மோசடி நிதி நிறுவனத்திற்கு எதிராக....

திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டி ரோட்டில் இயங்கி வரும் ஐஐஎப்எல் கோல்டு பைனான்ஸ் நிறுவனம் பொதுமக்கள் மற்றும் நடுத்தர ஏழை விவசாயிகளிடம் நகைகளை அடமானம் என்ற பெயரில் வாங்கி மோசடி செய்து வருகிறது. ஐஐஎப்எல் பைனான்ஸ் நிறுவனம். பாதிக்கபட்டோர் சென்று கேட்டால், எந்த ஒரு முன்அறிவிப்பு இன்றி நகை ஏலம் போய்விட்டதாக நிர்வாகம் சார்பாக தகவல் தெரிவிக்கின்றனர். மேற்படி பைனான்ஸ் நிர்வாகத்தின் மோசடிகளைக் கண்டித்து சிபிஐஎம்எல் சார்பாக 20.12.2021 அன்று மணப்பாறை கோவில்பட்டி சாலையில் ஐஐஎப்எல் கோல்டு பைனான்ஸ் நிர்வாகத்தின் அலுவலகம் முன்பு சிபிஐஎம்எல் நகரச் செயலாளர் பி.பாலு தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் வட்டச் செயலாளர் வழக்கறிஞர் வி.சக்திவேல் சிறப்புரை ஆற்றினார். இந்த போராட்டத்தில் மணவை ஒன்றிய செயலாளர் ஆவா.இளையராஜா மற்றும் தோழர்கள் அருள்குணசேவியர், இளையராஜா, தங்கராஜ், தனலட்சுமி மற்றும் மேற்படி நிறுவனத்தால் பாதிக்கபட்டவர்களும் கலந்து கொண்டனர். காவல் ஆய்வாளர் கருணாகரன்  ஒரு வாரத்தில் உரிய முடிவு எடுப்பதாக கூறியதை அடுத்து போராட்டம் தற்காலிகமாகக் கைவிடபட்டது.