தோள் சீலைப் போராட்டம், மானுட மாண்பை, பெண்களது தன் மானத்தை மீட்டுக் கொள்வதற்கான உரிமைப் போராட்டம். சமுதாயத்தின் சரிபாதி பெண்களது இந்தப் போராட்டம் மொத்த சமுதாயத்தின் போராட்டமாகும். இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த, பற்றிப் படர்ந்த உக்கிர மிகுந்த இந்தப் போராட்டம், ஆகச்சிறந்த பண்பாட்டு, அரசியல், பொருளாதாரப் போராட்டமாகும்.
பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார, அரசியல் சாதனைகளை மதிக்கவும் பெண்களின் உரிமைகளை மேம்படுத்தவும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சர்வதேச பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும், பெண்கள் தினம் என குறிக்கப்பட்டுள்ள எட்டு மணிநேர வேலையின் வெற்றி, புதிய தொழிலாளர் சட்டங்களின் மூலம் தலைகீழாக மாற்றப்பட்டு வருகிறது என்பது நமது காலத்தின் நகைமுரணாகும். பணியிடங்களில் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தக்கூடிய சம வேலைக்கு சம ஊதியத்திற்கான உத்தரவாதம் இன்னும் அளிக்கப்படவில்லை.
'ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு நீதான அனுப்பின உம் பையன'. காலேஜ் படிக்கும் தன் மகன் அப்பார்ட்மெண்ட் செப்டிக் டேங்க் கழுவச் சென்று விஷ வாயு தாக்கி இறந்து விட்டான் என்பதை நம்ப முடியாமல் என் மகனைக் காட்டு, அவனைக் காட்டுங்கள் என்று கதறும் தூய்மைப் பணியாளரான தாயிடம் அரசாங்க ஆஸ்பத்திரியில் அடாவடியாகப் பேசுகிறது போலீஸ். மலக் குழி மரணம். புகார் வாங்கக் கூட மறுக்கும் போலீஸ், கம்ப்ளைண்ட் எதுக்கு? என்ன பண்ணப் போறீங்க? எதுவும் நடக்காது. பேசி முடிச்சா கொஞ்சம் பணமாவது கிடைக்கும் என்கிறது. இன்னொரு பக்கம், மாநகராட்சி அலுவலகம்.
ஈரானில் ஆடை நெறிமுறையை மீறினார் என்று 'கலாச்சாரக் காவல்துறையினர்' எடுத்த நடவடிக்கையின் காரணமாக 22 வயது மாஷா அம்னி மரணமடைந்தார். இதை அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. அவர் டெக்ரானிற்குச் சென்று கொண்டிருந்தபோது அவரைக் கைது செய்து, கடந்த செப் 13, 2022 முதல் சிறைப்படுத்தி வைத்திருந்தனர் ஈரானின் ஒழுக்க நெறி காவல்துறையினர். அவரைக் கொடூரமாக அடித்து, ஹிஜாப் பற்றிய நீதியையும் கல்வியையும் கற்றுக் கொடுப்பதற்காக, அவப்புகழ் பெற்ற 'ஒஷாரா' சிறைச்சாலைக்கு கொண்டு சென்றனர். செப் 16, 2022 அன்று அவர் மரணமடைந்துவிட்டார்.
செப்டம்பர் 3 ஆம் தேதி, தீஸ்தா செதால்வத் அகமதாபாத்தின் சபர்மதி சிறையில் இருந்து 68 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் பிணையில் விடுதலை ஆனார். 2002 குஜராத் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடியதால் அரசியல் ரீதியாக பழிவாங்கும் கைது நடவடிக்கைகளில் ஆர்.பி ஸ்ரீகுமாருடன் கைது செய்யப்பட்ட அவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடைக்கால ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார். இவரின் முதன்மை பிணை மனு குஜராத் உயர் நீதிமன்ற விசாரணையில் இருந்தது.
பில்கிஸ் பானுவுக்கு நீதி வேண்டும் என்றும் அவருக்கு அநீதி இழைத்த, ஆயுள் தண்டனை பெற்ற குற்றவாளிகள் விடுதலை செய்யப் பட்டதைக் கண்டித்தும் அவர்களை மீண்டும் சிறையில் அடைக்கக் கோரியும் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடைபெற்றன.
தமிழ்நாட்டில் எல்கேஜி முதல் உயர்கல்வி வரை கல்வி இலவசம் என்று திராவிட முற்போக்கு ஆட்சி நடத்தும் திமுக அறிவித்து பல ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், அரசு கல்லூரியிலும் கூட சில ஆயிரங்கள் கட்டணம் கட்ட வேண்டியிருக்கிறது. அரசின் நிதி உதவி பெறும் (தனியார்) கல்லூரிகளில் பல ஆயிரங்கள் கட்ட வேண்டியிருக்கிறது. சுயநிதி கல்லூரிகளின் கொள்ளையைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.
ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ணக் கொடி. இந்த ஆகஸ்ட் 13-15க்கான மோடி அரசாங்கத்தின் அழைப்பு இது. இந்தியா விடுதலை பெற்ற 75வது ஆண்டில், 'விடுதலையின் அமுதப் பெருவிழா' என்று பெரிதும் விளம்பரப்படுத்தப் பட்ட அதிகாரபூர்வ கொண்டாட்டத்தின் உச்சம் இதுவாகத்தான் இருக்கும்.
கனியாமூர் மாணவி மர்ம மரணம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துகள் அந்த மாணவியின் மரணத்துக்கு இணையான பேரதிர்ச்சியை தருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ள்ளவர்களின் பிணை மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதியின் கருத்துகள் நீதிமன்ற நடைமுறை மரபுகளையே சிதைப்பதாக உள்ளது. கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த அய்வரும் பொய்யான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்! இந்த மரணத்தில் கொலையோ, பாலியல் வன்முறையோ நடக்கவில்லை என்று கூறியுள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு அருணா ஜெகதீசன் விசாரணை ஆணைய அறிக்கையை இகக(மாலெ) வரவேற்கிறது; பரிந்துரைகளை திமுக அரசு தாமதமின்றி செயல்படுத்த வேண்டும்; இகக(மாலெ) முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்
போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள்
கிளாஸ்டன்
காளியப்பன்
* வினிதா
* ரஞ்சித்குமார் தமிழரசன்
செல்வசேகர்
அந்தோணி மணிராஜ்
ஸ்னோயின் கந்தையா ar கார்த்திக்
ஜெயராமன்
சண்முகம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) (விடுதலை)