கடந்த சில நாட்களாக மோடி அரசாங்கம், உச்ச நீதிமன்றத்தின் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி வருகிறது. நீதிபதிகளை நியமனம் செய்வதற்கான மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) முறையை, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரும், ஒன்றிய சட்ட அமைச்சர் கிரென் ரிஜுஜுவும் மாறி மாறி வெளிப்படையாக தாக்கிப்பேசி வருகின்றனர். அதோடு 2015 இன், தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை சட்ட விரோதமென தள்ளுபடி செய்த நீதிமன்றத்தின் தீர்ப்பு, "மக்களின் தீர்ப்பை" மதிக்காத செயல் என்று கூறி, குடியரசு துணைத் தலைவர் உச்ச நீதிமன்றத்தை கடுமையாக விமர்சித்தார். இதற்கு பதிலடியாக, உச்ச நீதிமன்றம் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியது. மேலும், இத்தகைய கருத்துக்களை ஒன்றிய அமைச்சர்கள் தெரிவிக்கக் கூடாதென அறிவுறுத்தக்கூறி அரசுத் தலைமை வழக்குரைஞர் ஆர்.வெங்கடரமணியைக் கண்டித்தது.
இந்தத் தாக்குதலின் காலத்தை புரிந்து கொள்வது ஒன்றும் சிரமமானதல்ல. 2014 இல் ஆட்சியை பிடித்தது முதல், உச்ச நீதிமன்றத்தில் பாதுகாப்பான பயணத்தை அனுபவித்த பிறகு, மோடி அரசாங்கம் நீதிபதி டி ஒய் சந்திரசூட் இந்திய தலைமை நீதிபதியானதையும் அவர் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு அந்தப் பதவியில் இருப்பார் என்பதையும் உணர்ந்து கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில் குறைந்த பட்சம் 19 நீதிபதிகள் உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட உள்ளனர். பிணை மனுக்கள் அல்லது பொதுநல மனுக்களை விசாரிக்கக் கூடாது என ரிஜுஜு உச்ச நீதிமன்றத்தை எச்சரிக்கும் மெல்லிய மறைமுக தாக்குதலில் மற்றொரு காரணமும் தெளிவாக தெரிகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 32 வது பிரிவின் கீழ்தான் இவ்வகை பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப் படுகின்றன; அதைத்தான் (32 வது பிரிவு) "அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவும் அதன் இதயமும்" என அம்பேத்கர் அறிவித்திருந்தார். பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், கருத்து வேறுபாடு கொண்ட குடிமகன்களான முகம்மது சுபைர், சித்திக் கப்பன், வரவர ராவ், ஆனந்த் டெல்டும்ப்டே போன்றவர்களுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியதின் பின்னணியில்தான் (உச்ச நீதிமன்றத்தின் மீது) இந்தத் தாக்குதல் நிகழ்ந்துள்ளது.
நீதிபதிகளை நியமிப்பதில் முதன்மை நிலை பெறுவதற்கான அரசாஙகத்திற்கும், நீதித்துறைக்கும் இடையேயான இந்தப் போட்டி சமீபத்தில் தொடங்கப்பட்டதல்ல. சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில், யார் நீதிபதிகளாவது என்பதை அரசாங்கம் முடிவு செய்தது. அவ்வப்போதைய சிற்சில அதிருப்தி களுக்குப் பிறகு, நிறுவப்பட்ட வழக்கங்களுக்கு மாறாக, மிகவும் மூத்த மூன்று நீதிபதிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நான்காவது மூத்த நீதிபதியை தலைமை நீதிபதியாக 1973 இல் இந்திரா காந்தி நியமித்த போது இந்த மோதல் அதிகமானது. அதனைத் தொடர்ந்து, ஜபல்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி வழக்கில் அவருடைய மாற்றுக் கருத்திற்கான தெளிவான தண்டனையாக நீதிபதி ஹெச் ஆர் கன்னா ஒதுக்கி வைக்கப்பட்டார். நீதிபதிகளின் நியமனத்திற்கும் நீதிபதிகளும், நீதித்துறையும் சுதந்திரமாக செயல்படுவதற்கும் இடையே உள்ள தெளிவான தொடர்பை இந்த அரசாங்க நடவடிக்கைகள் நிறுவியுள்ளன.
மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) வின் கீழ் நீதிபதிகளை நியமிக்கும் முறையின் அதிகாரத்தை திரும்ப எடுத்துக் கொள்வதற்கான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கிய 1993 வரையிலும் அரசாங்கம் அனுபவித்துவந்த இந்த முதன்மை நிலை நீடித்தது. ஆட்சிக்கு வந்த போதே நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தை அறிமுகப் படுத்தியதன் மூலமாக மோடி அரசாங்கம் இந்த முதன்மை நிலையை கைப்பற்று வதற்காக முயற்சித்தது. அது அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இது வரையிலும், இணங்கிப்போகிற நீதித்துறையை அனுபவித்துக் கொண்டிருந்த மோடி அரசாங்கம், மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்) நியமிக்கும் முறையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகளுக்கான நியமன அறிவிப்பை வழங்க மறுத்தது; மிகவும் குறிப்பிடத்தக்க இந்த நடவடிக்கையின் மூலம் உச்ச நீதிமன்றத்திற்கு நெருக்கடி கொடுப்பதை (அரசாங்கம்) தீவிரமாக்கி விட்டது.
"ஒரு சுதந்திர நீதிபதி என்பவர் எனக்கோ அரசாங்கத்திற்கோ உடையவரல்லர்" என மார்க்ஸ்[1] ஒருமுறை எழுதினார். நீதிபதிகளின் வர்க்கத் தோற்றுவாயில் எந்தவொரு குறிப்பி டத்தக்க மாற்றமும் அரிதாகக் கூட நிகழ்ந்திருக்க வில்லை என்பதில் எந்த அய்யமும் இல்லை. இருப்பினும், பல்வேறு உரிமைகள் குறித்த விளக்கங்கள், சில நேரங்களில் ஆளும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும், சில நேரங்களில் எதிராகவும் என தனித்துவமான மாற்றங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன. அப்போதும் கூட, ஒரு சுதந்திர நீதித்துறை, எதேச்சாதிகார ஆட்சிகளை குத்தும் முள்ளாக செயல்படலாம் என்ற தர்க்கத்திற்கு எதிரான விவாதம் அரிதாகக் கூட நிகழவில்லை. அவசர நிலையிலும் கூட, பெரும்பாலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசாங்கத்திற்கு அடிபணிந்து விட்ட போது, நீதிபதி ஹெச். ஆர். கன்னாவும், வேறுபல உயர் நீதிமன்ற நீதிபதிகளும் அரசமைப்புச் சட்டத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினர்.
ஆனாலும், முன்னெப்போதும் இல்லாத வாறு, இன்றைய காலகட்டம் நீதித்துறையின் முன்னால் ஒரு சவாலாக நிற்கிறது. 2014 இல் ஆட்சிக்கு வந்ததிலிருந்து மோடி அரசாங்கம் இந்துத்துவா கொள்கைகளை அப்பட்டமாக சட்டமாக்கும் போதெல்லாம், நீதிமன்றம் அரிதாகவே கேள்வி எழுப்பியிருக்கிறது. பணமதிப் பகற்றல் மீதான சவால்கள், பிரிவு 370ஐ திரும்பப் பெற்றதும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறு கட்டமைப்பு செய்ததும், குடியுரிமை திருத்தச் சட்டம், தேர்தல் பத்திரங்கள், போன்றவற்றோடு வேறு சிலதும் இதுநாள் வரையிலும் (நீதிமன்றத்தில்) நிலுவை யிலேயே உள்ளன. நெருக்கடிகால உணர்வு கொண்ட கேள்விகளுக்கு முடிவு காண்பதை நீதிமன்றங்கள் தவிர்ப்பது என்பது அரசாங்கத்திற்கு ஆதரவான முடிவாகும். இது, 'நீதித்துறையின் ஏய்ப்பு' என சட்ட அறிஞர் கவுதம் பாட்டியா வாதிடுகிறார். இருக்கும் நிலையை அப்படியே தொடர்வதில் அரசாங்கமே பயனாளியாகும். இது, சுதந்திர நீதித்துறை குறித்த பொதுமக்களின் உணர்வை அரிக்கும் செயலாகும்.
