கட்சியின் தமிழ்நாடு மாநில 11 ஆவது மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அனைத்து தோழர்களுக்கும் என்னுடைய புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஜக ஆர்எஸ்எஸ்ஸின் பாசிசத் தாக்குதலை ஒட்டுமொத்த நாடும் சந்தித்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த மாநில மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாடும் கூட அதில் தப்பிக்கவில்லை. தமிழ்நாடு கட்சியின் முதன்மையான குறிக்கோள், பாசிசத் தாக்குதலை எதிர்ப்பது தான் என்று தமிழ்நாடு கட்சித் தோழர்கள் மிகச் சரியாகவே தீர்மானித்துள்ளார்கள். கடந்த இரண்டு நாட்களாக கட்சி அறிக்கை, விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ளது. நமது கட்சியின் வரலாறு மற்றும் உழைக்கும் மக்களின் கவுரவம் மற்றும் சமத்துவம் என்கிற அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தில் நமது கட்சியின் பங்களிப்பு பற்றி தோழர் திபங்கர் வலியுறுத்திப் பேசினார். கருத்தியல் கடப்பாடு கொண்ட, அமலாக்கத்தில் அச்சமற்ற, அரசியல் தெளிவும், அமைப்பு ஒற்றுமையும் கொண்ட ஒரு வலுவான புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கு தேவை என்று தோழர் திபங்கர் சரியாகவே சுட்டிக்காட்டி இருக்கிறார். கடந்த இரண்டு நாட்களாக சில தோழர்கள் தமிழ்நாட்டில் சாதிய ஒடுக்குமுறை நிலவுவதாகவும் அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்றும் பேசி இருக்கிறார்கள். வர்க்க நிலைப்பாடு என்பது சமூக நிலைப்பாடாக இருக்கும் போது, வர்க்கப் போராட்டம் என்பது வெறும் பொருளாதார போராட்டமாக இருக்க முடியாது. அது அடிப்படையில் வர்க்கம், சாதி, பாலினம் உட்பட எல்லா வகையான பொருளாதார, சமூக ஒடுக்கு முறைக்கும் எதிரான போராட்டமாகும். அப்படிச் சொல்லும் போது, நாம் பொருளாதார வாத வலைக்குள் சிக்கிக் கொள்ளாமல் பாலின சமத்துவத்தையும், சாதி ஒழிப் பையும், வர்க்கப் போராட்டத்தின் அங்கமாக உறுதி செய்வதைக் குறிப்பதாகும். அயர்லா, தொழிற்சங்கம் என பல்வேறு வெகுஜன இயக்கங்களில் நாம் செய்கின்ற அணி திரட்டலை சோசலி சத்திற்கான அரசியல் ஆதரவாக மாற்ற வேண்டும். இதை செய்வதற்கு வர்க்க, அரசியல் உணர்வை உயர்த்துகின்ற, பொருளாதார வாதத்திற்குள் சிக்கிக் கொள்ளாத, போர்க்குணமிக்க போராட்டங்களை நாம் நடத்திட வேண்டும்.

தமிழ்நாட்டில் சமூக நீதி என்ற தோற்றத்துடன் திமுக ஆட்சியில் இருந்து கொண்டு, கார்ப்பரேட்டுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது, மேற்சொன்ன அணுகுமுறை தமிழ்நாட்டில் குறிப்பான தேவையாக உள்ளது. பாஜக/ ஆர் எஸ் எஸ் ன் பாசிச தாக்குதலுக்கு எதிராக போராடுகின்ற அதே வேளையில், தமிழ்நாட்டில் மாநில அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தி ஒரு உண்மையான எதிர்க்கட்சியாக செயல்பட தோழர்கள் சரியாகவே முடிவு செய்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், சமூக நீதி போராட்டத்தின் உண்மையான மரபுக்கு நாம் உரிமை கொண்டாட வேண்டும

இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிராவாக மாற்றிடும் வேலைத்திட்டத்தை நிறைவேற்றிட பாஜக/ஆர் எஸ் எஸ் அதன் வகை மாதிரி பாசிசத்துக்கு சாமானிய மக்களிடம் கருத்தொற்றுமையை உருவாக்க முயற்சிக்கிறது. அதற்காக அவர்கள் மக்களை மத ரீதியாக பிளவுபடுத்துகிறார்கள். பற்றி எரியும் பிரச்சனை களான கௌரவமான வாழ்க்கை, வாழ்வாதாரத்துக் கான கோரிக்கைகளை எழுப்ப விடாமல் தடுத்து வருகின்றனர். பாஜக ம் /ஆர் எஸ் எஸ்ம் ஒவ்வொரு ஜனநாயக நிறுவனங்களையும் ஆக்கிரமித்து அவற்றை தன்னுடைய பாசிச நிகழ்ச்சி நிரலை அமல்படுத்துபவயாக சுருக்குகின்றன. அதனால் அவர்களை எதிர்த்து ஒவ்வொரு முனையிலும் போராட வேண்டியுள்ளது. மற்ற வெகுஜன இயக்கங்களோடு கூடவே 'ஆதிவாசி சங்கரஷ் மோர்ச்சா' என்ற அமைப்பின் கீழ் ஆதிவாசிகளுக்கான போர்க்குணமிக்க போராட்டங்களை கட்டமைக்கும் படியும் வழக்கறிஞர்களை நீதிக்கான அனைத்திந்திய வழக்கறிஞர் சங்க பதாகையின் கீழ் அணி திரட்டும் படியும் வேண்டுகோள் விடுகிறேன்.

லெனின் குறிப்பிடுவது போல தமிழ்நாட்டுத் தோழர்கள் "மக்களின் நீரூற்றாக இருப்பார்கள்" என நம்புகிறேன். அவர்கள் மக்களின் துயரங்களுக்கு ஒடுக்கு முறைகளுக்கு அது எங்கு நடைபெறுகிறது? அது எந்த பிரிவு அல்லது வர்க்க மக்களை பாதிக்கிறது? என்பதைப் பற்றி கவலைப்படாமல் பதில் வினை ஆற்றுவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் எல்லா வெளிப்பாடுகளையும் பொதுமைப்படுத்தி, காவல்துறை வன்முறை அல்லது முதலாளித்துவ சுரண்டல் என்று வகைப்படுத்தும் ஆற்றல் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர், ஒவ்வொருவருக்கும் பாட்டாளி வர்க்க விடுதலைக்கான போராட்டங்களின் உலக வரலாற்று முக்கியத்துவத்தை தெளிவுபட தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு சம்பவத்தையும், அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அவற்றை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தனது சோசலிச கடப்பாடுகளுக்கு ஜனநாயக கோரிக்கைகளுக்கு ஏற்றார் போல் அவற்றை வடிவமைத்துக் கொள்பவராக இருக்க வேண்டும்.