நையாண்டியும் சிரிப்பும் அடிப்படை உரிமை

தோழர் மதிவாணன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இகக(மாலெ) மதுரை மாவட்டச் செயலாளர் தோழர் சி.மதிவாணன் தன்னுடைய முகநூல் பதிவில் தன்னுடைய மகள் மற்றும் மருமகனுடன் சிறுமலை மலையில் எடுத்த புகைப்படங் களைப் போட்டுதுப்பாக்கிப் பயிற்சிக்காக சிறுமலை பயணம்என்று வேடிக்கையாக பதிவிட்டதற்கு மதுரை வாடிப்பட்டி போலீஸ் அவர் மீது, அரசுக் கெதிராக போர் தொடுக்கத் திட்டமிட்டதாகச் சொல்லி இந்திய தண்டனைச் சட்டம் 120பி, 122, 505(1)(பி) மற்றும் 507 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையிலடைக்க நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது வாடிப்பட்டி நீதித்துறை நடுவர் திரு. அருண் அவரை சிறையிலடைக்க மறுத்துவிட்டார். அதன்பின்னர் மதிவாணன் மீது போடப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த  Crl OP (MD) No.18337 of 2021 மற்றும் Crl MP(MD)No.10063 of 2021 வழக்கில் 17.12.2021 அன்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களால் எப்ஐஆர் தள்ளுபடி செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு குற்றத்தை நிறுவ நான்கு கட்டங்கள் உள்ளன. 1) எண்ணம் 2) தயாரிப்பு 3) முயற்சி 4) செய்து முடித்தல் ஆகியன இருக்க வேண்டும். இந்த வழக்கில் அவர் தன்னுடைய மகள் மற்றும் மருமகனுடன் போட்டோ எடுத்துப் போட்டுதுப்பாக்கிப் பயிற்சிக்காக சிறுமலை பயணம்என்று முகநூலில் தன் பதிவுக்குத் தலைப்பிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக வாடிப்பட்டி போலீஸ் இவர் மீது மேற்கண்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது கேலிக்கூத்தானது என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்

மேலும் தன்னுடைய தீர்ப்பில், இந்த நிலையில்அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியவர்கள் அடிப்படைக் கடமைகளில் சிரிக்கும் கடமைகளையும் சேர்த்திருப்பார்கள். புரட்சியாளர்கள் அவர்கள் நிஜப் புரட்சியாளர் களாக இருந்தாலும் சரி செல்பேசிப் புரட்சியாளர் களாக இருந்தாலும் சரி பொதுவாக அவர்களி டத்தில் நகைச்சுவை உணர்வு என்பது இருக்காது. ஒரு மாறுதலுக்காக மதிவாணன் வேடிக்கை பண்ண முயற்சித்தி ருக்கிறார். அதுவும் இது அவரின் முதல் முயற்சியாகும். வாடிப்பட்டி போலீஸ் இதை ஒரு வேடிக்கையாக ஜோக்காக எடுத்துக் கொள்ளவில்லை. மனுதாரர் அரசுக்கெதிராக போர் தொடுக்கத் தயாராகிறார் என்று நினைத்துவிட்டது. எதில் சிரிப்பு? அது ஒரு காத்திரமான கேள்வி. ஏனென்றால், வாரணாசி முதல் வாடிப்பட்டி வரை நாம் புனிதப் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக் கிறோம். அவற்றைப் பார்த்து வேடிக்கை செய்ய யாருக்கும் தைரியம் வராது. புனிதப் பசுக்களுக்கு ஒரே அட்டவணை கிடையாது. அது இடத்திற்கு இடம் மதத்திற்கு மதம் மாறுபடும். ஒரு பசு உணவின்றி மெலிந்து இருந்தாலும் யோகியின் ராஜ்யத்தில் அது புனிதமானது. குஷ்வந்த் சிங் பாடம் கற்றுக் கொண்ட தாகூர் மேற்கு வங்கத்தின் அடையாளச் சின்னம். என்னுடைய தமிழ் தேசத்தில், எக்காலத்திற்குமான பகுத்தறிவு பகலவன் பெரியார் .வே.ராமசாமி ஒரு அதிபுனிதப் பசு. இன்றைய கேரளாவில் மார்க்ஸ், லெனின் விமர்சனத்திற்கும் நக்கலுக்கும் அப்பாற்பட்டவர்கள். அதுபோல் மகாராஷ்டிரா வில் சத்திரபதி சிவாஜியும் வீர் சாவர்கரும் இதுபோன்று விமர்சனமும் நையாண்டியும் செய்யப்பட முடியாதவர் கள். ஆனால், ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான ஒரே புனிதப் பசு ஒன்று உள்ளது. அதுதேசப் பாதுகாப்புஎன்று குறிப்பிட்டுள்ள நீதிபதி, மனுதாரர் மதிவாணன் இகக(மாலெ) கட்சியின் முக்கிய மான நிர்வாகி என்றும் சிபிஐ(எம்எல்) இப்போது தேர்தல்களில் போட்டியிடும் வெளிப்படையாகச் செயல்படும் அமைப்பு என்றும் குறிப்பிட்டுள் ளார். அதுமட்டுமின்றி, காகிதப் போராளிகள் தங்களை சுதேசி சே குவாராக்கள் என்று கற்பனை செய்து கொள்வதற்கு உரிமையுள்ளது என்று நையாண்டியும் செய்துள்ளார்

கடந்த சில தினங்களுக்கு முன் சங்கி யுடியுப் போராளி மாரிதாஸின் மீது போடப்பட்ட வழக்கை மூன்றே நாளில் தள்ளுபடி செய்தது இதே நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்தான் என்பதும் குறிப்பிடத்தக்கதும் கவனத்தில் கொள்ளத்தக்கது மாகும். இந்தத் தீர்ப்பு காவல் துறைக்கு கொடுக்கப்பட்ட சம்மடி அடியாகும்.   - ரமேஷ் கணபதி