விடுதலைப் போராட்ட இயக்கமும் பிரிவினையும்கருத்தரங்கு

நைனிடால் மக்கள் மன்றம் சார்பில் டிசம்பர் 10 அன்று, 'விடுதலைப் போராட்ட இயக்கமும் பிரிவினையும்' மீதான கருத்தரங்கு நைனிடாலில் நடைபெற்றது. முக்கிய பேச்சாளரான அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் தேசிய செயலாளர் தோழர் கவிதா கிருஷ்ணன்

இன்றைய காலகட்டத்தில், விடுதலைப் போராட்ட இயக்கத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டிய அவசியத்தையும் முக்கியத்து வத்தையும் வலியுறுத்திப் பேசினார். சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில் மோடி அரசாங்க மானது, வேண்டுமென்றே வரலாற்றைத் திரித்தும் பொய் கூறியும், விடுதலைப் போராட்டத்தையும் பிரிவினையையும் பற்றி ஒரு வகுப்புவாத பார்வையை நம் முன்னே வைக்கிறது. இதன்மூலம் தனது மதவெறிப் பரப்புரையை முன்கொண்டு செல்ல அனைத்து வகையிலும் முயற்சிக்கிறது. விடுதலைப் போராட்டத்தோடு தொடர்புடைய இடங்களுக்கு அளிக்கப்படு வதற்கு இணையாக, மதம் சார்ந்த இடங்களுக்கும் மரியாதை அளிக்க வேண்டுமென, மோடி கேதார்நாத்தில் பேசும்போது வேண்டுகோள் விடுத்தார். 'மதத்தை பாதுகாத்ததற்கான' அவர்களது 'வரலாற்றுப் பாத்திரத்தை' வலியுறுத்தி கூறினார்இதன்மூலம், விடுதலைப் போராட்டம் மற்றும் பலரின் தியாகங்களுக்குப் பிறகு பெற்ற சுதந்திரத்தின் வரையறையை மாற்றுவது என்ற அவர்களின் திட்டம், மேலும் ஒரு படி முன் சென்றது. இந்த தருணத்தில், விடுதலை இயக்கத்தின் உண்மையான மரபையும், விடுதலைப் போராட்டத்தின் போது நிகழ்ந்த மதவெறி பற்றியும் மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டியது, வேறு எப்போதை யும் விட இப்போது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

மத்தியகால வரலாற்றிலிருந்து பல உதாரணங்களைச் சொல்லி, எவ்வாறு, பல்வேறு மன்னர்களுக்கு இடையிலான மோதல்களையும் சண்டைகளையும் இந்து-முஸ்லிம் சண்டைகளாக நம்முன் வைத்து, வரலாற்றை வகுப்புவாத நோக்கில் மாற்றி எழுதுகிறார்கள் எனத் தோழர் கவிதா கிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இராஜாஜி போன்ற விடுதலைப் போராளிகள், சாவர்கர், கோல் வால்கர், சியாமா பிரசாத் முகர்ஜி போன்ற இந்து மகாசபை மற்றும் ஆர்எஸ்எஸ்&ன் முக்கியத் தலைவர்களின் புத்தகங்கள் மற்றும் கட்டுரை களைக் குறிப்பிட்டு, விடுதலைப் போராட்டம் பற்றிய 'சங்'&ன் பார்வையையும், இந்து மகாசபை மற்றும் ஆர்எஸ்எஸ்&ன் ஆங்கிலேய ஆதரவையும் தெளிவாக்கினார். ஆங்கிலேய அரசின் நலன்களைப் பார்த்துக் கொண்டதும், இந்திய தேசிய இயக்கத்தை சுதந்திரத்திற்கான போராட் டமாக ஏற்றுக்கொள்ள மறுத்ததுமே, 'சங்'&ன் பார்வையாகும். விடுதலைப் போராட்டத்தின் மாபெரும் கதாநாயகனாக இன்றைக்கு சாவர்க்கரை முன்னிறுத்த, ஆர்எஸ்எஸ்&-பிஜேபியினர் தங்களா லான பெரும் முயற்சிகளைச் செய்கிறார்கள். ஆனால் அவரோ, ஆங்கிலேயர்களுக்கு இறவா விசுவாசத்தை வாக்குறுதியாக கொடுத்ததோடு, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற 'தவறு'க்காக மன்னிப்பும் கோரினார். மேலும், இந்துக்களும் முஸ்லிம்களும் வெறுமனே இரண்டு மதங்களை அல்ல, மாறாக இரண்டு தேசங்களைச் சார்ந்தவர்கள், எனவே, அவர்கள் இருவரும் ஒருபோதும் ஒன்றிணைந்து வாழ இயலாது என்று சொல்லி இரு-நாடு கருத்தை முதன்முதலில் அவரே முன்வைத்தார். சாவர்க்கரின் இந்தக் கருத்தைத் தான் இந்து மகா சபையும் முஸ்லிம் லீக்கும் மேலும் விரிவாக்கி னார்கள். அதுவே பிரிவினைக்கு வழிவகுத்தது

'வாட்ஸ்அப்' பல்கலைக்கழகப் பரப்புரை வழியாக வரும் தவறான செய்திகளைப் படித்து, ஏற்றுக்கொள்வதற்கு மாறாக விடுதலைப் போராட்டம், மத்திய கால வரலாறு பற்றிய சிறந்த வரலாற்று அறிஞர்கள் எழுதிய புத்தகங்களைப் படிக்க வேண்டுமென தோழர் கவிதா, அனைவருக்கும் அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் பேராசிரியர் சேகர் பதக் தலைமை தாங்கினார். சிபிஐ எம்எல் கர்வால் செயலாளர் இந்த்ரேஷ் மைகுரி, 'விடுதலைப் போராட்டமும் உத்தரகண்டில் தலித்துகளும்' என்ற தலைப்பில் பேசினார். இந்த நிகழ்ச்சியை வழக்கறிஞர் கைலாஷ் ஜோஷி வழிநடத்தினார். மேலும், குமாங்க் பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள், விவசாயிகள், ஓய்வுபெற்ற ஊழியர்கள், கிஷிபிகி சங்கத்தினர், ரிக்சா சங்கத்தினர், குதிரை ஓட்டும் சங்கத்தினர் உட்பட பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இதில் கலந்து கொண்டனர்.

எம்எல் அப்டேட் 

 14-20 டிசம் 2021

தமிழாக்கம் - செந்தில்