சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

16.12.2021 அன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சனநாயக அங்காடிகள் சுமைதூக்குவோர் மற்றும் பொது தொழிலாளர் சங்கம் (ஏஐசிசிடியு-) சார்பாக திருப்பூர் டிஎன்சிஎஸ்சி மண்டல  மேலாளரின் தொழிலாளர் விரோத போக்கைக் கண்டித்து திருப்பூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜன் மற்றும் பாலசுப்பிரம ணியன், தாமோதரன், நாராயணன் செந்தில், செல்வராஜ், பழனிசாமி உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர். நெல்லையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏஐசிசிடியு மாவட்டப் பொதுச் செயலாளர் தோழர் கே.கணேசன் கலந்து கொண்டார்.