21 ஏப்ரல் 2022 'லோக்மார்க்' கிலிருந்து மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. சிபிஐஎம்எல் டெல்லி செயலாளர் தோழர் ரவி ராய், சிபிஐஎம்எல், சிபிஐஎம் தலைவர்களுடன் இணைந்து எவ்வாறு ஜஹாங்கீர்புரியில் ஏப்ரல் 20 அன்று புல்டோசர்களை தடுத்து நிறுத்தினார் என்பதைப் பற்றி நினைவு கூறுகிறார்.

 

ஜஹாங்கீர்புரியில் உள்ள ஏழை முஸ்லிம் களின் குடிசைகளை இடித்து தள்ள வேண்டும் என்ற தீர்க்கமான முடிவோடு பிஜேபி தலைவர்கள் இருப்பதாக செவ்வாய்கிழமை நடு இரவுக்குப் பிறகு நமது தோழர்களுக்கு தெரியவந்தது. அரசியல் ரீதியான பழி வாங்குதல் களுக்காக மட்டுமல்லாமல், வட மேற்கு டெல்லியில் முஸ்லிம்களின் மத வழிபாட்டுத் தலங்களின் மீது வன்முறையான, முன் திட்டமிடப்பட்ட தாக்குதல்களை மேற்கொண் டதன் மூலம் வகுப்புவாத துருவ சேர்க்கையை அதன் உச்சத்திற்கு தள்ளவும் இப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனை நாம் முன் திட்டமிடப்பட்ட நடவடிக்கை என அழைக்கி றோம். ஏனென்றால், பல்வேறு சிறு நகரங்க ளிலும் பெரு நகரங்க ளிலும் குறிப்பாக, பிஜேபி ஆளும் மாநிலங்களில், முஸ்லிம்களின் குடியி ருப்புகளை இலக்காகக் கொண்டு தாக்கும், இதேபோன்ற தொரு முயற்சிகள் பின்பற்றப் படுகிறது.

இதன் அவசர நிலையை உணர்ந்து கொண்டு, புதன்கிழமை காலை சுமார் 10 மணிக்கு, சிபிஐஎம்எல் செயல் வீரர்களையும் தன்னார்வலர்களையும் கொண்ட சிறு குழு ஒன்று அந்த பகுதிக்கு விரைந்தது. சுமார் 11 மணி அளவில், அந்தப்பகுதியில் அனைத்துவித இடித்துத் தள்ளுதலையும் தடைசெய்வதற்கான உச்சநீதிமன்ற ஆணை வரும் வரை, கனரக புல்டோசர்களுக்கும் முஸ்லிம்களின் வீடுக ளுக்கும் நடுவே சுவர் போல நாங்கள் நின்றோம்.

ஹனுமான் ஜெயந்தி ஊர்வலத்தின்போது, குண்டர்களின் குழுவால் தாக்குதலுக்குள்ளான அந்த குறிப்பிட்ட மசூதியின் 300 மீட்டர் சுற்றளவில் உள்ள -பிரிவு முஸ்லீம் குடியி ருப்புப் பகுதியில், ஆறேழு புல்டோசர்கள் இயங்கிக் கொண்டிருந்தன என்பதொன்றும் தற்செயல் நிகழ்வல்ல. பெரும் எண்ணிக்கை யிலான காவல்துறையினரையும் தடுப்பு அரண்களையும் கொண்டு, அந்த ஒட்டு மொத்தப் பகுதியும் அதன் குறுக்குச் சந்துகளும் முற்றுகையிடப்பட்டு இருந்தன. இந்த ஏழை இந்திய குடிமக்களின் வீடுகள் ஏதோ தீவிர வாதிகளுக்கு சொந்தமானவை என்பது போல அந்த முற்றுகை இருந்தது.

முன்னதாக நாங்கள், டெல்லி (வடக்கு) மாநகராட்சி ஆணையருடன் விவாதம் நடத்தினோம். அதனால் எந்த பயனும் இல்லை.

