செப்டம்பர் 3 ஆம் தேதி, தீஸ்தா செதால்வத் அகமதாபாத்தின் சபர்மதி சிறையில் இருந்து 68 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் பிணையில் விடுதலை ஆனார். 2002 குஜராத் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடியதால் அரசியல் ரீதியாக பழிவாங்கும் கைது நடவடிக்கைகளில் ஆர்.பி ஸ்ரீகுமாருடன் கைது செய்யப்பட்ட அவர், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடைக்கால ஜாமீன் பெற்று சிறையில் இருந்து விடுவிக்கப் பட்டார். இவரின் முதன்மை பிணை மனு குஜராத் உயர் நீதிமன்ற விசாரணையில் இருந்தது.

முன்னதாக, இந்த ஆண்டு ஜூன் மாதம், உச்சநீதிமன்றம், 2002 குஜராத் படுகொலை தொடர்பாக ஜாகியா ஜாஃப்ரி மற்றும் தீஸ்தா செதால்வத் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிறருக்கு எதிரான குற்றவியல் சதி குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்ததுடன், மோடி வகையறாக் களுக்கு எதிரான சதி வழக்கு உள் நோக்கம் கொண்டதாக கருதுவதோடு "இதுபோன்ற துஷ்பிரயோக நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து நபர்களும் சட்ட வளையத்துக்குள் கொண்டுவரப்படுவதோடு அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை. மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று விடாப்பிடியான நீதிக்கேட்டு போராடிய தீஸ்தா செதால்வத் அவர்களை குறிப்பிட்டது, அவர் மீது அரசியல் ரீதியான பழிவாங்கும் நடவடிக்கைக்கு வழிவகுத்தது.

இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியான ஒரு நாளுக்குள், தீஸ்தா செதால்வத், ஆர்.பி. ஸ்ரீகுமார் மற்றும் சஞ்சீவ் பட் ஆகியோருக்கு எதிராக சதி, மோசடி, தவறான ஆதாரங்களை வழங்குதல் அல்லது தயாரித்தல் மற்றும் இன்னபிற குற்றச்சாட்டுகளின் பேரில் ஒரு கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படை வீரர்கள் உடனடியாக தீசுதாவை அவரது மும்பை வீட்டிலிருந்து கைது செய்து அகமதாபாத்திற்கு அழைத்து சென்று மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தினர். முதலில் போலீஸ் காவலில் வைத்த பின்னர் நீதித்துறை காவலில் வைத்ததனர். ஜாமீனுக்கான தீஸ்தாவின் விண்ணப்பம் ஜூலை 30 அன்று அமர்வு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது, அதைத்
தொடர்ந்து அவர் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினார். ஆகஸ்ட் 3ஆம் தேதி குஜராத் உயர் நீதிமன்றத்தின் முன் அவரது மனு விசாரணைக்கு வந்தபோது, விசாரணை செப்டம்பர் 19 ஆம் தேதியன்று ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தீசுதா உச்சநீதிமன்றத்தை அணுகியதால் அது செப்டம்பர் 2 ஆம் தேதி டைக்கால ஜாமீன் வழங்கியது.

தீஸ்தாவுக்கு அவரது இடைக்கால ஜாமீனுடன் கொஞ்சம் சுதந்திரமும் நீதியும் கிடைத்திருப்பது வரவேற்கத்தக்கது. இது தீஸ்தாவுக்கு கிடைத்த முக்கியமான வெற்றி மட்டுமல்லாமல் மோடி-ஷா ஆட்சியின் வெறுப்பு, பொய்கள், பழிவாங்கல் மற்றும் மிரட்டல் ஆகியவற்றிற்கு எதிரான போரில் நீதி மற்றும் ஜனநாயகத்திற்காக போராடும் ஒவ்வொரு போராளிக்கும் கிடைத்த வெற்றியாகும்.

ஆனால் இந்த வெற்றி, இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து வரும் அரசியல் கைதுகளில் ஒரு விதிவிலக்கான நிகழ்வு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பீமா கோரேகான், சிஐஏ எதிர்ப்புப் போராளிகள், தலித் அறிவுஜீவிகள், பழங்குடியின போராளிகள், முஸ்லிம் போராளிகள், பத்திரிகையாளர்கள் அனைவரும் பாஜக/ஆர்எஸ்எஸ் பழிவாங்கும் அரசியலின் இலக்குகள். அதனால் பல ஆண்டு களாக சிறையில் வாடுகிறார்கள். எதிர்ப்புக் குரல்களை காலவரையறையின்றி சிறையில் வைப்பது இந்திய வகை பாசிசத்தின் வரையறுக்கும் அம்சமாக மாறி வருகிறது. அவர்களின் விடுதலைக்கான போராட்டம் ஜனநாயகம் மற்றும் நீதிக்கான போரின் இன்றியமையாத பகுதியாகும்.

இதற்கிடையில், ஆகஸ்ட் 30 ஆம் தேதி, 1992 ல் பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர்கள் முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, சாத்வி ரித்தம்பராவும், உத்தர பிரதேச நிர்வாக அதிகாரிகள் மற்றும் சில சங் பரிவர் தலைவர்களுக்கு எதிரான அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தின் அமர்வு கைவிட்டதோடு "இறந்த குதிரையை ஏன் அடிக்க வேண்டும்" என்று எனக் கேள்வி எழுப்பிய அதே வேலையில்

முன்கூட்டியே இந்த வழக்கு எடுத்துக்.  கொள்ளப்படாதது "துரதிஷ்டவசமானது” என ஒப்புக் கொண்டது, உச்சநீதிமன்றத்தின் முதன்மை அமர்வு ஏற்கனவே அயோத்தி விஷயத்தில் ஒரு தீர்ப்பை வழங்கியதிலிருந்து "இப்போது இந்த வழக்கு விஷயத்தில் செய்வதற்கு எதுவும் இல்லை" என்று நீதிமன்றம் கருதுகிறது.

