கர்நாடகா:

பாஜகவுக்கு பெருத்தஅடி!

காங்கிரசுக்கு எச்சரிக்கை!

கர்நாடகாவில் மே 2023ல் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தனஓராண்டுக்குள்ளாகவே நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றதுசட்டமன்றத் தேர்தலின்போதுமாநிலத்தில் ஆட்சியிலிருந்த பாஜகவை வீழ்த்தி மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியதுபாஜக 66 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றனர்வெற்றிக்கான காரணங்களாக க்ரஹ ஜோதிவீட்டு உபயோக மின்சாரத்திற்கு 200 யூனிட்டுகள் வரை இலவசம்), க்ரஹ லட்சுமி (தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2000), அன்ன பாக்யா (5 கிலோ இலவச அரிசிகூடுதலாக கிலோவுக்கு ரூபாய் 34 விலையில்கிலோ அரிசி), சக்தி (பெண்களுக்கு பேருந்துகளில் இலவசப் பயணம்), யுவ நிதி (வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதம் ரூபாய் 3000மும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூபாய் 1500 ம் வேலையில்லா நிவாரணமாக வழங்குதல்), போன்ற காங்கிரஸ் அளித்த உத்தரவாதங்கள் அமைந்தனகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் இந்த உத்தரவாதங்கள் நிறைவேற்றவும் பட்டன. இதன் விளைவாக 5.10 கோடி பயனாளிகள் பயன் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவின் 28 தொகுதிகளுக்கு தேர்தலை சந்திப்பதற்கு முன் பாஜகதேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி ஏற்படுத்திக் கொண்டதுபாஜக வெற்றிக்கு இது பெருமளவு உதவி இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பின் நடத்தப்பட்ட சில ஆய்வுகள் (ஊதுகுழல் ஊடகங்கள் பிஜேபிக்கு இன்னும் அதிக வெற்றிக்கான வாய்ப்பு உள்ளது என்ற கருத்தை முன்வைத்தன), அதன் ஜனரஞ்சக உத்தரவாதத் திட்டங்களால் பாஜகவை விட காங்கிரஸ் அதிக தொகுதிகளை கைப்பற்றும் என அறிவித்திருந்தனஅத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தேர்தல் முடிவுகள் தலைகீழாய் போய் பாஜக – மஜத கூட்டணி 19 இடங்களைப் பெற்ற போது, காங்கிரஸ்இடங்களில் வென்றதுபாஜகமஜத கூட்டணி 51% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. லிங்காயத் மற்றும் ஒக்கலிக்கா சாதி ஓட்டுகள் இந்து ராஷ்ட்ரா என்ற மதவாத நிகழ்ச்சி நிரலின் கீழ் ஒன்றுபட்டு அணி திரண்ட காரணத்தால் சாமராஜ் நகர்ஹாசன் தவிர பாஜக ஒட்டுமொத்த தென் கர்நாடகாவிலும் மும்பை கர்நாடகாவிலும் வெற்றி பெற்றது.. கடந்த சில நாடாளுமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரசை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று வருவதானது கர்நாடகாவில் இந்துத்துவ பாசிசம் வலுவாக காலூன்றியிருப்பதையே காட்டுகிறது. 2019-ல் பாஜக 25 இடங்களை கைப்பற்றிய போது காங்கிரசும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தலா ஒரு இடத்தை வென்றனஇன்னொரு இடத்தில் சுயேச்சை வெற்றி பெற்றார். உண்மையிலேயே காங்கிரஸ் 1999இல் 28 தொகுதிகளில் 18ஐ கைப்பற்றிய பிறகு, 2014 மற்றும் 2024 இல்இடங்களை கைப்பற்றியது தான் அதனுடைய சிறந்த செயல்பாடாகும். அப்படிப் பார்க்கும் போதுஇடங்களில் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கதுதான். ஆனால்போதுமானதல்ல.

