ஜூலை 04, 2022 சேலம் மாவட்டத்தில் இடதுசாரி இளைஞர்-மாணவர் கண்டன ஆர்ப்பாட்டம்.

அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற கோரி சேலத்தில் இடதுசாரி- விடுதலை சிறுத்தைகள் இளைஞர்-மாணவர் கூட்டியக்க கண்டன ஆர்ப்பாட்டம்..,

04/07/2022 நிரந்தரமற்ற, ஒப்பந்த முறை திட்ட அடிப்படையில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற கோரி சேலத்தில் இடதுசாரி இளைஞர் மாணவர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் இளைஞர்-மாணவர் கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஜுலை 04, 2022 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் CPIML சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்!

ஜுலை 04, 2022 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) CPIML சின்னசேலம் ஒன்றிய செயலாளர் தோழர் K.ஜான்பாட்ஷா தலைமையில் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் T. கலியமூர்த்தி உரையாற்றினார். தோழர்கள் K.ஜான்பாட்ஷா, T ராஜேந்திரன், அம்மாசி, ஏழுமலை, கோலமுத்து, கொளஞ்சிநாதன், கலாமணி உள்ளிட்ட தோழர்கள் மற்றும் திமிரெட்டிப்பாளையம் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

கோரிக்கைகள்:-

பாட்னாவில் ஜூன் 5 அன்று முழு புரட்சி நாள் (சம்பூர்ண கிரந்தி திவாஸ்) நிகழ்ச்சி

பாட்னாவில், பாபு சபாகரில் நிகழ்ந்த மகா கூட்டணியின் மாபெரும் கருத்தரங்கில் இந்த ஆண்டின் முழு புரட்சி நாள் அனுசரிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணியின் கேடுகெட்ட ஆட்சியினை அம்பலப்படுத்தும் விதமாக குற்றப்பத்திரிகை ஒன்றும் வெளியிடப்பட்டது.

ஜூன் 29, 2022 நெல்லையில் இடதுசாரி இளைஞர்- மாணவர்கள் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!

ஜூன் 29, 2022 நெல்லையில் இடதுசாரி இளைஞர்- மாணவர்கள் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்!

ஒன்றிய அரசின்  ஆர் எஸ் எஸ் சங்கிகளை உருவாக்கும், தேசப் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் ' அக்னி பாத் ' திட்டத்தை கைவிடு! இந்திய இளைஞர்களுக்கு நிரந்தர வேலை வழங்கு!! மனித உரிமை குரல்களை நெறிக்காதே!!! போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி இளைஞர்- மாணவர்கள் அமைப்புகளின் சார்பாக ஆர்ப்பாட்டம் நெல்லைநகரம் வாகையடி முனையில் 29-6-2022  நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் - DYFI, SFI, RYA, AISA, AIYF, AISF நெல்லை மாவட்ட தலைவர்கள்,  மற்றும் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

ஜூன் 28, 2022 திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.   

ஜூன் 28, 2022 திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.                                                                                                   

ஜுன் 28, 2022 கடலூர் மாவட்டத்தில் RYA, AIARLA கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜுன் 28, 2022 கடலூர் மாவட்டத்தில் RYA, AIARLA கண்டன ஆர்ப்பாட்டம்…
 
நிரந்தர வேலை பறிப்பு, நிச்சயமற்ற எதிர்கால வேலை வாய்ப்பு என்ற நோக்கில் ஒன்றிய அரசு அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெறக் கோரி RYA, AIARLA  சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தோழர் கிருபா தலைமையில் அண்ணா கிராமம் ஒன்றிய அலுவலகம் எதிரில் நடைபெற்றது. 

AIARLA மாநில தலைவர் தோழர்.பாலசுந்தரம், மாநில செயலாளர் தோழர்.ராஜசங்கர், CPIML மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர்.பாலசுப்ரமணியன், RYA மாநில செயலாளர் தோழர்.தனவேல் உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள்.

ஜூன் 27, 2022 மயிலாடுதுறை மாவட்டத்தில் AIPWA கண்டன ஆர்ப்பாட்டம்.

ஜூன் 27, 2022 மயிலாடுதுறை மாவட்டத்தில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் நாடு தழுவிய இயக்கம் (ஜூன் 20-27 வரை) மாவட்ட அமைப்பாளர் தோழர் K. மாதவி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜூன் 27, 2022 கரூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் AIPWA கண்டன ஆர்ப்பாட்டம்

ஜூன் 27, 2022 கரூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் நாடு தழுவிய இயக்கம் (ஜூன் 20-27 வரை) தோழர் பிலோமினா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.