புதுச்சேரியில்
பெண்கள் பாதுகாப்பு, கவுரவம், உரிமைகளுக்காக... அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
பெண்களை குறிவைத்து மதவெறி வெறுப்பு பேச்சு, வன்முறைக்கு எதிராகவும் விலை உயர்வு, வேலையின்மைக்கு எதிராகவும் அரசியலை தேசப்பாதுகாப்பை கேள்விக்குள்ளாகும் இராணுவத்தை இந்துத்துவமயமாக்கும் ‘அக்னிபாத்' திட்டத்தை கைவிடக் கோரியும் புதுச்சேரி அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் 30.06.2022 அன்று உழவர்கரை நகராட்சி எதிரில் துணைத் தலைவர் மு.மீனாட்சி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) மாநிலச் செயலாளர் சோ. பாலசுப்பிரமணியன், அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக மாநிலச் செயலாளர் விஜயா, அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தலைவர் மல்லிகா, ஏஐசிசிடியு மாநிலச் செயலாளர் எஸ்.புருஷோத்தமன், ஏஐசிசிடியு மாநிலத் தலைவர் சோ.மோதிலால், அகில இந்திய விவசாய கிராமப்புறத் தொழிலாளர் சங்க தேசிய கவுன்சில் உறுப்பினர் கோ.பழனி, மத்திய பணிக்குழு உறுப்பினர் முருகன், புரட்சிகர இளைஞர் கழக அமைப்பாளர் ராஜராஜன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில்
சமையல் எரிவாயு உருளை வைப்புத்தொகை உயர்வு ரூ 750/ வை திரும்பபெற வேண்டும். தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் 200 நாள் வேலை ரூ.500/ தினக்கூலி என்பதை உறுதி செய்ய வேண்டும்!
மகளிர் ஆணையத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும்!
பெண்களை இழிவு படுத்தி கெடுபிடி வசூல் செய்யும் தனியார் நுண்கடன் நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கி ஆளுநர் பரிந்துரைப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண் கருமுட்டைகளை வேட்டையாடும் தனியார் கருத்தரிப்பு மையங்களை தடைசெய்ய வேண்டும்! அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான கருத்தரிப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.