரசியல் வெற்றியைக் காட்டுகின்றனசனாதன பாஜக எதிர்ப்பில் உறுதியாக ஊன்றி நின்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற்று அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி தகுதி பெற்றிருப்பது வரவேற்கத்தக்க வளர்ச்சியாகும். இதைநாடுதழுவிய அளவில் தலித்துகள் பாஜகவுக்கு எதிராக திரும்பியிருப்பதன் தமிழ்நாட்டின் சாட்சி என்று சுட்டிக்காட்டலாம்அதே சமயம்பாஜகஅதிமுகவுடன் கூட்டணி கண்ட தலித் கட்சிகள்தலைவர்கள் தோல்வி கண்டிருப்பதையும் காண வேண்டும். மாநிலத்தில் தலித்துகள் பெரிதும் பாஜக வுக்கு எதிராக அணிதிரண்டு நின்றிருப்பது முன்னோக்கிய வளர்ச்சியாகும்.

கடந்த தேர்தல்களை ஒப்பிட்டு, திமுக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட கூட்டணியின் வாக்கு விழுக்காடு குறைந்துள்ளதையும் திமுகவின் வாக்கு அடித்தளம் குறைந்துள்ளதையும் தேர்தல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். மூன்றாண்டுகால திமுக ஆட்சி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியும் இதற்கு காரணமாக சுட்டிக் காட்டப்படுகிறதுதிமுக கூட்டணி கட்சிகள் இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்மற்றொரு பக்கம்தொகுதிகளைப் பெறமுடியாவிட்டாலும் பாஜகநாம்  தமிழர் கட்சிகளின் வாக்கு விழுக்காடு படிப்படியாக அதிகரித்து வருவதையும் பார்க்க முடிகிறதுநாதக மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படும் வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது.

இந்த இரண்டுமே எதிர்மறையான திசையில் மூன்றாவது அரசியல் வெளியைக் கைப்பற்ற முயற்சிப்பதைக் காட்டுகிறது. திமுக கூட்டணிஅதிமுக கூட்டணி பற்றி கடுமையாகச் சாடியுள்ள அண்ணாமலை, தனது பேட்டியில் நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை பாராட்டியிருப்பது கவனிக்கத்தக்கது. இரண்டுமே திராவிட அரசியல் எதிர்ப்பு என்ற பேரில் வளர கவனம் காட்டுகின்றன.

கடந்த 10 ஆண்டுகளின் பாசிச அச்சுறுத்தலின் பின்னணியில் இந்தியா கூட்டணி ஒன்று உருவானது மிகவும் அவசியமானது என்பதையே மக்கள் தீர்ப்பு உணர்த்துகிறதுகூட்டணி ஆட்சி என்ற வடிவில் பாஜகவின் ஆதிக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றாலும் பாஜக ஏற்படுத்தியுள்ள சேதாரத்தைச் சீர்செய்ய வேண்டியுள்ளதுபாஜக அச்சுறுத்தலுக்கெதிராக விழிப்புடன் வலுவான போராட்டம் தொடரப்பட வேண்டியிருக்கிறதுதிராவிட அரசியலை குறிவைத்து பிற்போக்கு சக்திகள் எழுந்து வர எத்தனிக்கும்போது அது இடது, முற்போக்குஜனநாயக சக்திகளையும் குறி வைக்கிறது. எனவே இடதுஜனநாயகமுற்போக்கு சக்திகள்அரசியலின் வலுமிக்க மய்ய நீரோட்டமாக எழுவதற்கு தம்மை அணியப்படுத்திக்கொள்ள வேண்டும்எந்தவகையிலும் பாஜக எதிர்க்கட்சி வெளியை கைப்பற்றிக் கொள்ள விட்டுவிடக்கூடாதுஅப்போது மட்டுமேதிராவிட அரசியலுக்குப் பிந்தைய அரசியல் வெளியை நோக்கி நகர்ந்து  கொண்டிருக்கும் தமிழ்நாட்டு அரசியல் களத்தில் பாஜக உள்ளிட்ட பிற்போக்கு சக்திகளை களமாடி முறியடிக்க முடியும்புதிய தலைமுறை சக்திகளை ஆக்கபூர்வமான திசையில் அணிதிரட்டவும் முடியும்.

"வீழ்க பாசிசம்; வெல்க இந்தியாமுழக்கத்துடன் பாஜக எதிர்ப்பில் இந்தியா கூட்டணியின் அங்கமாக களம் கண்ட மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட் கட்சி வருங்கால சவால்களை எதிர்கொள்ள தன்னை வலுப்படுத்திக் கொண்டு முன்னேற உறுதி ஏற்கிறது.