சமத்துவம் எதிர் ஆர்எஸ்எஸ்நவீன இந்தியா பற்றிய கருத்துகளுக்கு இடையிலான அடிப்படை போர்

'சாதிய முறை இந்தியாவை ஒருங்கிணைக்கும் காரணியாகும்எவரொருவர் இந்த சாதிய முறையின் மீது தாக்குதல் தொடுக்கிறாரோ அவர் இந்தியாவிற்கு எதிரியாவார்' : என பஞ்சஜன்யாஆர்எஸ்எஸ்இன் இந்தி வார ஏடு தனது தலையங்கத்தில் கூறியதுசாதி  முறையை  வெளிப்படையாக  இப்படி புகழ்ந்திருப்பது அண்மைய ஆண்டுகளில் ஒருபோதும் நிகழவில்லைஅதுவும் இந்திய சுதந்திரத்தின்77 வது ஆண்டு நினைவுநாளை ஒட்டி இந்தத் தலையங்கம் வெளிவந்துள்ளதுமேலும் அடுத்த ஆண்டில் தனது 100 வது ஆண்டு  நிறைவைக் கொண்டாடப் போகும் ஆர்எஸ்எஸ்தற்போது இந்தியாவின் அதிகாரப்பூர்வ கருத்தியலுக்கு பொறுப்பாளராக உள்ளதுஎனவே இதனை ஒரு வழிவிலகிய வலதுசாரி பிற்போக்கு உளறல் என ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. 

இந்தியா பற்றிய ஆர்எஸ்எஸ் சின் பார்வையும்இந்திய  விடுதலை இயக்கத்தின் மூலம் வளர்ந்து வந்தபாபாசாகேப் அம்பேத்கரின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் உயர்த்திப்பிடித்தநவீன இந்தியாவின் பார்வையும் ஒன்றுக்கொன்று எப்போதும் நெரெதிராகவே இருந்து வந்துள்ளனஆனால் அரசு அதிகாரத்தின் மீது அதிகரித்து வரும் ஆர்எஸ்எஸ் பிடியின் மூலம் பெறப்பட்ட ஆணவத்தாலும் தண்டனையின்மையாலும் மட்டுமே இந்த அளவுக்கு இதனை  பகிரங்கமாக கூற முடிந்துள்ளதுஆர்எஸ்எஸ் அமைப்பில்  சேர்வதற்கும் அதன் நடவடிக்கைகளில் பங்கு கொள்வதற்கும்  அரசாங்க ஊழியர்களுக்கு இருந்த தடையை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கை சில நாட்களுக்கு முன்பு  நீக்கியதை நாம் கண்டோம்.

 தொடக்க ஆண்டுகளில் ஆர்எஸ்எஸ் கருத்தியலாளர்கள் அவர்களுடைய பார்வையை ஒருபோதும் மறைக்க முற்பட்டதில்லைஇந்தியாவின் இலட்சிய சமூக சட்டமாக மனுஸ்மிரிதியை அவர்கள் ஏற்றுக்கொண்டது குறித்தும்முசோலினிஹிட்லரின் கருத்துகளையும் கொள்கைகளையும் பின்பற்றுவது குறித்தும் அவர்களது கருத்துகள் மிகவும் வெளிப்படையாகவே இருந்தனஆனால் அதனுடைய சட்ட ரீதியான அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வதற்காகவே சுதந்திர இந்தியாவில் அரசமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடைய கதையாடலை அது வேறு வழியின்றி கைக்கொண்டதுஅதற்குப் பிறகு அதிகாரத்தை வெல்வதற்கும்தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்கும் போட்டிமிகுந்த தேர்தல் அரசியலின் தேவைகளுக்கு ஏற்ப மேலும் கூடுதலாக அது தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டியிருந்தது.  எஸ்சிஎஸ்டிஓபிசிகளுக்கு நட்பானவர்கள் என்ற ஏமாற்றுகிற பிம்பத்துடன் வித்தை காட்டுகிற கலையில் இன்றைக்கு ஆர்எஸ்எஸ்-இன் பார்ப்பனிய கரு நன்கு தேர்ச்சி பெற்றுள்ளது.

இந்த செயல்முறையில் சாதிய இட ஒதுக்கீட்டுப் பிரச்சனையை எதிர்கொள்ள பல்முனைப்பட்ட தந்திரங்களைக் கைக்கொள்வதில் ஆர்எஸ்எஸ் நன்கு பரிணமித்துள்ளதுமுப்பதாண்டுகளுக்கு முன்பு மண்டல் கமிஷனின் சில பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான தனது முடிவை விபிசிங் அரசாங்கம் முதலில் அறிவித்தபோதுஇட ஒதுக்கீட்டுக்கு எதிராக உரத்த குரலில் தனது நிலைப்பாட்டை சங்கிப் படையணி வெளிப்படுத்தியதை நாம் அறிவோம்ஆனால் ஆண்டுகள் பல கடந்த பிறகு இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதில் உள்ள பயனற்ற தன்மையின் எதார்த்தத்தை சங்கிப் படையணி புரிந்து கொண்டதுமாறாக  ஓபிசியின் ஒரு பிரிவினருக்கு எதிராக இன்னொரு பிரிவினரை நிறுத்துகிறபிரித்தாளும் சமூக பொறியியலின் கருவியாகசாதியை பயன்படுத்துகிற வித்தையில் அது தேர்ச்சி பெறத் தொடங்கிவிட்டது.2000 ஆண்டுகளாக கீழ்நிலையில் உள்ள  சாதிகள்சாதிய பாகுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதை முடிவுக்கு கொண்டு வர இன்னும்200 ஆண்டுகளுக்கு இட ஒதுக்கீடு தேவை என்பதை உயர்சாதி இந்தியர்கள் ஏற்றுக்கொள்வதில் அவர்களை இணங்கவைக்க2024 தேர்தல்களுக்கு முன்னதாக மோகன் பகவத் முயற்சித்தார்.