கர்நாடகாவில் 2019ல் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் 2024 தேர்தலில்தொகுதிகளை கைப்பற்றியுள்ளதானது ஆர்எஸ்எஸ்பாஜகவுக்கு எதிரான உணர்வு மாநிலத்தில் வளர்ந்து வருகிறது என்பதை மறுக்க முடியாதுதலித்துகள்விவசாயிகள், தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் ஒன்றாக இணைந்து பாஜகவின் பிளவுவாத அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக தங்களது எதிர்ப்பை சாதுர்யமாக கட்டமைத்தனர்குடிமைச் சமூக அமைப்புகளும் அவற்றின் வலைப்பின்னலும் விலைவாசி உயர்வுவேலையின்மைமதவாத பரவலாக்கத்துக்கு எதிராக தங்கள் சொந்த தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்மத்திய நிதி ஒதுக்கீடு விசயத்தில் கர்நாடகாவும் (மற்ற தென் மாநிலங்களும்மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்தப்படுவது பற்றிய முக்கிய அம்சமும் தேர்தலில் பரவலாக எடுத்தாளப்பட்டது.

இவ்வாறாக, கர்நாடகாவின் கலவையான தேர்தல் முடிவுகள் காவி நிகழ்ச்சி நிரலுக்கு பின்னடைவையும் கூட்டாட்சிமதநல்லிணக்கம்வளர்ச்சி குரல்களின் எழுச்சியையும் குறிப்பிட்டுக் காட்டும் அதேவேளைமாநிலத்திலிருந்து வலதுசாரிகளை வெளியேற்றுவதில் உள்ள சவால்களையும்  சுட்டிக்காட்டுகிறதுதேர்தல் முடிவுகள் மக்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற காங்கிரசுக்கான எச்சரிக்கையையும் வெளிப்படுத்தியிருக்கிறதுமாநிலத்தில் பத்தாண்டு கால காவி மயமாக்கம் என்பது குறிப்பாக கடலோர கர்நாடகாபெங்களூருமைசூரு, தார்வாட் – ஹுப்பள்ளியின் நகர்ப்புறப் பகுதிகளில் ஆர் எஸ் எஸ்பாஜகவுக்கான ஆதரவையும் ஏற்புடமையையும் உறுதிப்படுத்தியிருக்கிறது. பாசிசத்திற்கு தீர்மானகரமான இறுதி அடியை கொடுப்பதற்கு மக்கள் அளித்த இந்தத் தேர்தல் முடிவுகளை பற்றிக் கொண்டு முன் செல்ல வேண்டியது இன்றியமையாததாகும்.

பெட்டிச் செய்தி

தென்னிந்தியாவில் பாஜக

பாஜகதென்னிந்தியாவின்மாநிலங்களில் உள்ள 131 இடங்களை தொடர்ச்சியாக குறி வைத்து வேலை செய்ததன் பலன்களை குறிப்பதாகவே உள்ளதுஆந்திரப் பிரதேசத்தில் 2019 தேர்தலில் பாஜக வானது நோட்டாவை விட குறைவான வாக்குகளைப் பெற்றதுஆனால்இந்த முறை தெலுங்கு தேசம் மற்றும் ஜன சேனாவுடன் கூட்டு வைத்துஇடங்களை கைப்பற்றியுள்ளதுதெலுங்கானாவில்தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த பாஜகஇம்முறைதொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது (மொத்தமுள்ள 17 நாடாளுமன்ற தொகுதிகளிலிருந்துஇதுவும் கூட சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்ற பின்னணியில் நடந்துள்ளது. இதுவரை நடந்த தேர்தல்களில் கேரளாவில் வெற்றியே பெறாத பாஜக, 2024 நாடாளுமன்ற தேர்தலில் திரிச்சூர் தொகுதியை வென்று தனது கணக்கைத் துவங்கியுள்ளதோடு மாநிலத்தில் 16 % வாக்குப் பங்கினையும் பெற்றுள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத நிலையில், 2019 தேர்தலில் 3%மாக இருந்த தனது வாக்கு  விகிதத்தை இந்தத் தேர்தலில் 11 % மாக உயர்த்தியுள்ளது.