செங்கல்பட்டு: மனு கொடுக்கும் போராட்டம்

     மனைப் பட்டா கேட்டும் சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி கேட்டு தாம்பரம் மாநகராட்சியில் இகக(மாலெ) சார்பாக 24.6.2022 அன்று மனு கொடுக்கப்பட்டது. அந்த சமயம் மனு கொடுக்க வந்த இகக(மாலெ) தோழர்களிடம் தாம்பரம் மாநகராட்சி மேயருடைய தந்தை வரம்புமீறி வாக்குவாதம் செய்து அராஜகத்தில் ஈடுபட்டார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அவர் மீது தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
27.6.2022 அன்று வண்டலூர் வட்டாட்சியரிடம் மனைப் பட்டா கேட்டு மனுவும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஆணையரிடம் சாலை வசதி, அடிப்படை வசதிகள் கோரி மனுவும் இகக(மாலெ) கட்சி சார்பாகக் கொடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் இகக(மாலெ) சென்னை செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் தோழர் சொ.இரணியப்பன் தலைமையில் நடைபெற்றது. இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் போராட்டத்தை வாழ்த்திப் பேசினார்.