தலைமை நீதிபதி பதவியில் இருந்து ரஞ்சன் கோகாய் விலகிக் கொண்ட போது, மோடி அரசாங்கத்தால் அவர், மாநிலங்களவைக்கு பரிந்துரைக்கப்பட்டார். மேலும், மோடி அரசாங்கம் அருண் மிஸ்ராவை தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக்க சட்டத்தை திருத்தியது. பாபர் மசூதி, பண மோசடி தடுப்பு சட்டம், மிகச் சமீபத்திய பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்க ளுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கியமான விசயங்களில், உச்ச நீதிமன்றமும், ஆளும் ஆட்சியாளர்களுடைய அரசியல் திட்டங்களுக்கு பொருத்தமான தீர்ப்புகளையே வழங்கியிருக்கிறது.
அரசாங்கத்தின் மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகளை ஏற்றுக்கொண்டு, புலம்பெயர் தொழிலாளருக்கு நிவாரணம் கேட்ட, பொதுநல மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த கோவிட் வழக்குகள் இதற்கு ஆகச் சிறந்த உதாரணமாகும். "உச்ச நீதிமன்றத்தின் மிகவும் இருண்ட தருணம் என ஜபல்பூர் கூடுதல் மாவட்ட நீதிபதி, இனிமேலும் நினைவில் கொள்ளப்பட மாட்டார். அந்த அவப்புகழ் தற்போது கோவிட்19 பெருந்தொற்றின் போது தடுக்கப்பட்டிருக்கக்கூடிய புலம்பெயர்ந்தவர்களின் நெருக்கடி குறித்த நீதிமன்றத்தினுடைய எதிர் வினைக்குச் சொந்தமானதாகும்" என ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா அறிவித்தார். நீதிபதி குரேசிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கக் கூடாது என்ற அரசு நிர்வாகத்தின் முடிவிற்கு உச்ச நீதிமன்றம் பணிந்து போனது.
இவை எதுவும், மூத்த நீதிபதிகள் குழு (கொலீஜியம்)வின் கீழ் நீதிபதிகளை நியமிக்கும் முறையின் மீதான குறிப்பாக, உறவினர்களுக்கு வழங்கும் சலுகைகள், தலித்துகள், பழங்குடி யினர், மதச் சிறுபான்மையினர், பெண்கள், வர லாற்று ரீதியில் ஒடுக்கப்பட்ட மற்ற வகுப்பினர் ஆகியோருக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லாதது போன்ற நியாயமான விமர்சனங்களை மாற்ற இயலாது. மோடி அரசாங்கத்திடம் இருந்து தாக்குதலை எதிர்கொள்ளும் நேரத்தில், நியமனங்களில் போதுமான பிரதிநிதித்துவத் தையும் வெளிப் படைத் தன்மையையும் உறுதி செய்ய வேண்டியது உச்ச நீதிமன்றத்தின் பொறுப்பு.
நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரச மைப்புச் சட்டத்தின் ஒரு அடிப்படை அம்சமும், செயல்படும் ஜனநாயகத்திற்கு உச்சபட்ச முக்கியத்துவமும் கொண்டதாகும். "அச்சமோ அனுசரணையோ இன்றி நீதி வழங்கும் நோக்கத்திற்கு தேவையான" மிக அதிகளவு சுதந்திரத்தை நீதித்துறை கொண்டிருக்க வேண்டும் என அம்பேத்கர் அரசமைப்பு சபையில் அறிவித்தார். அரசாங்கத்திற்கும், (அரசமைப்புச் சட்டத்தின்) கவனமிக்க பாதுகாவலர்களுக்கும் (நீதித்துறை) இடையே உள்ள தனித்துவமான வேறுபாடு மீண்டுவராத நிலையில் (நீதித்துறை சுதந்திரம்) அழிந்துவிடக்கூடாது என ஒருவர் விழிப்புடன் இருப்பது மட்டுமே ஒரே வழி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)