தோழர் டாக்டர் லக்ஷ்மி நாராயணா, செவ்வணக்கம்!

தோழர் டாக்டர் லக்ஷ்மி நாராயணா, 

செவ்வணக்கம்! ✊🏾

மனித உரிமைகள் மற்றும் சாதி எதிர்ப்புச் செயற்பாட்டாளரும் கர்நாடக சிபிஐஎம்எல் கட்சியின்  நீண்டகாலத் தலைவர்களில் ஒருவருமான டாக்டர் வி லக்ஷ்மி நாராயணா அவர்கள் 22 ஏப்ரல் 2024 அன்று இரவு 11.30 மணியளவில் மைசூரில் காலமானார். தோழர் லக்ஷ்மி நாராயணா ஒரு தோல் மருத்துவர்.

காலங்கள் மாறும்! சர்வாதிகாரம் முடிவுக்கு வந்தே தீரும்!

மோடி அரசாங்கம் கலங்கிப் போயிருப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என்று வழங்கிய தீர்ப்பினால் மோடி அரசாங்கம் கிடுகிடுத்துப் போயுள்ளது. நன்கொடை வழங்கியவர்கள், பெற்றவர்கள் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. தலைமை நீதிபதிக்கு தொல்லை கொடுக்கவும், நீதித்துறையை மிரட்டவும் பாஜகவோடு நெருங்கிய தொடர்பில் உள்ள வழக்கறிஞர்கள் ஒன்றுபட்டு செயல்படுகின்றனர். சந்தேகத்திற்கிடமான இந்த வழக்கறிஞர் குழுவினரால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தை மோடி அங்கீகரித்துள்ளார்.

மார்க்ஸிய கலைச்சொற்கள் , தோழர் எஸ்.வி.ஆருடன் ஓர் நேர்காணல்

[தோழர் எஸ்.வி.ஆருடன் நடந்த மிகநீண்ட உரையாடலின் ஒரு பகுதி மட்டும்]

மார்க்சியம் கற்பது எவ்வளவு அவசியமோ அதேபோல் மார்க்சியத்தை விமர்சிப்பவர்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்களை நாம் வெல்ல முடியும். அவர்களின் கேள்விகள் மூலமாக நமது மார்க்சியக் கண்ணோட்டத்தை செழுமைப்படுத்த முடியும். 

பாட்டாளி வர்க்கம் எனும் சொல்லாடல்

சிபிஐ (எம்எல்) (விடுதலை) தேர்தல் பரப்புரை இயக்கம்

நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் சிபிஐஎம்எல் கட்சி, இந்தியா கூட்டணியின் அங்கமாக பீகாரில் 3 தொகுதிகளும் ஜார்க்கண்டில் ஒரு தொகுதியும் மட்டுமே போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணி வடிவம் பெறாத மேற்கு வங்கம் மற்றும் ஆந்திராவில் ஒவ்வொரு தொகுதியில் போட்டியிடுகிறது. தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், அதற்காக சோம்பி இருக்கவில்லை. தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து செயலூக்கமிக்க பரப்புரை இயக்கத்தை சுதந்திரமாக மேற்கொண்டது.

மக்களவைக்கு ‘இந்தியா’ கூட்டணி சார்பாகப் போட்டியிடும் சிபிஐஎம்எல் வேட்பாளர்கள்

இந்தியா கூட்டணியில், பீகார் மாநிலத்தில் அர்ரா, காராக்கட், நலந்தா; ஜார்கண்ட் மாநிலத்தில் கோடர்மா மக்களவைத் தொகுதிகளிலும் பீகார் மாநிலம்

அகியோன் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் சிபிஐஎம்எல் கட்சி

வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. 

1) காராக்கட் : 

தோழர் ராஜாராம் சிங்

சிபிஐஎம்எல் தேர்தல் நிதிக்கு நன்கொடை அளிக்க வேண்டுகிறோம்!

பல ஆண்டுகளாக இந்தியாவின் அரசமைப்புச் சட்டமும், அந்த அரசமைப்புச் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள பல கட்சி ஜனநாயகமும் கூட்டாட்சி கட்டமைப்பும் என்றென்றைக்குமானது என நம்பிக் கொண்டிருந்தோம். நாம் இனியும் அவ்வாறு நம்பிக் கொண்டிருக்க முடியாது என்பதை 2024 தேர்தல்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. இந்தியாவை ஒரு கட்சி மட்டுமே ஆளுகின்ற ஆட்சி முறைக்கு மாற்றிட மோடி அரசாங்கம் துடிதுடித்துக் கொண்டிருக்கிறது. பதவியில் இருக்கும் டெல்லி முதலமைச்சர் உட்பட, இரண்டு முதலமைச்சர்கள் தேர்தல் காலத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.