பகவத் வாயிலிருந்து வந்த இந்த2000 ஆண்டுகள் சாதிய  ஒடுக்குமுறை என்ற பேச்சு பல பத்தாண்டுகள் மறுப்புக்குப்  பிறகு மிகவும் காலதாமதமாக வந்த ஒப்புக்கொள்தல் போலக் கேட்கிறதுதற்போது ஆட்சியில் இருக்கும் போது இட ஒதுக்கீட்டை முற்றிலும் ஒழித்துக் கட்ட வேண்டும் எனச் சொல்வதற்கு மாறாகஇந்த முறையைச் சுற்றி தனது வித்தைகளைக் காட்டுவதன் மூலம் இட ஒதுக்கீட்டை வெட்டிச் சுருக்கவும் மறுக்கவும் பாஜக-விற்கு சிறந்த  பல வழிகள்  நிச்சயமாக  உள்ளன.  ஈடபிள்யுஎஸ் ஒதுக்கீடு என்ற பெயரில் உயர் சாதியினருக்கு  தனித்த இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது முதல்  பொய்யானசந்தேகத்திற்குரிய 'என்எப்எஸ்'-இன் (பொருத்தமானவர்கள் கண்டு பிடிக்கப்படவில்லைகட்டற்ற  பயன்பாடு மூலமாக எஸ்சிஎஸ்டிஓபிசி ஒதுக்கீடுகளை நிரப்பாமல் விடுவதுஇட ஒதுக்கீட்டை முற்றிலும் தவிர்ப்பதற்குரிய சாக்குப்போக்காக'குறுக்குவழி நுழைவைபயன்படுத்துவதுதனியார்மயமாக்கத்திற்கு கண்மூடித்தனமான முன்னுரிமை கொடுப்பது வரை இட ஒதுக்கீட்டு முறையை ஒழித்துக்கட்ட மோடி அரசாங்கம் பல்வேறு வழிகளை கையாள்கிறது.  இருப்பினும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கோரிக்கை ஆர்எஸ்எஸ்ஐ திடுக்கிடச் செய்திருப்பது போல தெரிகிறதுசமூகத்தின் அனைத்து நிறுவனங்களிலும் தளங்களிலும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற நியாயமான கோரிக்கையை ஒரு சாதிவாரி கணக்கெடுப்பு கட்டவிழ்த்துவிடும் என சங்கிப் படையணி அஞ்சுகிறதுஎனவே சாதிவாரி கணக்கெடுப்பு என்ற கருத்தாக்கத்தையே களங்கப்படுத்த அது தீவிரமாக முயற்சிக்கிறதுசாதி என்பது இந்து மதம்சாதி என்பது இந்திய தேசம்சாதிகள் அனைத்தும் ஒத்திசைவான ஒழுங்குடன் ஒற்றுமையாக இருக்கின்றன என பஞ்சஜன்யா தலையங்கம் கூறுகிறதுஆனால் சாதி மையமானதுசாதி எங்கும் நிறைந்திருப்பது எனில் நடப்பு நிலைமைகளுக்கேற்ப சாதிகள் பற்றிய புதுப்பிக்கப்பட்ட கணக்குக்கு ஆர்எஸ்எஸ் ஏன் அஞ்ச வேண்டும்ஏனென்றால் இந்தியாவில் பாலினமும் சாதியும் சமூக சமத்துவமின்மையின்ஏற்றத்தாழ்வின் மிகப்பெரிய குறிப்பான்கள் ஆகும்இந்தியப் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த அளவினை சுட்டிக்காட்டிஇந்தியாவின் அசிங்கமான பொருளாதார சமத்துவமின்மையை மூடி மறைக்க விரும்புகிற சங்கிப் பரப்புரை போலஒத்திசைவானஒருங்கிணைந்த சமூக ஒழுங்கு முறையின்தேசிய நிறுவனத்தின் அடிக்கட்டுமானமாக சாதி விளங்குகிறது என்ற புனைவை விற்பதன் மூலம் சமூக பிரதிநிதித்துவத்தின் முற்றிலும் பாகுபாடான இயல்பை மூடி மறைக்க அது விரும்புகிறது.

சங்கி-பாஜக நிறுவனம் சாதியைக் கட்டிக்காப்பது போலவே  இந்தியாவின் நட்புசார் முதலாளித்துவ ஒழுங்கமைப்பை கட்டிக்காப்பதையும் செய்கிறதுஅதானியின் அதிவேக வளர்ச்சிமாபெரும் கார்ப்பரேட் மோசடி குறித்தும்அதானி குழுமத்தின் கைகளில் செல்வத்தின்பொது சொத்துகளின் குறிப்பிடத்தக்க குவிமானத்துக்கு பின்னால் மோடிஅதானி பிணைப்பு ஆற்றிய மைய பாத்திரம் குறித்தும் எழுப்பப்பட்ட ஒவ்வொரு கேள்வியும் இந்தியாவுக்கு எதிரான சதிச் செயலாக முத்திரை குத்தப்பட்டு அதனை மெளனமாக்கும் முயற்சி மேற்கொள்ளப் படுகிறதுஅதானி,அம்பானி குறித்த கதைகள் அடிப்படையில்அரசு ஆதரவில் செல்வம் அதிதீவிரமாக குவிதலும் ஆடம்பரத்தின் ஆபாசக் காட்சியுமாகும்இருப்பினும் சங்கி சொற்பொழிவுகள் அவற்றை சிறப்பான தேசிய சாதனைகள் எனக் கொண்டாடுகின்றனமேலும் ஐந்து விழுக்காடு அதி பணக்காரர்களை நீக்கி விட்டால்இந்தியாவின் தனிநபர் வருமானம் உலகின் சில மிகவும் ஏழ்மையான நாடுகளுக்கு இணையாக வந்து விடும் எனக்கூறி உண்மையை மறைக்கிறார்கள்உண்மையில் சாதியும்நட்புசார் முதலாளித்துவமும் இந்தியாவின் தீவிர சமூகபொருளாதார சமத்துவமின்மையின் மிகவும் குறிப்பிடத்தக்க சுற்றுப்பாதைகளை வரையறை செய்கின்றனஆனால் இந்தியா குறித்த சங்கிப் பார்வையில் இந்தியாவின் சமூக நிலைத்தன்மைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இவை இரண்டு தூண்களாக விளங்குகின்றன.

இந்தியாவின் வெற்றிக்கதையாக சமத்துவமின்மையைக் கொண்டாடுகிற சங்கிப் பார்வைசுதந்திரம்சமத்துவம்சகோதரத்துவம் என்ற கொள்கைகளின் அடிப்படையிலானஇந்த மூன்று அம்சங்களையும் ஒருங்கிணைந்த முழுமையாகக் கொண்டிருக்கிற ஜனநாயகக் குடியரசாக இந்தியாவைக் காணுகின்ற அம்பேத்கரின் சமத்துவ பார்வைக்கு முற்றிலும் எதிராக செல்கிறதுஅம்பேத்கரை பொருத்தவரையில் 'ஒரு வாக்கு ஒரு மதிப்புஎன்ற அரசியல் சமத்துவத்திற்கான மிகப்பெரிய ஆபத்துஇந்தியாவில் ஆழமாக வேர்கொண்டுள்ள சமூக சமத்துவமின்மைவளர்ந்து வரும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஆகியவற்றில் குடிகொண்டுள்ளதுமேலும் ஒருங்கிணைந்த நவீன தேசமாக இந்தியா வளர்ச்சியடைவதற்கு சாதி மிகப்பெரிய முட்டுக்கட்டையாக விளங்குகிறதுஆனால் ஆர்எஸ்எஸ் இந்தியாவின் நிலைத்தன்மைக்கும் வலிமைக்கும் அடிப்படை மூலாதாரமாக சாதியைக் கருதுகிறது.

அரசமைப்புச் சட்டத்திற்கு மோடி எவ்வளவுதான் அதிகமாக உதட்டளவு சேவை செய்தாலும்ஆர்எஸ்எஸ்-இன் உலகப்பார்வை நீதியின்சமத்துவத்தின் அடிப்படையிலான அரசமைப்புச் சட்ட பார்வைக்கு எதிரானதாகவே தொடர்ந்து இருக்கிறதுஅந்த நீதியும் சமத்துவமும் இன்றி ஒரு ஒன்றுபட்ட நவீன இந்தியா இருக்க முடியாதுஇளம் கொல்கத்தா மருத்துவரின் கொடூர வன்புணர்வுகொலைக்கு எதிரான சீற்றம்மேற்கு வங்கத்தில்மாநிலம் தழுவிய போராட்டங்களையும்நாடு தழுவிய ஒருமைப்பாட்டுணர்வையும் தூண்டி விட்டதை காணும்போது உத்வேகம் கிடைக்கிறதுடஜன் கணக்கான "இரவினை மீட்டெடுப்போம்போராட்டக் கூட்டங்கள், "எங்களுக்கு நீதி வேண்டும்என்ற உரத்த முழக்கங்கள் மூலமாகபெண்களின் சுதந்திரத்திற்கான முன்னெப்போதும் கண்டிராத கூட்டு அறுதியிடலாக சுதந்திர தினத்தின் அந்திவேளை அனுசரிக்கப்பட்டதுஇன்றைக்கு சுதந்திரம் என்பது கடந்தகாலத்தை நினைவில் கொள்வது குறித்தல்லஅது நம்முடைய அரசமைப்புச் சட்ட இலக்குகளையும் உரிமைகளையும் பெறுவதற்காக போராடுவது குறித்ததாகும்ஒரு ஜனநாயகக் குடியரசாக முன்னோக்கி அணிவகுத்து செல்வதற்கு ஆர்எஸ்எஸ்-இன் செயல்திட்டங்களை இந்தியா தீர்மானகரமாக தோற்கடித்தேயாக வேண்டும்.

தமிழில் : செந்தில்