2022 ஆகஸ்டு 14, 15 இரு நாட்கள் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஏஐசிசிடியு மாநிலக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தை தோழர்கள் சங்கரபாண்டியன், இரணியப்பன், அந்தோணிமுத்து, பாலசுப்பி ரமணியன், சுசீலா, சுகுந்தன் ஆகியோர் கொண்ட குழு தலைமை ஏற்று நடத்தியது. சமீபத்தில் காலமான ஏஐசிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் மகேந்திரன், ஏஐசிசிடியு விசைத்தறி தொழிலாளர் சங்க நாமக்கல் மாவட்டத் தலைவர் தோழர் மாணிக்கம் மற்றும் மத்திய சுகாதாரத் துறை ஊழியர்களின் தொழிற்சங்கத் தலைவர் தோழர் ராம்கிஷன் (ஆகஸ்ட் 17 முதலாம் ஆண்டு நினைவு தினம்) ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் என்.கே. நடராஜன் துவக்க உரையாற்றினார். 2021 அக்டோபர் 1-15 தீப்பொறியில் "திமுக அரசுக்கு தொழிலாளர்களின் கேள்விகள் சில" என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரை வாசிக்கப் வாசிக்கப் பட்டது. அக்டோபருக்குப் பிறகு தமிழக தொழி லாளர் வர்க்கச் சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் ஞானதேசிகன் உரையாற்றினார். தோழர் சங்கர பாண்டியன், தோழர் இரணியப்பன் ஆகியோர் தேசிய கவுன்சில் கூட்ட முடிவுகளின் படி தமிழகத்தில் அடையப்பட வேண்டிய இலக்குகள், கவனம் குவிக்கப்பட வேண்டிய மாவட் டங்கள், துறைகள், மாவட்ட மாநாடுகள் பற்றி பேசினர்.

மாநிலக் குழு உறுப்பினர்கள், கொடுக்கப் பட்ட தாள்கள் மீது கட்டுமானம், மின்சார வாரியம், போக்குவரத்து, ஜவுளித்துறை, பீடி, தூய்மைப் பணி, நுகர்பொருள் வாணிபக் கழகம், தோல் மற்றும் தோல் பொருள் என துறை வாரியாக குழுக்களாக பிரிந்து விவாதம் நடை பெற்றது. விவாதங்களின் அடிப்படையில் அந்தந்தப் பிரிவு மக்களை பெருமளவில் உறுப்பினராக்க கவர்ந்திழுக்கும் முழக்கங்கள், குடியிருப்புப் பகுதி சந்திப்புகள், ரூபாய் 10/உறுப்பினர் சேர்ப்பு இயக்கம், முன்னணிகளை இனம் காண்பது, வேர்க்கால் மட்ட அமைப்பு களைக் கட்டுவது என்ற அடிப்படையில் வெகுமக்கள் அரசியல் பிரச்சார இயக்கத்துக்கான உத்திகளை அமைத்திட கூட்டம் முடிவு செய்தது.

மின்வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக ஏஐசிசிடியு மின்வாரிய சங்கம் இதில் காத்திரமான பங்காற்ற வேண்டியதன் அவசி யத்தையும் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை ஊழியர்கள் அதிமுக, திமுக என இரண்டு ஆட்சி களாலும் வஞ்சிக்கப்பட்டு வரும் நிலையில், தொழிலாளர்களின் அபிலாசைகளை பிரதிபலிக் கும் சங்கமாக ஏஐசிசிடியு பரிணமிக்க வேண்டும் என மாநில பொதுக்குழு உணர்ந்தது. எல்லா வகையிலும் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் டாஸ்மாக் விற்பனையாளர்களின் குரலாய் ஏஐசிசிடியு சங்கம் பல மாவட்டங்களி லும் பரந்து விரிந்துள்ளது. ஏஐசிசிடியு மாவட்ட அமைப்புகளோடு டாஸ் மாக் ஊழியர்கள் சங்கம் உறவை பலப்படுத்திட வேண்டும். நுகர் பொருள் வாணிபக் கழகத்தில் சுமைப்பணித் தொழிலாளர் களின் செல்வாக்கு மிக்க சங்கமாக ஏஐசிசிடியு சங்கம் உள்ளது.