தன்னிடம் எந்தவித எழுத்துபூர்வமான உத்தரவுகளும் இல்லையென்றும் இந்த இடிப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதிதான் என்றும் அவர் கூறினார். ஆக்கிர மிப்புப் பகுதியை இடித்துத் தள்ளுவது போல் புல்டோசர்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்க, காவல் துறையினரும்கூட இது வழக்கமான ஒன்று என்ற மாநகராட்சி அதிகாரிகளின் தந்திரத்தையே கையாண்டார்கள்.

சிபிஐஎம் தலைவர் பிருந்தாகாரத்தும் அவருடைய தோழர்களும் எங்களோடு உடன் இணைந்தனர். அதனால் நாங்கள் புல்டோசர் களைத் தடுக்க முடிவு செய்தோம்.

நான் தள்ளப்பட்டேன். மீண்டும் மீண்டும் காவல்துறையினரால் குண்டுகட்டாக தூக்கி செல்லப்பட்டேன். ஒவ்வொரு முறை நான் தாக்கப்படும் போதும் மீண்டும் மீண்டும் தீவிர முனைப்புடன் திரும்ப வந்தேன். புல்டோசர்களை நோக்கி நாங்கள் நீதிமன்ற ஆணையை காண்பித்தோம். அவர்கள் எதைப் பற்றியும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. சுட்டெ ரிக்கும் வெயிலில் இரண்டு மணி நேரம் இப்படியே நடந்தது. எங்களுடைய அமைதி வழியிலான, விடாப்பிடியான, உறுதியைக் கண்ட நிர்வாகம், இறுதியாக, தங்களுடைய புல்டோசர் களை விலக்கிக் கொள்ள முடிவெடுத்தது.

இது ஒரு தீய சதித் திட்டமாகும். மேலும், தெளிவான அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட நடவடிக்கையுமாகும். சட்டவிரோத ஆக்கிரமிப்பு என முத்திரை குத்தி அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று முன்னதாக, பிஜேபியை சார்ந்த டெல்லி மாநகராட்சியின் தலைவர் ஒரு கடிதம் எழுதினார் என்பதிலிருந்தே இது தெளிவாக தெரிகிறது. இது ஒரு அப்பட்டமான பொய்யாகும். நீண்ட காலத்திற்கு முன்பே அரசாங்கத்தால் இந்த 22 சதுர அடி பிளாட்கள் குடிமக்களுக்கு வழங்கப்பட்டிருந்தனபெரும்பாலான மக்கள் மேற்கு வங்க மாநிலம், மதினாபூரிலிருந்து  வந்தவர்கள். அவர்கள் கடுமையாக உழைக்கும், நேர்மையான மக்கள்.

இதற்கு நேர்மாறாக, முறைசாரா பொருளா தாரத்தில் வேலை செய்யும் ஏழைகளிலும் ஏழையான மக்கள், ஆங்காங்கே சிறுசிறு தற்காலிக குடியிருப்புகளை அமைத்துள்ளனர். மேலும், மனிதர்கள் வாழ்வதற்கு பொருத்தமற்ற நிலைமைகளில் வாழ்கின்றனர். அப்படி இருக்கும் போது, ஜஹாங்கீர்புரியிலுள்ள வங்காள முஸ்லிம்களை மட்டும் குறிவைத்து தாக்குவது ஏன்?

அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவருடைய கட்சியின் இரக்கமற்ற எதிர்வினை எதிர்பார்க் கப்பட்டது தான். அவர்கள் இந்த பிரச்சனையை, ரோஹிங்கியா மற்றும் பங்களாதேச அகதிகள் என்ற கோணத்தில் கொண்டு வந்ததன் மூலம் அவப்புகழ் வாய்ந்த பிஜேபியின் பரப்புரையை எதிரொலிப்பு செய்கிறார்கள். வகுப்புவாத குடிமக்கள் திருத்த சட்டத்திற்கு எதிராக, அமைதி வழியிலான ஷாஹின்பாக் போராட்டத்தில், அரசு ஆதரவோடு முஸ்லிம்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மதவெறி வன்முறையின் போது ஜால்ரா அடித்தது போன்றே இப்போதும் அவர்கள் செய்கிறார்கள். உண்மையிலேயே, கேஜ்ரிவால் மற்றும் அவருடைய கட்சி தலைவர்களின் நிலைபாடு வருத்தமளிப்பதும் கண்டனத்துக்குரியதுமாகும்