புதுச்சேரி சட்டமன்றம் நோக்கி பெண்கள் பேரணி- ஆர்ப்பாட்டம்

உழைக்கும் பெண்களுக்கு கடன்களில் இருந்து விடுதலை வேண்டும்.

வாழ்வாதாரங்களுக்கு  நிரந்தர வேலை வேண்டும்.

அனைத்துத் தொழிலுக்கும் சட்ட கூலி ரூபாய் 26,000/- என நிர்ணயம் செய்ய வேண்டும்.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சுய உதவிக் குழுக்கள் கடன்கள், நுண்கடன் முழுமையாக தள்ளுபடி செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கூட்டுறவு வங்கியில் உள்ள குழுக் கடன்கள், நகைக் கடன்களை தங்கள் நல்வாழ்வு அரசு உடனடியாக அசல், வட்டி தள்ளுபடி செய்ய வேண்டும்.

நுண் கடன்களின் தரக்குறியீடு பற்றி அரசு பொதுவெளியில் விவரங்கள் வெளியிட உத்தரவு இட வேண்டும்.

கடன் வசூலின் போது பெண்களின் சுயமரியாதைக்கு பங்கம் ஏற்படுத்தும் நுண்கடன் நிறுவன அதிகாரிகள், ஊழியர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுத் துறைகள், சுய உதவிக் குழுக்கள் உற்பத்திப் பொருட்களை வாங்குவதற்கு அரசாணை வெளியிட வேண்டும். பொருள் உற்பத்தி பயிற்சி மையங்கள் ஏற்படுத்த வேண்டும்.

தொழில் மேலாண்மை, பொருள் விற்பனை பயிற்சி அளிக்க வேண்டும்.

ஆலைகளில் தொழில் நிறுவனங்களில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு 60%  இட ஒதுக்கீடு ஆணை வழங்க வேண்டும்.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில் 100 நாட்கள் முழுமையாக சட்ட கூலி உடன் வேலை வழங்கவேண்டும். நகர்புற வேலை உறுதிச் சட்டம் ஏற்படுத்த வேண்டும்.

ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி உள்ளிட்ட இதர அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து புதுச்சேரி மாநில அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் 21.09.2021 அன்று அண்ணா சாலையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு புதுச்சேரி சட்டமன்றம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக தலைவர் தோழர் மா.மல்லிகா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில்  பொதுச் செயலாளர்  தோழர் ஆர்.விஜயா, இந்திய தேசிய மாதர் சம்மேளன தலைவர் தோழர் .சரளா, அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பிரதேச செயலாளர் தோழர் .சத்யா, விசிக மகளிர் அணி மாநிலச் செயலாளர் லட்சுமி, இறைவி குழுமம் காயத்ரி ஸ்ரீகாந்த், குடிசை வாழ் பெருமன்றத்தின் தலைவர் வி.இந்திரா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி மகளிர் அணி சாயுரா பானு, சமூக நல்லிணக்க முன்னணி புதுச்சேரி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜமீல், ஹோப் லேடிஸ் அசோசியேஷன் பரத.உதயகுமார், உதவிக்கரங்கள் அலிஸ்தாமஸ், சரணாலயா மகளிர் சங்கம் கி.புஷ்பவள்ளி ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.