கள்ளக்குறிச்சியில் அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலையில் சட்டக் கூலியை முழுமையாக வழங்கிட வேண்டும். குடும்பத்தில் இருவருக் கும் வேலை வழங்கிட  வேண்டும்

அங்கன்வாடி கட்டிடத்தை பயன் பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்

பள்ளி மாணவர்களுக்கு குடிநீர் கிடைக்க வழி செய்திட வேண்டும்.

பள்ளி மாணவர்களுக்கு புதிய பள்ளிக் கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும்.

வீடு இல்லாதவர்களுக்கு வீடு, வீட்டு மனைப்பட்டா வழங்கிட வேண்டும்.

வாணாம்பட்டு ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் கட்டிக்கொடுக்க வேண்டும்

தெருக்களில் உள்ள சிமெண்ட் சாலை குண்டும் குழியுமாக இருப்பதை சீரமைப்பு செய்து சிமெண்ட் சாலை அமைத்து கொடுக்க வேண்டும்

கழிவுநீர் செல்ல தெருக்களின் இருபுறங்களிலும் கழிவுநீர் கால்வாய் அமைத்துக்கொடுக்க வேண்டும்

வாணாம்பட்டு காலனியில் உள்ள நீர்தேக்கத்தொட்டி பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது எனவே புதியதாக மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அதிக கொள்ளவுடன் அமைத்துக்கொடுக்க வேண்டும்.

நூலக கட்டிடம் பழுதடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளதை சீர்செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்

அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் சுடுகாட்டுப்பாதையை தார்சாலையாக மாற்றி கொடுக்க வேண்டும்

கிராம நிர்வாக அலுவலர் வேலை பார்க்கும் கிராமத்தில் தங்கி பணி செய்யவதை உறுதி செய்ய வேண்டும்.

உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 16, 2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், வானாம்பட்டு கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு சிபிஐஎம்எல் சார்பாக ஆர்ப்பாட்டம் பகுதிச் செயலாளர் தோழர் ஏழுமலை தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்

இந்நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் டி.கலியமூர்த்தி, ஆறுமுகம், எல்லப்பன், காமராஜ், கலாமணி, கந்தசாமி மற்றும் கிளை தோழர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்