நுகர்பொருள் வாணிபக் கழகத்திலும் டாஸ்மாக்கிலும் ஏஐசிசிடியு தனியாகவும் போராடும் இடதுசாரி சங்கங்களோடு இணைந்தும் இயக்கங்களை நடத்தி வருகிறோம். அமைப் பாக்கப்படாத தொழிலாளர்களின் கோரிக்கையாக குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூபாய் 26000, குடியிருப்பு, பணிப் பாதுகாப்பு, ஓய்வு காலத்தில் சமூக பாதுகாப்பு ஆகியவை முன்னெடுக்கும் முக்கிய கோரிக்கைகளாக இருக்கும்.

தமிழக தொழிலாளர்களின் நிலைமை கடும் தாக்குதலுக்கு உள்ளாகிறபோது, மாநில அரசாங்கம் 4 சட்டத் தொகுப்புகளுக்கு விதிகளை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது. ஒன்றிய மோடி அரசின் சட்டத் தொகுப்புகளுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற தொடர்ந்து மறுத்து வருகிறது. தொழிலாளர்களின்

உரிமைக்கு குரல் கொடுப்பது தான் உண்மையான சமூக நீதி என ஏஐசிசிடியு மாநிலக் குழு, திமுக அரசாங்கத்திற்கு சுட்டிக் காட்டுகிறது. திமுக அரசை அம்பலப்படுத்தி பிரச்சார இயக்கத்திலும் ஈடுபட முடிவு செய்துள்ளது.

தோல் மற்றும் தோல் பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள் மனம் போன போக்கில் ஆலைகளை மூடுவது, தொழிலாளர்களுக்கு சட்டப்படியான பணப் பயன்களை கூட தர மறுப்பதற்கு எதிராக போராட்டங்களை தொடர மாநிலக் குழு முடிவு செய்தது.

பீடி, விசைத்தறி, கட்டுமானம் ஆகியவற் றோடு தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், திட்டத் தொழிலாளர்கள், ஜிக் தொழிலாளர்கள் ஆகியோரை அணி திரட்டிட சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இகக(மாலெ) கட்சியின் அரசியல் ஏடான தீப்பொறி சந்தா சேகரிப்பில், நன்கொடை சேகரிப்பில் பொதுக்குழு உறுப்பினர்களும் ஈடுபட வேண்டும் என பொதுக்குழு வேண்டுகோள் விடுத்தது. கூட்டம்

ஆகஸ்ட் 15 இரண்டாம் நாள் அமர்வின் துவக்கமாக அரங்க வாயிலில் மூத்த தோழர் சுகுந்தன் தேசியக் கொடியை ஏற்றினார். அரசியலமைப்புச் சட்ட முகப்புரை வாசிக்கப் பட்டு அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மாநில பொதுச் செயலாளர் தோழர் ஞானதேசிகனின் தொகுப்புரைக்கு பிறகு மாநில அமைப்பு புனரமைப்பு செய்யப்பட்டது. புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:

மாநிலத் தலைவர்
தோழர் த.சங்கரபாண்டியன்

மாநில சிறப்புத் தலைவர்
தோழர் சொ.இரணியப்பன்

மாநில பொதுச் செயலாளர்
தோழர் க.ஞானதேசிகன்


மாநில துணைத்தலைவர்கள்
தோழர் ஜி.ரமேஷ்
தோழர் பால்ராஜ்
தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து

