தலையங்கம்

மதச் சார்பற்ற அரசாமட அதிபதிகள் அரசா?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 20 மாதங்கள் உள்ளனஇந்துத்துவ மதவெறி பாசிச பாஜகவை தமிழ்நாட்டில் காலூன்ற விடாமல் செய்ய வேண்டும் என்பது  இந்தியா கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளின்  நிலைப்பாடும் ஆகும்தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் முதன்மையான கட்சி திராவிட முன்னேற்ற கழகம்அதுதான் தமிழ்நாட்டில்  ஆட்சி அதிகாரத்திலும் இருக்கிறதுஇந்த ஆட்சி பெரியார்,  அண்ணா வழி வந்ததிராவிட மாடல்” ஆட்சி என்று சொல்லிக் கொள்கிறார்கள்பள்ளிகல்லூரி மாணவர்களிடத்தில் பெரியாரையும் அண்ணாவையும் கொண்டு சேர்க்க பெரிய முயற்சி எதுவும் இதுவரை எடுத்திடாத திமுக அரசுமுருக பக்தி இலக்கியங்களை மையப்படுத்தி இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள பள்ளிகளில்கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும்விழாக் காலங்களில் முருகன் கோயில்களில் மாணவமாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பதுமுருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் ஆளுகையின் கீழ் உள்ள கல்லூரிகளில் சிறப்பு ஆன்மீகப் பாடப் பிரிவுகள் கொண்டுவரப்படும் என்று பழனியில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக கடந்த ஆகஸ்ட் 24, 25 தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தி தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளதுஒரு மதச் சார்பற்ற அரசுஇதுபோன்று சமயம் அல்லது மதம் சார்ந்த மாநாட்டை நடத்தியது பெரும் தவறு என்பது மட்டுமல்லமிகப் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடியதுஆர்எஸ்எஸ்-பாஜக சங்கிகள் தங்களை வளர்த்துக் கொள்ள இந்து சமயக் கடவுள்களையும் கோயில்களையும் ஆன்மீகப் பரப்புரைகளையும் கையிலெடுத்துச்  செயல்படுகிறார்கள் என்பதற்காகஅதே வழியை திமுக அரசும் கையிலெடுப்பது சங்கிகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்குப் பதிலாக வளர்க்கவே செய்யும்இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக சனாதன இந்து தர்மத்தைக் கொண்டு வருவதுதான் ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஒரே குறிக்கோள்அதனால்தான் அவர்கள் அரசமைப்புச் சட்ட முகவுரையிலிருந்து மதச்சார்பின்மை என்பதை நீக்க வேண்டும் என்றார்கள்அவர்களைக் கண்டித்தசனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசிய திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு விலை பேசினார்கள் சங்கிகள்அப்போது அச்சங்கிகளுக்கு எதிராக கடும் கண்டனத்தையும் உதயநிதிக்கு ஆதரவையும் தெரிவித்த இடதுசாரி கட்சிகளும் முற்போக்குஜனநாயக இயக்கங்களும் இப்போது திமுக அரசே நடத்தியுள்ள முருகன் மாநாட்டையும் முருகன் பெயரால் கல்வியைக் காவிமயமாக்கும் தீர்மானங்களையும் கண்டித்துள்ள போதும்அதுபற்றி கொஞ்சம்கூட கண்டுகொள்ளாமல் அத்தீர்மானங்களை அமல்படுத்திட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அடுத்து அம்மன் மாநாடு நடத்தப்படும் என்றும் முதலமைச்சரால் பாராட்டப்பட்டசெயல் பாபு” அறிவித்துள்ளார் என்றால்திமுக அரசு எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறதுபுதிய தேசிய கல்விக் கொள்கை கல்வியைக் காவிமயமாக்குகிறது என்று பரப்புரைப் பயணம் திமுக தலைவர்களால் நடத்தப்பட்டதுஇப்போது பள்ளிகல்லூரிகளில் முருகப் பெருமான் பற்றிய பாடத்திட்டம் வைக்கப்படும் என்கிறது திமுக அரசுதமிழ்நாட்டில் உள்ள சைவ சமய ஆதினங்கள் முதல் அர்சுன் சம்பத் வரை முருகன் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்அடுத்து வைணவத் தலங்களுக்கு யாத்திரை செல்ல மூத்த குடிமக்களுக்கு  கட்டணமில்லாப் பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுமுதலில் பெரியாரைப் போற்றிய சீமான் தற்போதுமுப்பாட்டன் முருகன்” என்றுதான்  சொல்கிறார்திமுக அமைச்சரோ முருகப் பெருமான் என்றே சொல்ல ஆரம்பித்துவிட்டார்பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய கல்விக்கான நிதியைபுதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால்தான்  தருவோம்  என்கிறது எனசமயம்” பார்த்துச் சொல்கிறார்.

இது தமிழ்நாட்டில் சனாதன சங்கிகளை பின்னுக்குத் தள்ள திமுக எடுத்துள்ள தவறான ஆயுதம்வழிமுறைஇன்னும் எத்தனையோ கோயில்களில் பட்டியலின மக்கள் நுழைய முடியவில்லை.தேர் இழுக்க முடியவில்லைசப்பரம் தூக்க முடியவில்லைஏன்தமிழ்நாடு அரசு நியமித்த தலித்பிற்படுத்தப்பட்ட அர்ச்சகர்கள் இன்னும் கோயில் கருவறைக்குள் நுழைய முடியவில்லை.   இதையெல்லாம் சரிசெய்வதற்குப் பதிலாக சங்கிகளின் சனாதனத்தை கையில் எடுத்து இந்துக்கள்  வாக்கைப் பெற்று விடலாம் என திமுக நினைத்தால் திமுக  விற்கே அது ஆபத்தாக முடியலாம்மாற்று அரசியலைமாற்றுக் கலாச்சாரத்தை முன்வைப்பதே வெற்றி தரும்மதம்சமயம்கடவுள்விழா எல்லாம் மக்களின் விருப்பத்தேர்வாக மட்டுமே இருக்க வேண்டும்மதம்மதநம்பிக்கைகள்வழிபாடு இவற்றிலிருந்து அரசு விலகியே இருக்க வேண்டும்அதுதான் மதச்சார்பற்ற அரசுபெரியாரின் பகுத்தறிவு வழிவந்தவர்கள் எனச் சொல்லிக் கொண்டுநடைமுறையில் அதற்கு  நேர்மாறாகச் செயல்படுவது என்பது தமிழ்நாட்டில் இந்துத்துவ பாஜகவுக்கு எதிராக திமுகவை ஆட்சியில் அமரவைத்த தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்யும் துரோகமாகும்.