ஜூன் 27, 2022 மனு கொடுக்கும் போராட்டம் - வண்டலூர்

ஜூன் 27, 2022 செங்கற்பட்டு மாவட்டம், வண்டலூர் பகுதி மக்கள் கோரிக்கை முன்வைத்து மனு கொடுக்கும் போராட்டம் CPIML கட்சி சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது.

ஜூன் 27, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் AIPWA கண்டன ஆர்ப்பாட்டம்

ஜூன் 27, 2022 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டாச்சியர் அலுவகம் எதிரில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் நாடு தழுவிய இயக்கம் (ஜூன் 20-27 வரை) தோழர் செல்வி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

#CPIML மாவட்ட செயலாளர் தோழர் கலியமூர்த்தி கோரிக்கை விளக்கி பேசினார். 40க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.

பெண்களை குறி வைக்கும் மதவெறி வெறுப்பு பேச்சு, வன்முறைக்கு எதிராக;

விலைவாசி உயர்வு வேலை இல்லா திண்டாட்டத்துக்கு எதிராக போராடுவோம்!

பாசிச மோடியை வெளியேற்றுவோம்!

பெண்கள் பாதுகாப்பு, கவுரவம், உரிமைகளுக்காக அணிதிரள்வோம்!

ஜுன் 24, 2022 திருவள்ளூர் மாவட்டத்தில் CPIML கண்டன ஆர்ப்பாட்டம்… 

ஜுன் 24, 2022 திருவள்ளூர் மாவட்டத்தில் CPIML கண்டன ஆர்ப்பாட்டம்… 

நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி CPIML சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மோடி அரசே தேசவிரோத அக்னிபாத்தை திரும்பப்பெறு! சேலத்தில் SKM ஆர்ப்பாட்டம்!

மோடி அரசே தேசவிரோத அக்னிபாத்தை திரும்பப்பெறு!
சேலத்தில் SKM ஆர்ப்பாட்டம்!

சேலம் கலெக்டர் அலுவலகம் முன் ஐக்கிய விவசாயிகள் முன்னணி (SKM) இன்று 24.6.2022 வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் ஏ.ராமமூர்த்தி (SKM., மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் ஏஐகேஎம் நிர்வாகி அய்யந்துரை, AIKKMS நடராஜன், AIKS உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். 

AIKM- சிபிஐஎம்எல், AIKS-  சிபிஎம், சிபிஐ,  எஸ்யூசிஐ அமைப்பு விவசாயிகளும், முன்னணி ஊழியர்களும் பங்கேற்றனர்.