தோழர் பாலசுப்பிரமணியன்
தோழர் சுகுந்தன்

மாநிலச் செயலாளர்கள்
தோழர் கொ.கோவிந்தராஜ்
தோழர் திருநாவுக்கரசு
தோழர்வேல்முருகன்
தோழர் சுப்பிரமணி
தோழர் அதியமான்
தோழர் சுசிலா
தோழர் வெங்கடாசலம்

இறுதியாக ஏஐசிசிடியு அகில இந்திய தலைவர் தோழர் வீ.சங்கர் உரையாற்றினார். அவர் தனது உரையில் புதிய 4 சட்டத் தொகுப் புகள், தொழிலாளர் வர்க்கம், தொழிற்சங்க இயக்கத்தின் மீது நிகழ்த்த உள்ள தாக்குதல்கள் பற்றி விரிவாக குறிப்பிட்டார். மாநில விதிகளை உருவாக்குவதில் கேரள இடதுசாரி அரசாங்கமும் விதிவிலக்கல்ல என்றார். ஒன்றிய மோடி அரசு குறைந்தபட்ச ஊதியம் என்ற கருத்துக் கோப்பை கூட தரைமட்ட ஊதியம் கொடுத்தால் போதும் என்று சொல்லி ஒழித்துக் கட்ட பார்க்கிறது. புதிய சட்டத் தொகுப்புகள் ஆலைமூடலுக்கு சட்டபூர்வ அங்கீகாரமும் எதிர்த்த வேலை நிறுத்த போராட்டங்களை சட்ட விரோதமாகவும் சித்தரிக்கிறது. போராட்டத்தைக் கூட சட்ட விரோதம் என்று சொல்லி தலைமை தாங்கும் தொழிற்சங்க தலைவர்களுக்கு சிறை தண்டனை, அபராதம் மாத்திரம் அல்ல சங்கத்தின் பதிவும் ரத்து செய்யப்படும் என்கிறது. காண்ட்ராக்ட் சட்டத்தில் முதன்மை வேலை அளிப்பவருக்கு உள்ள பொறுப்பை நீக்குகிறது. ரயில்வே போன்ற துறைகளை விற்பது என்பது வெறும் தொழி லாளர் பிரச்சினை மாத்திரமல்ல, அது பொது மக்கள் பிரச்சனை. எளிய மக்களின் போக்கு வரத்துப் பிரச்சனை. கட்டண உயர்வு பிரச்சினை. சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரப் பிரச்சினையு மாகும்.

மாநில ஏஐசிசிடியு மேற்கொள்ளும் பரப்புரை இயக்கம், தனியார்மயத்துக்கு எதிராக, பணமாக்கல் திட்டத்திற்கு எதிராக, கௌரவமான கூலி, வேலை, சமூக பாதுகாப் பிற்காக, யுஏபிஏ போன்ற ஒடுக்குமுறை சட்டங்களுக்கு எதிராக இருக்க வேண்டும். 2023ல் சென்னையில் மிகப் பெரிய அணிதிரட்ட லுடன் மாநில ஏஐசிசிடியு போராட்டம் நடத்த வேண்டும் என வேண்டு கோள் விடுத்தார். திட்டமிட்டபடி உறுப்பினர் சேர்க்கை இலக்குகள், மாநாடுகள், அமைப்பு உருவாக்கம் ஆகியவற்றை உத்தரவாதம் செய்யுமாறு மாநிலக் குழுவை அவர் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தின் முடிவில் சிறப்பான ஏற்பாடுகளை செய்த தோல் மற்றும் தோல் பொருள்ஜனநாயக தொழிலாளர் சங்க ஊழியர்கள்கௌரவிக்கப்பட்டனர். மோடி அரசை வெளியேற்றுவோம்! அரசியலமைப்புச் சட்டத்தைபாதுகாப்போம்! முடிவுகளை அமல்படுத்துவோம்! ஏஐசிசிடியு ஜிந்தாபாத்! என்ற முழக்கங்களுடன் கூட்டம் நிறைவுற்றது.