இந்திய விடுதலைப் போரின் தியாக மரபை மழுங்கடிக்கும் முயற்சியை முறியடிப்போம்!

இந்திய விடுதலைப் போரின் 75ஆம் ஆண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்று ஒன்றிய அரசு இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் கேட்டுக் கொண்டுள்ளது. அதற்காக சில அரசாணைகளை வெளியிட்டுள்ளது. ஆகஸ்டு 13,14,15 தேதிகளில் நாடெங்கிலும் எல்லார் வீட்டிலும் தேசியக் கொடியை பகலும் இரவும் பறக்க விடலாம் என்று கூறியுள்ளது. அதற்காக மாலை 6 மணிக்கு மேல் காலை 6 மணி வரை தேசியக் கொடியை பறக்கவிடக்கூடாது என்கிற விதியைத் தளர்த்தியுள்ளது. மேலும் கதர் துணிக் கொடிதான் கட்ட வேண்டும் என்பதல்ல, பாலிஸ்டர் துணியில்கூட தேசியக் கொடியை பறக்க விடலாம் என்று கூறியுள்ளது.