இந்த கட்டாய வழக்குகள் கைவிடல் நீதிக்கான அடிப்படைக் கொள்கைகள் மற்றும் அயோத்தி வழக்கின் முந்தைய உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மீது சேற்றை இறைத்துள்ளது. முதலாவதாக, அயோத்தி தீர்ப்பில், பாப்ரி மஸ்ஜித் இடிப்பு, மிக மோசமான, சட்டத்தின் ஆட்சியை மீறிய செயல் என குறிப்பிட்டது என்பதை உச்சநீதிமன்றம் நினைவில் கொண் டிருக்க வேண்டும். இரண்டாவதாக, பாப்ரி மஸ்ஜித்தின் இடிப்புக்கு முன்பே அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன, அப்போது நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த போது கட்டமைப்புகளுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாது என்று திடமான உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன.

ஆயினும், இந்த அவமதிப்பு மனுக்கள் நிலுவையில் உள்ள போதே, 1992 டிசம்பர் 6 ஆம் தேதி பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. உண்மையில் உச்சநீதிமன்றம் 24.10.1994 தேதியிட்ட தீர்ப்பில், அப்போதைய உத்தரபிரதேச முதல மைச்சர் கல்யாண் சிங், நீதிமன்றத்தின் உத்தரவு களுக்கு கீழ்ப்படியாததற்காக நீதிமன்ற அவமதிப்பு குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில், 1992 டிசம்பர் 6 ஆம் தேதி நடந்த நிகழ்வுகள் தொடர்பாக அப்போதைய உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றம் தாமாக முன்வந்து அவமதிப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டதாகவும், அவை பிரத்யேகமாக கையாளப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியது. "பிரத்தியோகமாக கையாளப்பட வேண்டிய” இந்த அவமதிப்பு மனு 2000 ஆம் ஆண்டு ஒத்தி வைக்கப்படும் வரை ஒரே ஒரு முறை கூட பட்டியலிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அது முற்றிலும் கைவிடப்பட்டுள்ளது. அதே நாளில், உச்ச நீதிமன்றத்தின் மற்றொரு
அமர்வு, 2002 குஜராத் படுகொலைகள்
காலப்போக்கில் "பொருளற்றதாக' மாறி
விட்டதாகக் கூறி, அது தொடர்பான அனைத்து வழக்குகளையும் முடித்து வைத்தது. நிலுவையில் உள்ள வழக்குகளில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாக்கல் செய்த இடமாற்ற
மனுக்கள், கலவரத்தால் பாதிக்கப் பட்டவர் களின் சிறப்பு விடுப்பு மனுக்கள் மற்றும் 2003 04ல் நீதி மற்றும் அமைதிக்கான தன்னார்வ குடிமக்கள் அமைப்பு தாக்கல் செய்த குஜராத் காவல்துறையிடம் இருந்து விசார ணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய ரிட் மனுவும் அடங்கும். எதிர்பாராத விதமாக, உச்ச நீதிமன்றம், குஜராத் அரசை மிக கடுமையாக விமர்சித்துள்ளது, அப்பாவி குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் எரித்துக் கொல்லப்பட்ட போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொறுப்பில் இருந்தவர்களை இன்றைய நீரோக்கள்" என்று அழைக்கும் அளவிற்கு சென்றதோடு, ''ஒரு வேளை தவறு செய்தவர்களை எப்படி காப்பாற்றுவது? எப்படி பாதுகாப்பது என்று ஆலோசித்துக் கொண்டு ' இருந்திருக்கலாம்" என குறிப்பிட்டது. இந்த இரண்டு வழக்கு விவகாரங்களையும் உச்ச 0 நீதிமன்றம் கைவிட ஒத்துக்கொண்டது, அதன் பொறுப்புகளில் இருந்து மோசமான பிறழ்வை குறிக்கிறது.

     பல ஆண்டுகளுக்கு முன்பே, 2004ல், 5 பேராசிரியர் கே.பாலகோபால், "வலதுசாரி சக்திகள்” “அதிகாரத்தைக் கைப்பற்ற சதி திட்டம் தீட்டிவிட்டன" என்றும், நீதிமன்றங்களையும் p கணிசமான அளவில் கைப்பற்றிவிட்டன ப என்றும் எச்சரித்திருந்தார். அதன் பின்னர் ! பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. நீதித்துறையின் சுதந்திரத்தின் மீது குறிப்பாக நியமன விவகாரங்களில் நீதிமன்றம் நேரடித் 9 தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதற்கு நாம் இன்று சாட்சியாக இருக்கிறோம், இத்தகைய பரிணாம மாற்றங்களினால் நீதித்துறையை சட்ட அறிஞர் கௌதம் பாட்டியா "நிர்வாக நீதிமன்றம்" என்று அழைக்கிறார், அதாவது வெறும் நிர்வாக முடிவுகளுக்கு அடிபணியவில்லை, மாறாக 'நிர்வாக சித்தாந்தத்தை பளபளப்பாக்கி பிரகாசமாக, நீதித்துறையால் அறிவிக்கப்பட்ட உண்மையாக உலகிற்குக் காட்டும் ஒரு நிறுவனமாக மாறி இருக்கிறது. எனவே ஜனநாயகம் நிலைத்திருக்க, இந்தப் போக்கு தலைகீழாக மாற வேண்டும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதில் நீதித்துறையின் செயல்பாடும், முடிவுகளும் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.