ஏஐசிசிடியு மாநிலக் குழுக் கூட்டம் அழைப்பு

2022 ஆகஸ்டு 14, 15 இரு நாட்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஏஐசிசிடியு மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தோழர்கள் சங்கரபாண்டியன், இரணியப்பன், அந்தோணிமுத்து, பாலசுப்பி ரமணியன், சுசீலா, சுகுந்தன் ஆகியோர் கொண்ட குழு தலைமை ஏற்று நடத்தியது. சமீபத்தில் காலமான ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மகேந்திரன், ஏஐசிசிடியு விசைத்தறி தொழிலாளர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் தோழர் மாணிக்கம் மற்றும் மத்திய சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கத் தலைவர் தோழர் ராம்கிஷன் (ஆகஸ்ட் 17 முதலாம் ஆண்டு நினைவு தினம்) ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) விடுதலை, 2022 ஜூலை 24 அன்று நடத்திய காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

தமிழ்நாட்டிலும் காவிப் பாசிச கூக்குரல் கள் அதிகரித்து வரும் வேளையில், இதக (மாலெ) அழைப்பை ஏற்று தங்களின் அரிய நேரத்தை ஒதுக்கி இந்த காவிப் பாசிச எதிர்ப்பு மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்டு மாநாட்டை வெற்றிபெறச் செய்த சிபிஐ, சிபிஎம் கட்சிகள், விசிக, பச்சை தமிழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் தலைவர்களுக்கு நன்றி யையும் மாநிலம் முழுவதிலுமிருந்து பெருந்திர ளாய் கலந்து கொண்டுள்ள செயல்வீரர்களுக்கு புரட்சிகர வாழ்த்துகளையும் மாநாடு தெரிவித்துக் கொள்கிறது.

ஏஐசிசிடியூ தேசிய கவுன்சில் கூட்டம்

ஜூலை 10-11, 2022 இரண்டு நாட்கள் கோவை மாநகரில் சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவரங்கில் ஏஐசிசிடியூ வின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் நடைபெற்ற அரங்கமும் வீதியும் கொடிகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வீதியின் நுழைவாயிலில் சின்னியம்பாளையம் தியாகிகள் படங்கள் கொண்ட பதாகை வைக்கப்பட்டிருந்தது. அரங்க வாயிலில் அலங்கார வளைவுகள் மற்றும் அரங்கத்தில் ஏஐசிசிடியு முன்னோடி முன்னோடி தலைவர்களான தோழர்கள் டி.பி.

காவிப் பாசிசத்தை வீழ்த்திடுவோம்! புதியதோர் சமத்துவ சமுதாயத்தைப் படைத்திடுவோம்!

மோடி ஆட்சியின் அடக்குமுறைகளும், மோசடிகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. சட்டத்தின் ஆட்சிக்குப் பதிலாக சங்கிகளின் ஆட்சி, மோடி என்கிற தனிநபரின் ஆட்சி என்பதாக இந்திய ஜனநாயகம் சர்வாதிகாரமாக, பாசிசமாக மாறி வருகிறது. சர்வாதிகாரம், யதேச்சாதிகாரம் என்பன அடிப்படையில் அரசு எந்திரத்தை பயன்படுத்தி ஏவப்படும் ஒடுக்குமுறை ஆகும். பாசிசம் என்பது அரசு எந்திரத்தோடு கூடவே, தனியார் படைகளை, அரசு சாராத படைகளை, அரசு சாராத கும்பல்களைப் பயன்படுத்தி ஏவப்படும் ஒடுக்குமுறை ஆகும். இதுவும் கூட பாசிசத்தின் ஒரு முக்கிய அம்சம் ஆகும்.

தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுக ஏஐசிசிடியு கோரிக்கை

ஒன்றிய மோடி அரசு 44 தொழிலாளர்கள் சட்டங்களை, 4 தொழிலாளர் சட்டத் தொகுப்பாக மாற்றி, தன் கார்ப்பரேட் எசமானர்களுக்கு விசுவாசத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது.